மன்னிப்பு கடிதம் அம்மாவுக்கு - அமுத நிலா

மன்னிப்புக் கடிதம் அம்மாவுக்கு - அமுத நிலா

அன்புள்ள அம்மா...
எழுதுவது உன் மகன்..
உன் மனம் நோக
நான் செய்த திருமணமும்...
உன் விழி கலங்க உன்னை விட்டு
வந்த நாட்களையும்....
நினைத்து பார்க்கையில்
என் இதயத்தை
ஒவ்வொரு முறையும் தூக்கிலிடுகிறேன்..
அழகான குடும்பமும்.. அமைதியான வாழ்வும்..
அளவான செல்வமும்.. அத்தனையும் இருந்தாலும்
அனாதையாய் நிற்கிறேன்..
அம்மா உன் அன்பு இல்லாமல்....
பெண் குழந்தை பிறந்தது என
செவிலியரால் சேதி அறிய ...
பிஞ்சு கை என் விரல்
பற்றுகையில்தான் உணர்ந்தேன்
நான் தொலைத்த உன் அன்பை...
காதலின் சம்மதத்திற்காக நான் சாப்பிடாமல்,
உன் வயிரை பட்டினி போட்டு
காணாமல் போயிருக்கிறேன்..
இன்று...
உன் விரல் நுனிச் சோறும்..
நீ வீசும் கை விசிறி காற்றும்..
உன் மடித் தூக்கமும்..
உன் முந்தானை வாசமும்..
எட்டாத தூரத்தில்...
எட்டாமலேயே போனது....
என் பிஞ்சு குழந்தை பிரம்பால் அடிக்கையில்
விளையாட்டாய் அம்மா என அலற...
குழந்தை சிரிப்பில் என் குமுறல் மறைத்தாலும்
ஒரு நொடி உச்சரிப்பு.. ஓரமாய் நெகிழ்ந்தது..
என் குழந்தைக்கு உன் முத்தமும் ...
உன் பாதம் தொட எனக்கு ஒரு தருணமும் ....
நீ சூடும் பூக்கள் உன் மருமகளுக்குமாய்..
கற்பனையாய் எனது காலம் கடந்து
நாட்கள் நகருது..
ஒரு வேளை உன்னை பிரியாமல் இருந்திருந்தால்
இத்தனை முறை நினைத்திருப்பேனா
எனத் தெரியவில்லை...
இப்போது எத்தனை முறை நினைத்து விழித்தாலும்
உன் பிம்பம் என் முன் இல்லை..
கண்ணீர் மட்டும் தான் என்னோடு..
நீ இல்லாத வாழ்வு துயரம் தான் எனக்கு ..
மன்னிப்போடு சமர்ப்பிக்கிறேன்.
இந்த கடிதத்தை உனக்கு..
என் வீட்டு பூஜை அறைப் பூக்கள்
உன் விரலுக்காக வாடுது.. ஆம்...
நானும் தான்..
பூக்கள் நீ தொடுப்பதற்காக..
நாங்கள் உன் தொடர்புக்காக...

- அமுதநிலா

Comments

Arumaiyana varikal..amutha nila.super.

Be simple be sample

ரொம்ப ரொம்ப அருமையான வரிகள், வாழ்த்துக்கள்ங்க..

நட்புடன்
குணா

ரொம்ப அருமையா எழுதி இருக்கிறீங்க அமுதநிலா.

‍- இமா க்றிஸ்

ரொம்ப ரொம்ப அருமையான வரிகள் அமுதநிலா.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

மிகவும் அருமை அமுதநிலா... கலக்கிட்டீங்க!!! வாழ்த்துக்கள்:)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

அருமையான வரிகள்

நன்றி ரேவதி... உங்க கவிதையும் அனுப்புங்க படிக்கணும்....

அமுத நிலா

நன்றி சங்கரி...

அமுத நிலா

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சுதா....

அமுத நிலா

ரொம்ப நன்றி தாமரை....

அமுத நிலா

ரொம்ப நன்றி இமா

அமுத நிலா

ரொம்ப நன்றி குணா...

அமுத நிலா

அன்பு அமுத நிலா

ரொம்ப அருமையாக எழுதியிருக்கீங்க. மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

வார்த்தைகளும், வரிகளும் அப்படியே மனதில் ஒட்டிக்கொண்டது. உண்மையான உணர்வுகளை அழகாக சொல்லி இருப்பது சிறப்பு. மனசை தோடுது உங்க கவிதை. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி சீதா...உங்கள் மனதார வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுகொண்டேன்....

அமுத நிலா

அன்பு வனிதா என் கவிதையை தவறாது படித்து கருத்து அனுப்புவதற்கு மிக்க நன்றி...

அமுத நிலா

Super kavidhai,

solla vaarthaigal ellai suthama Really appreciate my daughter.

நன்றி சித்தி.... இது எனக்கு எதிர்பாராத வாழ்த்துக்கள்...ரொம்ப சந்தோஷம்......

அமுத நிலா

நன்றி இந்திரா....

அமுத நிலா

En manathil ulla valiyai varigalai thantha en thozhiku mikka nandri

நன்றி நண்பா.....

அமுத நிலா

my wishes friend .good poet

தங்கள் கவிதை மழையால் என் கண்களில் கண்ணீர்சாரல்......
தோழிக்கு வாழ்த்துக்கள்...

all the lines are truth to close circle and nature to human life in our world. SOORY AMUTHA NILLA I AM TOO LATE WISHES FOR YOUR KAVITHAI.

i love amma. en amma ennai vitu pirinthu kadavulidam pona piragu than ammavin pasam enaku puriya vanthathu. ipoluthu avarai pirinthu kalangum pothu than ungal kavithai parthen. ennaiye maranthu oru nimidam kan kalanginen. i lov this kavithai and i love amma . i miss you ma. i miss you too...........................................

நன்றி தோழியே 6 வருடங்களுக்குப்பின் இந்த பதிவை பார்க்கிறேன்.அன்னையின் ஆசியும் அன்பும் எப்போதும் உங்களோடு இணைந்திருக்கும்.

அமுத நிலா

நன்றி தோழரே உங்கள் வரிகளை கண்டு நான் மகிழ்ந்தேன்.

அமுத நிலா