ரேவதி.S, அமுத நிலா கவிதைகள்

முதுமையின் பேனா முனை

மூபத்து வருஷமா
என்னோடு அவ வாழ்ந்தா..
மூன்னூறு ஜென்மமானாலும்
அவபோல வந்திடுமா...
வாழ்ந்த காலம் போதும்முன்னு
வாக்கப்பட்டு வந்தவளும்
வர்றேன்னு போயிட்டா.. இனி
வாழ்ந்து என்ன ஆகுதுன்னு
நாளை எண்ணி நானிருக்கேன்..
அவ போன நாள் முதலா
பள்ளி பருவத்தில்..
பருவம் சென்ற பத்து நாளே..
பத்திரமா வட்சுகோன்னு
பட்டுச்சட்டை வாங்கி தந்து..
தங்க மகள் அவள்தான் தாரவாத்து தந்தாங்க..
அன்புக்கு அடையாளமாய்
ஏதும் வாங்கி கொடுத்ததில்லை..
ஏசாத வார்த்தையின்னு
ஏதும் இன்னும் மிச்சமில்லை..
கருணையின்றி அடிச்சுபுட்டு..
காலம் தள்ளி நான் வந்தா..
பக்குவமா அவ சமச்சு
பரிமாற அவ இருப்பா...
அடிச்சது வலிக்குதான்னு
அக்கறையா கேட்கவேண்டாம்..
ஒரு பிடி சோறு உருட்டி
உப்புக்காரம் போதுமான்னு
ஒப்புக்குத்தான் கேட்ட என்ன
உன் ரோஷம் குறைஞ்சுடுமான்னு
அவ கேட்பா..
உயிர் பிரிஞ்சு போகும் போது
ஓலையில தூக்கும் போது..
அரை உசுரா போனேன்னே
ஆண் பிள்ளை அது இரண்டும்....
அழுத விழி ஒஞ்சுபோயி
அம்மா படம் வேணுமுன்னு
அதை எடுத்து சென்றாங்க..
பெண் பிள்ளை அதுவோ...
பெத்தவளே இனி இல்ல...
பேறுகாலம் யார் பார்ப்பான்னு
அழுதுகிட்டு அவ போக..
மூனு நாலு கறி சமைச்சு.
மூக்குபுடிக்க தின்னுபுட்டு
சென்றாங்க மத்தவுங்க..
அழுது புரண்டாலும்
அவ உசுரு திரும்பாது...
உயிரை மாய்க்கும் தைரியம் எனக்கேது...
முடிந்தவரை வாழ்கிறேன்...
முடிவிற்காக காத்திருக்கிறேன்... அதுவும்
அவ முகவரிக்காக...

- அமுத நிலா

பெண்ணின் மறுபக்கம்

மலர் மாலை சூடி மங்கலமாய்
முடிந்தது திருமணம்...
அருகில் நின்று மலர் துவி
தூரமாய் சென்றது
பெற்றோரின் இரு மனம்...
அடுத்த வீடு பெண்ணாக
அறிமுகமாகும் போது
உதட்டோர புன்னகை..
அங்கே .... அலுவலக அறிமுகத்தில்
நுனி நாக்கு ஆங்கிலமும்,
கைகுலுக்கும் கலாச்சாரமும்..
உறவுகள் எனும் போது கொஞ்சம்
உத்தரத்தான் செய்கிறது...
அன்பான கணவனோடு
கைகோர்த்து பார்க்கும் முதல்படம்...
எத்தனை பாப்கான் வாங்கி கொடுத்தாலும்
ஒன்றுதான் எடுக்கத் தோணுது..
அப்போது அடிக்கும் அரட்டையில்
சிதறிய பாப்கான்னை
கவனிக்க கூட நேரமில்லை...
எட்டு முழ புடவையும்..
எடுப்பான பொட்டும்..
மணக்கும் மல்லிகையும்
புதிதாகத்தான் இருந்தது....
விரித்த கூந்தலும், வெளிநாட்டு உடையும்
அங்கே அழுக்குமூட்டையில்
தூங்கிக்கிடக்குது...
விடியும் முன் எழுவது..
பன்னிரெண்டு மணி சீரியல்..
மதிய தூக்கம்.. மாலை காபியுமாய்..
இனிதே முடியுது நாட்கள்...
அன்று... 10 மணி உறக்கம்..
பல் துலக்காமல் காபி..
அம்மாவின் சமையல்
என இனிமையாய் துவங்கும்
விடுமுறை நாட்கள்...
ஓராண்டு கழித்து
அம்மா என அழைக்கும் குழந்தையும்..
நல்ல கணவன் நண்பனாகும் வேளையில்
எத்தனை சுகந்திரம் கிடைத்தாலும்
விட்டுபோன சுகந்திரத்தின் சாயல்
கொஞ்சம் கூட ஒட்டுவதில்லை ....
கல்லூரி காலம் முதல்
கணவன் கைப்பிடி காலம் வரை
உள்ள இடைப்பட்ட காலம் என்பது
சிட்டுகுருவி கொட்டும் அருவியில்
தாகம் தீர்ப்பது போல்...
திரும்ப கிடைக்காத நாட்களில்
திகட்டாத சுவை அது....

- அமுத நிலா

தெய்வ மகள்

உறங்கும் போது சிரிக்கும்
என் குட்டி தேவதையே..
உனக்கு சிரிப்பு காட்டும் கடவுளை
எனக்கு அறிமுகப்படுத்து
நன்றி சொல்ல வேண்டும்
அவரின் பிம்பத்தை
எனக்கு பரிசளித்ததற்கு...

- ரேவதி.S

நினைவுகள்

ஒவ்வொரு கவிதையும்
உன்னை நினைவுபடுத்துகிறது...
உன்னை நினைக்கும்
போதெல்லாம் புதிதாய்
கவிதை பிறக்கிறது...
கவிதையாய் நீ...
கவியாய் நான்...

- ரேவதி.S

காதல்

மறு பிறப்பிலும் உன்னுடனே
இருக்க நினைக்கிறேன்
உன் காதலாக அல்ல...
உன் நிழலாக.....
வேண்டாம் ? உன்
நிழலாக வேண்டாம்...
உன் உயிராக...
உனக்காக துடிக்கும்
உன் இதயமாக..
நீ இருக்கும் வரை நானும்
துடித்துக் கொண்டே இருப்பேன்
உனக்காக...

- ரேவதி.S

Comments

PENNIN MARUPPAKKAN - VALVIN MARUPPAKKAM

AMUTHA NILA ANNAITHUM AMUTHAM POLAVE IRUKKU PA

முதுமையின் பேனா முனை... கண் கலங்கி, மனசுல நின்னுடுச்சு. அருமையான உண்மையான வரிகள். தொடருங்க உங்கள் கவிதைகளை. :) அமுத நிலா and ரேவதி வாழ்த்துக்கள்.

முதுமையின் பேனா முனை கவிதை அருமை தோழி

உன் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பா.

அமுத நிலா