காரப்பொடி மிளகு குழம்பு or சூப் (பிள்ளை பெற்றவர்களுக்கு)

தேதி: January 4, 2008

பரிமாறும் அளவு: 1 person or 2 kids

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரப்பொடி மீன் - ஆறு
வேக வைக்க:
வெங்காயம் - ஒன்று
தக்காளி - அரை
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தனியா துள் - அரை தேகரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
இஞ்சி பூண்டு - கால் தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
நெய் - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பூண்டு - நான்கு பல் (தட்டிக்கொள்ளவும்)
வெங்காயம் - கால் பாகம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு


 

காரப்பொடி மீனை சுத்தம் செய்து கொள்ளவும். அதில் வேகவைக்க வேண்டியவைகளை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் பத்து நிமிடம் வேக விடவும். மூடி போட்டால் பொங்கும் லேசாக மூடி வைக்கவும்.
பத்து நிமிடம் கழித்து தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து குழம்பில் கொட்டவும்.
காரப்பொடி மிளகு குழம்பு (சூப்) தயார்.


இது பிள்ளை பெற்றவர்களுக்கு கொடுத்தால் பால் நல்ல சுரக்கும். குழந்தைகளுக்கு கொடுத்தால் சளிக்கு நல்லது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது வடிகட்டி அந்த சாறை சாதத்தில் பிசைந்து கொடுக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கார ப்பொடி எ வ்லோ மசாலாபோ ட்டே ன்னு ஒருநபரு கு

Jaleelakamal

எட்டிப் பார்த்திருக்கீங்க. :-) நீங்க எடிட் பண்ணி கமண்ட் என்னன்னு புரியாம மூளையைக் கசக்கிட்டு இருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

ஜலீலாக்கா உங்க குறிப்பெல்லாம் சூப்பர்..குழந்தைகளுக்கு உங்க ஊரில் கொடுக்கும் குறிப்புகளை எல்லாம் அள்ளி வீசுங்கள்