ஆரோக்கிய உணவு (Healthy food)

ஆரோக்கிய உணவு

உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை "ஆரோக்கிய உணவு".

ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான். கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவைதான் ஆரோக்கிய உணவு?

நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்;

1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
3. அளவோடு உண்பது

என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும். ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம்.

உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டினை (Body Mass Index) பயன்படுத்துங்கள்.

உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும்.

உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.

உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றின தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.

ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகின்றது என்பதனைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தினை அமைத்துக் கொள்ளலாம். கலோரிகள் குறித்த பக்கத்தில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. கலோரி கணிப்பானைக் (Calorie Calculator) கொண்டும் தங்களுக்கு தேவையான கலோரிகளின் உத்தேச அளவினைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இத்தனை விசயங்களைத் தெரிந்து கொண்டுதான் சமைக்க வேண்டுமா? உண்ணவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அவசியம் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும். காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரே மாதிரியான உணவிற்கு உடலை பழக்கப்படுத்தி கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அது பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருப்பது இல்லை. இந்த நிலையில் நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம் ஆகின்றது. இதனை தெரிந்து கொள்வதினால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. இதனைத் தெரிந்து கொள்ள நாம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அடிப்படை விசயங்களை அத்யாவசிய அறிவாய் மாற்றிக்கொள்ளுங்கள்.

Comments

mattan Britain spaciol

Eat diet food. Do cycling or walking at least one hour a day. Think good. Be happy always.

friends i want one a need help

Weight lossku apple cider vinegar use பண்ணலாம்னு படித்தேன். அதில் நிறைய உள்ளது.food preparation vinegarஐ use பண்ணலாமா? தெரிந்தால் கூறவும்.

அனைத்து வினாகிரிகளுமே //food preparation vinegar// தானே! வேறு வேலைகளுக்குப் பயன்பட்டாலும் அடிப்படையில் எல்லாமே சமையலுக்கானவைதான்.

‍- இமா க்றிஸ்

Weight lossku use panalama

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டேன். என்னைக் கேட்டால்... இப்படி எடை குறைப்பதை விட மாப்பொருளைக் குறைத்து, கொழுப்பு உணவைக் குறைத்து, உடற்பயிற்சியைக் கூட்டி... அப்படி ஏதாவது முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பேன்.

நீங்க வினாகிரியை எப்படி எடுக்கப் போறீங்க என்பது தெரியவில்லை. ஒரு நாள் ஒரு வேளையோடு நிறுத்துவீர்கள் என்பது இல்லையல்லவா? கொஞ்ச நாள் தொடர்ந்து எடுப்பீங்க. வேண்டாத அமிலம்... அல்சர் வரலாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா.

Preganency timela எடை அதிகரித்தது. எடைக் குறைப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறேன். கொள்ளு,முளைகட்டிய பயறு சேர்த்துக் கொள்ள முடிவு செய்து இருக்கிறேன்

Nan 8 madha karbini nan ena sapdanu,sapdakudathu.

என௧்௧
வெளி மூலம் இரு௧்௧து, இயற்௧ை மருந்து சொல்லுங்களேன்

frnds யாராவது சீதபழத்தை எப்படி பழுகவைப்பது என்று சொல்லுங்கள்.....

superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

en husband ku vikkal
nikkama vanthukitte irukku athu enna panna nikkum pa
pls sollunga

nan suger atheegamaga sapeedu kinran
enna ku udal idai kuraya villai
annai oats & milk & suger serthuthan sapeedukiran
itharku therrvu
udal idai kuraium valeekal
ennaku 2 week il oru famson onru
agayal enna avasara theervu onrai tharrungal

//nan suger atheegamaga sapeedu kinran enna ku udal idai kuraya villai// :-) இது என்ன விதமான ஸ்டேட்மண்ட்! யாராவது சீனி அதிகமாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று அட்வைஸ் பண்ணினார்களா? :-)

//annai oats & milk & suger serthuthan sapeedukiran// :-) அன்னை ஓட்ஸ்!! அன்னை!! ப்ராண்டா!
சீனி இல்லாமல் ஓட்ஸ் + பால் சாப்பிடலாம். பால் - கொழுப்புக் குறைந்த பால் சேருங்கள். ஓட்ஸ் அளவையும் சற்றுக் குறையுங்கள்.

//itharku therrvu// & //udal idai kuraium valeekal// ;))) உங்களுக்கே தெரியும். கேட்கவே வேண்டாம்.

சீனியை அடியோடு விட்டாலும் எடை குறையாது. ;( கூடாமல் அப்படியே வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். குறைவதற்கு... சீனியை முற்றாக விட வேண்டும். எடுக்கும் சாதத்தின் அளவைக் குறையுங்கள். இரவு உணவின் அளவைக் குறைப்பதும் நேரத்திற்கே உண்பதும் நல்லது. நிறைய உடலை வருத்தும் வேலைகள் செய்ய வேண்டும். டீவீ, கம்ப்யூட்டர், மோபைல், புத்தகம் படித்தல் போன்ற ஓரிடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகளை நிறுத்த இயலாவிட்டாலும் குறைக்கப் பாருங்கள். நடவுங்கள்.

//2 week il oru famson onru// எடை... நிச்சயம் குறைக்க மாட்டீர்கள். மெலிய வேண்டுமா? இதைப் பற்றி நினைக்காமல் உங்கள் தோற்றத்துக்கு ஏற்ற ஆடை ஆபரணங்களைத் தெரிந்து அணிந்து கொள்ளுங்கள். ஃபங்ஷன் சமயம் இதைப் பற்றி நினைக்காமலிருந்தாலே சந்தோஷமாகப் பொழுது கழியும்.

முடிந்தால் மேலிவதற்கான முயற்சிகளை ஆரம்பியுங்கள். இன்னொரு ஃபங்ஷன் வருவதற்குள் மெலிந்திருப்பீர்கள்.

எப்பொழுதும் உங்கள் உயரத்திற்கேற்ற எடை இருப்பதுதான் நல்லது. அதற்கு மேல் குறைக்க நினைக்க வேண்டாம். //avasara theervu onrai tharrungal// ;( எதையாவது செய்து உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். இன்னொன்று... சட்டென்று எடை குறையும் போது தோலில் நிரந்தரமான சுருக்க அடையாளங்கள் வரலாம். மெதுவே ஒரு சீராகக் குறைய வைப்பது தான் நல்லது.

‍- இமா க்றிஸ்

im doing research in organic food and to develop traditional food among college students,now a days youth especially college students have bad food attitude. they eat for only tasty they not consider whether food is healthy or not. they prefer only junk food. hence i would like to change their food attitude through awareness programme also.

சகோதரிகளுக்கு எனது வணக்கம்.
நான் செய்து கொண்டுள்ள பிராண சிகிச்சை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். திருமூலர் பிராண சிகிச்சை மையம் என்ற எனது பேஸ்புக் முகப்பை காணவும். நன்றி.

Do or die

hi madam, u drink cabbage 100g+w50ml water = cabbage 50 ml juice in early morning with empty stomuch.

Kondakalai sapdalamma

கொண்டைக்கடலை நல்ல உணவுதானே? புரதம் இருக்கிறது. சாப்பிடலாம்.

நீங்கள் எதற்காகக் கேட்கிறீர்கள் என்று சொன்னால், அதற்கு ஏற்றபடி பதிலை மாற்றிச் சொல்லலாம். பொதுவாகக் கேட்கிறீர்கள் என்றால், சாப்பிடலாம் என்பேன்.

‍- இமா க்றிஸ்

hi frnds enanku marriage aagi baby form aagalanu dr kita ponom dr scan and test panna sonaga rendu perayum.avuruku nill count vanthu eruku enaku manasu romba kastama aayiduchi ennala veetla yarkitayum solla mudila athanala than unga kita slra.enakaga nalla aalaosanai solunga .etha pathi therinja

hi frnds enanku marriage aagi baby form aagalanu dr kita ponom dr scan and test panna sonaga rendu perayum.avuruku nill count vanthu eruku enaku manasu romba kastama aayiduchi ennala veetla yarkitayum solla mudila athanala than unga kita slra.enakaga nalla aalaosanai solunga .etha pathi therinja.PLSE SOLUNGA