கனவு

விடிகாலையில் கண்ட கனவு பலிக்குமா?
தோழிகளே ,எனக்கு இன்னைக்கு விடிகாலம் 5:30 மணிக்கு ஒருகனவு கண்டேன்.ரொம்பபப..... கெட்ட கனவு.யாரும் பயந்திடாதிங்க.இதுக்கெல்லாமா இழை ஓப்பன் பன்னுவிங்கன்னு என்னை திட்டாதிங்க.எனக்கு எங்க கேக்கன்னு தெரியலை.கனவு என்னன்னா,என் அம்மா இறந்து போய்விட்டார்களாம்.எல்லாரும் ஒரே அழுகை.இது தான் அந்த கனவு.இந்த கனவு வந்ந்ததிலிருந்து எனக்கு இருந்த தூக்கமும் போய்விட்டது. கனவு வந்த நேரம் விடிகாலை5:30..எனக்கு எப்படி அவ்வளவு துல்லியமா டைம் தெரியும்முன்னா,என் கணவர் ஆபிஸ் விட்டுவீட்டுக்கு வந்து தூங்க வந்தார்.அந்த நேரம் இந்த கனவு+பெட் அசைவு என் கனவை கலைத்து விட்டது.அதனால் எனக்கு டைம் தெரியும்.விடிகாலை கண்ட கனவு பலிக்குமா?எனக்கு ரொம்ப பயமா இருக்கு.அம்மாவிடமும் கேக்க முடியாது.அதான் உங்க கிட்ட ஓடி வந்தேன்.மனசே சரியில்லை.யாராவது பதில் சொல்லுங்க தோழிகளே.நான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம்?யாராவது சொல்லுங்களேன்.

@ கார்த்திகா... இங்க குணா போட்ட கும்கி விமர்சனம் படிச்சுட்டு தூங்கினீங்களா? ஹ்ம்! அதான். படம் பார்த்துட்டே தூங்கினீங்களோ!! ;)

;)) என்னை ஒருநாள் புலி துரத்தோ துரத்து என்று துரத்திச்சே! அது 4 கால் புலி ஆனா 2 கால்ல துரத்திச்சு. ஓடி, ஓடி வேர்த்துப் போய்ட்டேன். அது என்னை ஒரு ஜூ கூண்டுல குட்டீஸுக்கு டின்னரா அடைச்சு வைச்சுது. ;D

பெருசா யோசிக்க வேணாம். இரவில் வெறு வயிறாகப் படுத்தால் அல்லது அதிகம் சாப்பிட்டால் கனவு வருது எனக்கு. இன்னமும் கெமிஸ்ட்ரி எக்ஸாம் பேப்பர்லாம் வருதே! இதுக்கெல்லாம் அர்த்தம் யோசிக்கப்படாது.

@ மனோரஞ்சிதா... //நான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம்?யாராவது சொல்லுங்களேன்.// ம்... அம்மாவுக்கு அழகா ஒரு சேலை வாங்கிக் கொடுங்க. கூட்டிட்டு ஒரு ஹாலிடே போங்க. அவங்க கூட 2 நாள் ஜாலியா ஸ்பெண்ட் பண்ணுங்க. அதான் அர்த்தம். :D

‍- இமா க்றிஸ்

நான் எங்க அப்பா இறப்பது போல கனவு கண்டேன். நேரம் 4:50 இருக்கும்.

இதைப் பற்றி பெரிதாக யோசிக்க வேண்டாம். எதுவும் ஆகாது. நானும் கண்டிருக்கிறேன், 35 வருடங்களுக்கு முன். அப்பாவுக்கு இப்போது 88 வயது. ஜிம்முக்குப் போய் ஜம்மென்று இருக்கிறார். சிந்தனை கூட வெகு நன்றாக இருக்கிறது. பார்க்க எழுபதுகளின் பிற்பகுதி வயதுக்கு மேல் மதிக்க முடியாது. கனவுகள் வரப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றால் அடுத்து நடக்கப் போகும் காரியங்களைச் சொல்ல முடியாது. நாமும் ஒரு நாள் இறக்கத் தானே போகிறோம். அது போல் அப்பாவும் ஒரு நாள் இறந்தேதான் ஆக வேண்டும். யோசிக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்