heart beat

ஹாய் சிஸ்டர்ஸ்,
எனக்கு 6வது மாதத்தில் ஸ்கேன் பண்ண‌ போது ஹார்ட் பீட் 149 இருந்தது. இப்போ 8வது ஆரம்பம். ஸ்கேன் பண்ண‌ போது ஹார்ட் பீட் 137. எனக்கு என்ன‌ குழந்தையா இருக்கும். வயிறும் ரொம்ப‌ சின்னதா இருக்கு. நிறைய‌ பேர் மாத்தி மாத்தி சொல்றாங்க‌. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கள் சிஸ்டர்ஸ். ரொம்ப‌ ஆர்வமா இருக்கு.

இன்று scan எடுத்தோம். எனக்கு 35 w 5d complete... இதில் குழந்தையின் இதய துடிப்பு 119 என்று உள்ளது. இது நார்மல் தானா?? எனக்கு tension ஆக உள்ளது.. யாருக்காவது இப்படி இருந்து இருக்க இது நார்மல் தானா??

I love my parents...

//இது நார்மல் தானா?// அல்லாவிட்டால் எதுவும் சொல்லாமல் மருத்துவர் உங்களை வீட்டிற்கு அனுப்பியிருக்க மாட்டார்.
//tension// இருக்கத் தான் செய்யும் இப்போது.

முடிந்த வரை அமைதியாக இருக்கப் பாருங்கள். தூக்கம் போதாமல் கஷ்டப்படப் போகிறீர்கள்.

‍- இமா க்றிஸ்

மருத்துவர் உங்களை வீட்டிற்கு அனுப்பியிருக்க மாட்டார்/// ஆமாம் அம்மா. குழந்தை நன்றாக இருக்கிறது என்கிறே கூறினார்கள்..

அறுசுவையில் உள்ள இழையில் fhr 120 கீழ் இருந்தால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படும் என்று படித்தேன் அதான் பயந்துவிட்டேன்..
மூச்சு திணறல் ஏற்பட்டால் எப்படி கண்டுபிடிப்பது??

I love my parents...

//அறுசுவையில் உள்ள இழையில்// குழந்தை பிறக்கும் வரை அறுசுவைக்கு வரவேண்டாம். :-) வேறு பொழுதுபோக்குகள் எதாவது இருக்கும் இல்லையா?

//மூச்சு திணறல் ஏற்பட்டால் எப்படி கண்டுபிடிப்பது?// :-) இமா மருத்துவர் இல்லை. ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். பெரும்பாலும் மருத்துவம் இல்லாத அறிவுரைகள்தான் எழுதுவேன்.

உங்கள் உடல் நன்றாக இருக்கிறதானால் உள்ளே குழந்தையும் நன்றாக இருக்கிறது என்று பொருள். குழந்தைக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால் உங்களுக்கு வித்தியாசம் ஏதாவது தெரியும்.

மனதை அமைதியாக வைத்திருங்கள். அறுசுவைக்கு ஒரு குட்டி விடுமுறை கொடுங்கள்.

‍- இமா க்றிஸ்

உங்கள் உடல் நன்றாக இருக்கிறதானால் உள்ளே குழந்தையும் நன்றாக இருக்கிறது என்று பொருள். குழந்தைக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால் உங்களுக்கு வித்தியாசம் ஏதாவது தெரியும்./// hmm saringa ammaa...

ஒரு குட்டி விடுமுறை கொடுங்கள்.
// hmmm kandipaga ....
thanks amma reply pannathirku

I love my parents...

இன்று hospital ku சென்றேன்..
அன்று dr இதய துடிப்பு கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். இன்று பார்த்து 120 -கு மேல் தான் இதய துடிப்பு இருக்க வேண்டும்( 120 மேல் தான் நார்மல்) எனவும் கூறினார்கள் ...
உடனே எனக்கு NST ( nonstress test). எடுத்து பார்த்தார்கள்.. அதில் குழந்தையின் இதய துடிப்பு நார்மலாக இருந்தது... பயம் வேண்டாம் வீட்டிற்கு போகலாம் என்றார்கள்....

இதை நான் சொல்ல காரணம் என்னைப்போல் குழம்ப(பயம்) வேண்டாம் என்றும் பின்னாலில் யா௫க்காவது உதவும் என்ற நோக்கத்தில் கூறினேன்.... நன்றி

I love my parents...

மேலும் சில பதிவுகள்