கர்ப்பத்திலிருந்து குழந்தை வளர்ப்பு வரை - 3

முந்தைய பகுதிக்கு செல்ல... (பகுதி 1)
http://www.arusuvai.com/tamil/node/28142

முந்தைய பகுதிக்கு செல்ல... (பகுதி 2)
http://www.arusuvai.com/tamil/node/28217

இந்த தொடரை தொடர்வதற்கு முன் ஒரு சின்ன விளக்கம் அளிக்க விரும்புகிறேன். இங்கே நான் எழுதும் விஷயங்கள் யாவும் என் அனுபவம், என் பாட்டியின் அறிவுரைகள், எங்கள் ஊர் வழக்கம் இதெல்லாம் அடிப்படையாக வைத்தே எழுதுகிறேன். எனக்கும் மருத்துவ துறைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. மருத்துவ சம்பந்தமான அறிவும் எனக்கு மிக மிக குறைவு தான். இதற்காக வேண்டி நான் இணையத்திலோ, புத்தகங்களிலோ தேடி படித்தும் எழுதுவதில்லை. இப்போதும் எனக்கு ஏதும் சந்தேகம் வந்தால், ஊரில் இருக்கும் என் சொந்தக்கார பாட்டியிடம் போன் சேய்து கேட்டு, சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வேனே தவிர, விஞ்ஞான பூர்வமான, மருத்துவபூர்வமான விளக்கங்கள் தேடி நான் செல்வதில்லை.

அதனால், நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், இங்கே இருக்கும் விஷயங்கள் பழமை வாய்ந்தவையாக இருக்கலாம். ஆனால், சுகமான பிரசவத்துக்கும், ,நல்வாழ்க்கைக்கும் ஏற்றதாக இருக்கும் என்ற என் அனுபவ‌த்தைத்தான் நான் சொல்கிறேன். யாரையும் நான் இதை கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. பின்பற்றுவதும், பின்பற்றாததும் அவரவர் விருப்பம். என் பெண்ணுக்கே கூட ஓரிரு முறை சொல்வேன். கேட்கலைன்னா, விட்டுவிடுவேன். வற்புறுத்த மாட்டேன். என்னைப் பொறுத்தவரை இன்றளவும் அலோபதி மருந்துகளை எவ்வளவு தவிர்க்க முடியுமோ, அவ்வளவு தவிர்ப்பேன். குழந்தைகளுக்கும் கை வைத்தியமாக எவ்வளவுக்கும் சமாளிக்க முடியுமோ, அவ்வளவு சமாளிப்பேன். ரொம்ப அதிகமாக இருக்குன்னு உணர்ந்தவுடன் மருத்துவரை அணுகவும் தாமதிக்க மாட்டேன்.

இங்கே சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்களுக்கு விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் எனக்கு சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அது சம்மந்தமாக நான் சொல்லும் மருத்துவ பெயர்கள் தவறாக இருக்கலாம். ஆனால், சொல்லும் விஷயங்கள் நன்மை அளிக்கக் கூடியது, அதனால் எவ்விதமான தீங்கும் நேராது என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும்.

சமீபமாக நான் பார்த்து, ஆச்சரியப்பட்டு, மலைத்துப் போன ஒரு விஷயம். இப்போது அடிக்கடி தொலைக்காட்சியிலும், புத்தகங்களிலும் தொப்புள் கொடி (stem cell) யை சேமித்து, உங்கள் பிள்ளைகளுக்கு பரிசாகக் கொடுங்கள், உயிர் காக்கும் விஷயம்னு விளம்பரம் வருது. அதற்கான தொகை ஆயிரம், லட்சம் என போகுது. எவ்வளவோ காலமாக எங்கள் ஊர்ப்பக்கம் குழந்தையின் தொப்புள் காய்ந்து விழுந்தவுடன், அதை எடுத்து பத்திரப்படுத்தி தாயத்து செய்து அதற்குள் போட்டு குழந்தையின் இடுப்பில் கட்டுவார்கள். தங்கம், வெள்ளி, தாமிரம் என உலோகம் மட்டும் வசதியைப் பொறுத்து மாறுபடும். இன்றைக்கும் எங்க ஊர்ப்பக்கம் எத்தனையோ பெரியவர்களின் இடுப்பில் அந்த தாயத்து இருக்கும். கேட்டால் குழந்தைக்கு காத்து, கருப்பு அண்டாமல் இருக்க கட்டணும்னு ஒரு பதில் வரும். லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து இப்போது அதன் அருமையை உணர்ந்து சேமித்து வைக்க சொல்வதை ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே சர்வசாதாரணமாக சேமித்து வைத்திருந்தனர். அர்த்தம் தெரியாமல் அவர்கள் செய்திருந்த ஒரு காரியத்திற்குப் பின் இவ்வளவு பெரிய அர்த்தம் இருக்கு. என்ன, இப்போதைய அறிவியல் வளர்ச்சிப்படி என்னென்னவோ செய்து பத்திரப்படுத்தி வைப்பார்கள். அன்றைக்கு அவர்களுக்கு தெரிந்த வழியில் அவர்கள் பத்திரப் படுத்தி வைத்தார்கள். இதுதான் வித்தியாசம். இதுபோல் தான் நிறைய விஷயங்கள் ஏன் சொல்றாங்க, எதுக்கு சொல்றாங்கன்னு விளக்கம் கிடைக்கலைன்னாலும், அதற்கு நிச்சயமாக ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்பதே என்னுடைய எண்ணம்.

எது எப்படியானாலும், ஆரம்பித்த விஷயத்தை, ரஜினி மேடம் சொல்லியது போல ஒரு தாயாக / சகோதரியாக / தோழியாக சொல்லி முடித்தே தீருவேன்:)))}

ஆறாவது மாத கடைசி அல்லது ஏழாவது மாத ஆரம்பத்தில் குழந்தையின் அசைவு நமக்கு நன்றாக தெரிய ஆரம்பிக்கும். சில வேளைகளில் குழந்தை ரொம்ப முண்டிக் கொண்டே இருக்கும். சில வேளைகளில் அசைவே இல்லாதது போல இருக்கும். உடனே பயந்து விட வேண்டாம். அரை நாள் அல்லது கிட்டதட்ட ஒரு நாள் முழுக்க அசைவு தெரியவில்லை என்றால், உடனே டாக்டரிடம் போக வேண்டும். நாம் பசியோடு இருந்தால், குழந்தை ரொம்ப முண்டிக் கொண்டே இருக்கும். கர்ப்ப காலத்தில் விரதம் இருப்பதை தவிர்க்கவும். பசியோடும் அதிக நேரம் இருக்கக் கூடாது. வாமிட் எடுக்கும் போதும், ரொம்ப எக்கி எடுக்காமல் இருக்க வேண்டும். எக்கி வாமிட் எடுத்தால் குழந்தை நெஞ்சுக்கு ஏறிக்கும்னு எங்க பாட்டி சொல்வாங்க. ஆரம்ப கால வாமிட் பற்றி பிரச்னை இல்லை. கடைசி வரை வாமிட் எடுப்பவர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்திற்கென்று தனியாக தைத்துக் கொண்டாலும் நலம். நல்ல காற்றோட்டமான உடைகளாக தெரிவு செய்ய வேண்டும். பருத்தி ஆடைகள் நல்லது. வெளியில் செல்லும் போது சுடிதாரை விட புடவை நல்லது. இடுப்பு மற்றும் வயிறு பகுதிக்கு காற்றோட்டம் இருக்கும். சிலர் சுடிதாரையே ரொம்ப டைட்டாக, வயிற்றை இறுக்கிப் பிடிப்பது போல போடுவார்கள். அது ரொம்பவே தவறு.

ஆறு மாதம் வரை, சாப்பிடும் உணவு சத்தானதாக சாப்பிட்டால் போதுமானது. ஸ்பெஷல் உணவு எதுவும் தேவை இல்லை. ஏழாம் மாதம் துவங்கியதில் இருந்தே பிரசவத்திற்கு உடம்பை தயார் படுத்த வேண்டும். ஐந்து மாதத்தில் இருந்தே மாலை வேளைகளில் கொஞ்சம் நடக்க வேண்டும். மெதுவாக நிதானமாக, ஆனால் கொஞ்சம் அதிக தூரம் நடப்பது நல்லது. மருத்துவர் நடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தால் மட்டும் நடக்க வேண்டாம்.

ஏழாவது மாதம் துவங்கியதில் இருந்தே, வாரம் ஒருமுறை வெந்தயக்களி செய்து சாப்பிட வேண்டும். வெந்தயக்களி (http://www.arusuvai.com/tamil/node/3885) சாப்பிட்டால் வெட்டை சூடு குறையும். இடுப்பு எலும்புகள் இளக்கம் கொடுத்து சுகப் பிரசவத்திற்கு வழி வகுக்கும். வாரம் ஒரு முறை சீரக கசாயமும் (http://www.arusuvai.com/tamil/node/10125) முடிக்க வேண்டும். சிலர் குடிக்கும் தண்ணீரில் சீரகம் போட்டுக் காய்ச்சி, தண்ணீருக்குப் பதில் அந்தத் தண்ணீரைக் குடிப்பார்கள். அப்படியும் செய்யலாம். அப்படி செய்தாலும் சீரக கசாயம் குடிக்க வேண்டும். முருங்கைப்பூவை முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட வாய்வு குறையும். அவ்வப்போது சாப்பிட்டால் போதும். தினமும் இரவில் படுக்கும் முன் சுடுதண்ணீரை இடுப்பு, கால்களுக்கு ஊற்றினால் இரவில் நன்கு தூக்கம் வரும். இரவில் வெதுவெதுப்பான பால் குடிக்கலாம். வாழைப்பழமும் சாப்பிடலாம். எங்க ஊர்ப்பக்கம் வாரம் ஒரு முறை சுத்தமான விளக்கெண்ணெய் ஒரு அரை ஸ்பூன் உள்ளங்கையில் விட்டு, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட சொல்வார்கள். இது வயிற்றை சுத்தப்படுத்தி விடும். பொய்வலி வரும் வாய்ப்புகள் ரொம்ப குறைவு.

எங்க பக்கத்தில் ஏழாம் மாதம் வளைகாப்பு செய்யும் போது ஐந்து தழைகளின் (பாகல் இலை, கோவை இலை, பூவரசன் இலை, முள் முருங்கை இலை, புண்ணாக்கு இலை) சாறெடுத்து, பச்சரிசி மாவு சேர்த்து களி செய்து கொடுப்பார்கள். குழந்தைக்கும், தாய்க்கும் வயிற்றுப்பூச்சி போகும். குழந்தைக்கு செவாப்புக் கட்டின்னு சொல்வாங்க, அது வராது. கர்ப்பமான பெண்ணுக்கு இந்தக் களி ரொம்பவே நல்லதுன்னு சொல்வாங்க. உளுத்தங்களியும் வாரம் ஒரு முறை சாப்பிடலாம். உளுந்து வடை செய்து கொடுப்பதும் நல்லது. பருப்பு வகைகள் சாப்பிடுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். ஜீரணமாக நேரம் எடுக்கும். கர்ப்பிணிகள் இரவில் எட்டு மணிக்குள் சாப்பிட்டு விடுவது நல்லது. அப்போது தான் தூக்கத்தில் மூச்சு முட்டுவது போல இல்லாமல் இருக்கும். சுரைக்காய், நீர்ப்பூசணி, வாழைத்தண்டு இதெல்லாம் அதிகம் சாப்பிட்டால் நீர் நன்கு பிரிந்து கால் வீக்கம் வராது. கால் வீக்கம் அதிகம் இருந்தால் நான் முன்பே சொல்லியது போல பார்லி வாட்டர் குடிக்க வேண்டும்.

எட்டாம் மாதம் முதல் வெந்தயக்களியையும், சீரக கசாயத்தையும் வாரம் இருமுறை சாப்பிட எலும்புகள் நன்கு இளக்கம் கொடுக்கும். இடுப்பு வலியும், கால்வலியும் அதிகமாக இருக்கும். பயப்பட வேண்டாம். வாய்வு வலி, சூட்டு வலியும் வரும். அடிவயிறு வலிக்காத வரை பயமே இல்லை. வயிறு வலித்தால் சீரக கசாயம் போட்டு குடித்தாலே, பொய்வலி நின்று விடும்.

இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்லி ஆக வேண்டும். எனது பெரிய பெண் கர்ப்பம் தரித்த போது வெளிநாட்டில் இருந்தாள். இரவு பன்னிரெண்டு மணிக்கெல்லாம் சந்தேகம் கேட்டு போன் வரும். பிரசவத்திற்கு இங்கு வரும் போது எட்டு மாதம் ஆகி விட்டது. அங்கு பார்த்த டாக்டர்களும், இந்தியா வந்த‌ பின் இங்கு பார்த்த‌ டாக்டரும் நார்மல் டெலிவரிக்கு சான்ஸே இல்லை, சிசரியன் தான்னு சொல்லிட்டாங்க. நம்ம வீட்டில் யாருக்கும் அப்படி இருந்ததில்லையே, எப்படி நம் பெண்ணுக்கு மட்டும் சிசரியன் ஆகும்னு அவளுக்கு நான் கொடுத்த உணவுப் பொருட்களும், நடைப்பயிற்சி, வெந்நீர் குளியல் எல்லாம் சேர்ந்து டாக்டர் வருவதற்குள்ளேயே அவளுக்கு நார்மல் டெலிவரி ஆகியது. சாதாரணப் பொருட்களாகத் தெரியும் சிலவற்றிற்கு அவ்வளவு மகத்துவம் உள்ளது.

மீதி அடுத்த தொடரில்......

5
Average: 4.2 (12 votes)

Comments

Jaisri enaku govt 24hrs prasava hospital la than 2kulanthaum piranthanga. Enga docter sonaga nama udambu week a iruntha kuda neer sathu athigama irukuma athunala Proteinx powder daily 2times milk la kudika sonaga, muttai, keerai, dates lam nala sapda sonaga vera onum prblm ila normal delivery agum nu sonaga. Naanga joint family pa irukurathu 3nd floor en husband ku 3vela sapadu, 2times milk, water ellame naan than mela kondu varuven daily 10 to 15times achum yeri iranguven pa 9months vara, enaku 9months la than valaikapu potanga. Valikapu potu 12day la kulantha pirathuruchu. 2ndavathu kulanthaiku athum ila delivery vara apadi than. Padi niraya yeri irangunathala oru 15mintes nada athu ve pothum nu enga athaium, husbandum sonaga pa.

Jaisri enaku govt 24hrs prasava hospital la than 2kulanthaum piranthanga. Enga docter sonaga nama udambu week a iruntha kuda neer sathu athigama irukuma athunala Proteinx powder daily 2times milk la kudika sonaga, muttai, keerai, dates lam nala sapda sonaga vera onum prblm ila normal delivery agum nu sonaga. Naanga joint family pa irukurathu 3nd floor en husband ku 3vela sapadu, 2times milk, water ellame naan than mela kondu varuven daily 10 to 15times achum yeri iranguven pa 9months vara, enaku 9months la than valaikapu potanga. Valikapu potu 12day la kulantha pirathuruchu. 2ndavathu kulanthaiku athum ila delivery vara apadi than. Padi niraya yeri irangunathala oru 15mintes nada athu ve pothum nu enga athaium, husbandum sonaga pa.

Naan pregnancy starting la 41.650 irunthen ipo 7 month la 51.750 iruken.ini naan weight increase. Panaa problemaa ...10 kilo ku mela weight. Pootaa normal delivery problem aa...plz. answer me

Jaisripriya

Na pregancyku try pannitu ikn periods delay aguthu but period vandhuduthu nd na raw rice sapduvn idhu habit aa poitu I can't stop it en body heat body na water niraya dhn kudikurn but no progress ena pannalam anyone plz reply