Vellai paduthal

Hi frnds one doubt enaku baby poranthu 3 month
Mudiya pothu, ovulation time la contact la iruntha
Conceive aguvanga nu kelvipatan, but nanga contact
Vachathuku apram than ovulation arambicha Thu,
Apram vaikala, therinchathum, but enaku continues
Ah gel Mari vellai pathu,pona time conceive agum
Continues ah 12 days ku gel Mari vellai patathu,
IPO en bayam thirumba conceive agiduvananu
Intha Mari problem yarukavathu irunthuruka
Friends

Congrats jaisri

Vaalthukal pa.

Congrats sis..

எனக்கு ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை உள்ளான்.மழை பெய்து கொண்டே இருக்கிறது.பயமாக இருக்கிறது..அவன எப்டி பாத்துக்கப் போறோம்னு நினைச்சாலோ பயமா இருக்கு

Jaisripriya

மழையைப் பற்றிப் பயப்பட‌ வேண்டாம். அது குழந்தையை எந்த‌ விதத்திலும் பாதிக்கப் போவ‌து கிடையாது. நீங்கள் அமைதியாக‌ இருக்க‌ வேண்டும்; பயப்படாமல் தைரியமாக‌ இருக்க‌ வேண்டும். தனியே இருக்கிறீர்கள். மனம் தளராமல் தைரியமாக‌ இருந்தால்தானே எல்லாவற்றுக்கும் முகம் கொடுக்க‌ முடியும்! பெரிதாக‌ யோசிக்கக் கூடாது.

//என் அம்மாக்கு அவ்வளவா குழந்தை பாத்துக்கிறது பத்தி தெரியாது.// உங்களை வளர்த்திருக்கிறார்கள். அந்த‌ அனுபவம் போதும். எல்லோருக்குமே ஒன்று மிஞ்சிப் போனால் இரண்டு குழந்தைகள் பெற்ற‌ அனுபவம்தான் இருக்கும். அம்மாவிடம் கிடைக்கும் யோசனைகளே போதும். அம்மா உடம்பு முடியாமல் இருக்கிறதாக‌ சொன்னீங்க‌. நினைவு இருக்கு. அவங்களைப் பத்திரமா பார்த்துக்கங்க‌.

//எனக்கு ஏதோ நான் அனாத மாதிரி தோனுது.யாரு உதவியும் இல்ல.// இப்படியெல்லாம் நினைக்கப்படாது. இன்று பெரும்பாலான‌ பெண்கள் தனித்து குழந்தையைப் பராமரிக்கும் நிலையில் தான் இருக்கிறார்கள் கண்ணா. பயப்படாதீங்க‌. எல்லாம் சரியாக‌ இருக்கும். நீங்க‌ ஒழுங்கா சாப்பிடுங்க‌. மழைல‌ நனையாதீங்க‌. உங்க‌ உடம்பு நல்லா ஆரோக்கியமா இருந்தால்தானே மீதி இருவரையும் கவனிக்கலாம்.

//பாலை எடுத்து எடுத்து விடுவேன் தினமும்.// கொஞ்சம் கொஞ்சமாக‌ சின்னவர் அருந்தும் பாலின் அளவு கூடும். //பால் கட்டுறத எப்டி தடுக்குறது.//
இங்க‌ சில‌ இழைகள் இருக்கு. எடுத்துக் கொடுக்க‌ நேரம் போதவில்லை. தேடிப் படிச்சுப் பார்க்கிறீங்களா? நிச்சயம் உபயோகமான‌ குறிப்புகள் இருக்கும்.

//மஞ்சளா திக்கா மோஷன் போறான்.இது Normal aa// ஆம், யோசிக்க‌ வேணாம்.

//பால் குடிச்சு முடிச்சதும் விக்கல் வருது.// குடிச்சு முடிஞ்சதும் தோள்ள‌ சாத்தி வைச்சு மெதுவா முதுகுல‌ தட்டிக் கொடுங்க‌. ஏப்பம் வந்த‌ பின்னால் கீழே போடலாம். விக்கல் பற்றி எதுவும் சொல்லத் தெரியவில்லை. //தாய்ப்பால் திரும்பவும் கொடுத்தா தான் நிக்குது.// பிறகு என்ன‌! சுலபமான‌ விஷயம். ஈஸிதானே! //ஆனா குடுக்ககூடாது பொறையேறிக்கிறும் என் சித்தி Pheல சொன்னாங்க.// இது வரை அப்படி ஆகவில்லை என்றால் இனியும் ஆகாது. பயப்படாதீங்க‌.

//என் மனசு இருக்க நிலமைக்கு நான் சாப்ட்றதே இல்ல.// கட்டாயம் சாப்பிட்டாகணும் கண்ணா. உங்களுக்கு முடியாமப் போய்ட்டா அவங்களை யார் பார்ப்பாங்க‌!

//இப்டி மழை பெய்து அவன நான் எப்டீ Safety பன்றது.// ஒண்ணுமே பண்ணத் தேவையில்லை. குழந்தைக்கு எந்தப் பிரச்சினையும் வராது. யோசிக்காதீங்க‌.

‍- இமா க்றிஸ்

அக்கா எனக்கு பதில் கூறுங்கள் plss

;) கேள்வியை வைத்த இடத்தில்தானே பதில் கொடுக்க முடியும்!!

உங்கள் அவசரம் புரிகிறது. ஆனால் நேரம் எடுத்து இங்கு வந்து பார்த்து... ஏமாந்து போனேன் நான். பதில் சொல்பவர்களும் பாவம் இல்லையா!! ;)

‍- இமா க்றிஸ்

அக்கா எனக்கு 10 மாத குழந்தை உள்ளது. எனக்கு இப்போது பெண் மற்றும் ஈறு தொல்லை அதிகமாகி விட்டது. பேன் மருந்துகள் போட்டும். பேன் போக வில்லை. எந்த பெண்ணும் சாக வில்லை. என் குழந்தைக்கும் பேன் வந்து விட்டது. அவள் எப்போதும் தலையை சொரிந்து கொண்டே இருக்கிறாள். என்ன செய்வது என்று தெரிய வில்லை. உங்களுக்கு தெரிந்தவற்றை சொல்லி என் பிரச்சினையை தீர்த்து வைக்கவும்

உங்களுக்கு உதவலாம் என்று தேடினால்.... 'பேன் கேக்', 'பனானா பேன் கேக்' என்று சமையல் குறிப்புகளாக வருகிறது. ;))

பின்வரும் இழைகள் உங்களுக்கு உதவலாம். படித்துப் பாருங்கள்.
ஈறு தொல்லை - www.arusuvai.com/tamil/node/33731 (இது உண்மையில் 'ஈறு' தொடர்பான இழை அல்ல; பேன் / பேன் முட்டை பற்றியது தான். என்னை நம்பிப் படிக்கலாம்.
பேன் தொல்லை - www.arusuvai.com/tamil/node/29431
பேன் மற்றும் பொடுகு தொல்லை - www.arusuvai.com/tamil/node/14174
3 வயது - பேன் தொல்லை - www.arusuvai.com/tamil/node/14507
பேன் தொல்லையும் முடியில் சிக்கும் - www.arusuvai.com/tamil/node/19881

//எந்த பெண்ணும் சாக வில்லை.// சூப்பர், இது நல்ல விஷயம்.
//பெண் மற்றும் ஈறு தொல்லை அதிகமாகி விட்டது.// குழந்தைகளை ஒரு நாளும் தொல்லை என்று நினைக்கப்படாது. ;) 'ஈறு' பிரச்சினைக்கு டென்டிஸ்டிடம் தான் போக வேண்டும். ;) [என்னைச் சிரிக்க வைத்ததால், தமிழ் செத்துப் போவதைப் பொறுத்துக் கொள்வேன். ;))) ]

முக்கியமானக் கவனிக்க வேண்டிய விடயம்... நீங்கள் இருவரும் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள மற்றவர்களும் தலைக்கு மருந்து வைத்துக் கொள்வது - அதுவும் ஒரே நாளில் வைப்பது அவசியம். அதே நாளில் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துவாலைகள் சீப்புகள் அனைத்தையும் கழுவிப் போடுங்கள். அன்றும் முந்தைய நாட்களிலும் அணிந்த ஆடைகளைக் கழுவுங்கள். தலையணை, மெத்தை, பாய்களை வெயிலில் போட்டு எடுக்க முடிந்தால் நல்லது.

மருந்து வாங்கும் போது - ஈர்களைக் கொல்லக் கூடிய மருந்துதானா என்று பார்த்து வாங்குங்கள். மருந்துச் சீசாவில் சொல்லி இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். முடி ஈரமாக இருக்கும் போது நெருக்கமான பல்லுகள் கொண்ட (மெட்டல்) சீப்பினால் இழுத்தால் தலையில் இருக்கும் மீதிப் பேன்களில் சிலது வரும். மருந்துச் சீசாவில் சொல்லி இருக்கும் காலம் கடந்த பின் மீண்டும் மருந்து வையுங்கள். அடம் பிடித்து ஒட்டிக் கொண்டு இருக்கும் ஈர்களைக் கையினால் நீக்க வேண்டும். ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் பயன்படுத்தினால் முடியில் உள்ள ஈர்கள் வெப்பத்திற்கு இறந்து போகும். காதின் பின்னும் தோலோடும் ஒட்டி உள்ள இடங்களில் உள்ளவற்றைக் கையினால் தான் பிடித்து நீக்க வேண்டும். அங்கெல்லாம் ஸ்ட்ரெய்ட்னர் பயன்படுத்தி சுட்டுக் கொள்ள வேண்டாம்.

மருந்துக்கு ஈர் இறந்தாலும் கூட கோதுகளைக் கையினால் தான் நீக்க வேண்டி இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி சீப்பு, துவாலைகள் இருக்க வேண்டும். அவற்றை அருகருகே வைக்க வேண்டாம். குழந்தையின் நகங்கள் சீராக வெட்டி இராவிட்டால் தலையைக் காயப்படுத்திக் கொள்ளுவார், பத்திரம்.

ஊப்ஸ்!! உங்க கேள்விக்குப் பதில் சொன்னதில், என் தலையில் பேன் ஊருவது போல இருக்கே!! ;))

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்