மொட்டை போடலாமா?

குடும்பத்தில் ஒருவர் கர்ப்பமாக [2 மாதம் ] இருக்கும் பொழுது குழந்தைக்கு [10 மாத குழந்தை ] மொட்டை போடலாமா?

karpamaga irukkum pothu mottai poda koodathu

Akeer

ஒன்றுமே ஆகாதுங்க. பயமில்லாமல் போடலாம்.

‍- இமா க்றிஸ்

kulandhai ku mottai podalam pa. ondru mattum neyabagathil vaiyungal friend. kulandhain comfort parkanum piraintha mudi edupathu mukiyam matravargalukaga marttra vendam, kulandhai dhaan kashtap padum. naan salem la epadi dhaan parthen andha kulandhai ku udambu pirachanai kudithu tu eruku mottai adikamal erundha thal.

nammakku kulandhai mukiyam kadavul lai vendi thairiyama erankugal friend.

பிறந்த முடி எடுப்பது என்பது ஒரு பழக்கம் மட்டும்தான். இடம், காலநிலை, தேவை கருதி வந்த பழக்கம். இஷ்டமானால் எடுக்கலாம். கட்டாயம் எதுவும் இல்லை. குளிர்பிரதேச நாடுகளில் வாழ்பவர்களிடையே இந்தப் பழக்கம் இல்லை.

பிறந்த குழந்தை தலையில் இறந்துபோன செல்கள் கூடவே கொஞ்சம் அழுக்கும் சேர்ந்து பிடித்திருக்கும். வெப்பமான காலநிலைப் பிரதேசத்தில் வசிக்கிறோம். இருக்கும் அழுக்கோடு வியர்வையும் சேர குழந்தைக்கு சங்கடமாக இருக்கும். குழந்தையின் ஆரோக்கியம் கருதி முடி எடுப்பார்கள். (இப்போல்லாம் ஃபான் ஏசீன்னு இருக்கிறதால வியர்வை பிரச்சினையாக இராது.)

இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் பிறகு முடி எடுக்கத் தேவையிராது. அதற்குள் தலை சுத்தமாகி இருக்கும்.

‍- இமா க்றிஸ்

//குடும்பத்தில் ஒருவர் கர்ப்பமாக [2 மாதம் ] இருக்கும் பொழுது குழந்தைக்கு [10 மாத குழந்தை ] மொட்டை போடலாமா?//

அன்று அவசரத்தில் சுருக்கமாக 'போடலாம்' என்று மட்டும் பதில் தட்டிவிட்டுப் போய்விட்டேன். :)

யாரோ 'வேண்டாம்' என்றிருக்கிறார்கள்; அதனால் கேட்டிருக்கிறீர்கள். ஒருவர் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் வேறு யாரோ ஒருவர் தலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையே. ஒன்றும் பிரச்சினை இல்லை.

மொட்டை போடுபவருக்கும் ஒன்றும் ஆகாது, அது தன் பாட்டில் கொஞ்ச காலம் கழித்து வளர்ந்துவிடும். உண்மையில்... இருந்ததைவிட சற்று அடர்த்தியாக வளரச் சந்தர்ப்பம் இருக்கிறது.

உங்களுக்காக கொஞ்சம் யோசித்ததில் இமாவுக்குத் தோன்றியது.... அவரவர் இருக்கிற சந்தர்ப்பத்தைப் பொறுத்துத்தான் இதெல்லாம் வந்திருக்கும்.

மொட்டை சாதாரணமா எப்ப எப்ப போடுவாங்க? ஹெல்த் ரீசனுக்கு போடுறதா இருந்தா இந்த கேள்வி கேட்டிருக்க மாட்டீங்க.

1. நேர்த்தி / வேண்டுதல் / காதுகுத்து மொட்டை
மொட்டை போட குலதெய்வம் கோவிலுக்கு இல்லை தூர எங்கயாச்சும் உள்ள கோவிலுக்கு குடும்பமா போவாங்க. முன்காலங்களில்... பண்டபாத்திரம், அரிசி சாமான் முடிச்சுக் கட்டல் - நிறைய தயாராகுதல், இப்போதுள்ளதை விட அதிகம் இருந்திருக்கும். இவங்க புகுந்த வீட்டுல முதல் மாட்டுப்பொண்ணாக இருந்தால் இன்னும் பொறுப்பு / ஸ்ட்ரெஸ் அதிகம் இருக்கும். பாவம்ல? அலைச்சல் அப்புறம்... ஏசீ கார்லாம் அப்போ இல்லை. வண்டி கட்டி கடமுடான்னு ஒரு பாதைல கர்ப்பிணியை கூட்டிப் போகணும். பொற வழியில வலி வந்தா என்ன பண்ணுவது? பப்ளிக்ல குட்டிசுட்டீஸ், ஆம்பளைங்க நடுவுல பிரசவம்!!! இந்தக் காரணங்களால் 'முன்னாட்களில்' இப்படி 'ஒருவர் கர்ப்பமா இருக்கிறப்ப குடும்பத்துல இன்னொருத்தருக்கு மொட்டை போடப்படாது,' என்று சொல்லிவந்திருக்கலாம். இப்பவும் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்காம, விடாம புடிச்சுட்டு இருக்கோம்.

காரணம் 2. கர்ப்பிணி மனசு சம்பந்தப்பட்டது. மொட்டை போடுறது சில இடங்கள்ல மரணவீட்டில் ஒரு முக்கிய சடங்கு இல்லையா? கர்ப்பிணி, இந்த மாதிரி எண்ணம் மனசுல ஊறிப் போய் இருக்கிறவங்களா இருந்தா... குடும்பத்துல யாராச்சும் ஏற்கனவே மொட்டை போட்டுட்டா பார்த்துப் பார்த்து, அநாவசியமா ரிவர்ஸ்ல நினைச்சு 'ஏதாச்சும் ஆகிருமோ?' என்று பயந்து குழம்பிக்குவாங்க. (அவங்களா குழம்பாவிட்டாலும் பக்கத்திலிருக்கிறவங்க சொல்லிச் சொல்லி குழப்பிவைப்பாங்க.) மொட்டை போட்டவங்க முடி வளரும்வரை நிம்மதியா சந்தோஷமா இருக்க முடியாது இவங்களால. :)

குழந்தை உள்ளே ஆரோக்கியமாக வளர அம்மா சந்தோஷமா இருக்கிறது முக்கியமில்லையா?

அவங்கள்ட்ட போய் இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. சொன்னால் அதுவே கவலைப்பட ஒன்றை எடுத்துக் கொடுக்கிறதா ஆகிரும். அதனால்... காரணம் சொல்லாம இன்ன இன்னது ஆகாது என்று மொட்டையா (இது வேற மொட்டை) சொல்லி வந்திருக்காங்க முன்னோர்கள். :)

//10 மாதக் குழந்தைக்கு மொட்டை// இது பற்றி மேலே இன்னொரு கருத்து போட்டிருக்கிறேன், படிச்சுப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

NaN karpamaga erukum pothum, en kanavarin Akka kulanthai ku en kanavarin madiyil vaithu mottai adikalama??

மஞ்சு, இவை நம்பிக்கைகள். பதில் சொல்பவர்கள், ஒவ்வொருவர் ஒவ்வொன்றைச் சொல்லப் போகிறோம். யாரிடமிருந்தும் 100% சரியான பதில் உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது என்பதை... நிதானமாக உட்கார்ந்து சிந்தித்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள். இன்று அல்லாவிட்டாலும் இருபது முப்பது வருடங்கள் கழித்தாவது புரியும் நான் சொல்வது என்னவென்று.

எனக்கு மொட்டையே போட்டதில்லை. நன்றாகவே இருக்கிறேன். சீனர்கள். கொரியர்கள், ஐரோப்பியர் என்று மற்ற நாட்டவர்களிடம் இந்த வழக்கம் எல்லாம் இல்லை; அவர்கள் நம்பிக்கைகளை நாம் பின்பற்றுவது இல்லை. ஆனால் நாம் நன்றாகவேதான் இருக்கிறோம்.

நம்புகிறவர்களுக்குத் தான் கஷ்டங்கள். நம்பாதவர்களுக்கு இல்லை.

'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக் கூடாது,' என்று பழமொழி இருக்கிறது. உங்கள் வயிற்றின் உள்ளே இருக்கும் கருப்பையின் உள்ளே இருக்கும் குழந்தைக்கும் உங்கள் நாத்தனாரின் குழந்தையின் தலைக்கும் எந்த விதத்தில் தொடர்பு இருக்கிறது!

முடி வெட்டப்படும் போது அதன் உரிமையாளருக்கே பாதிப்பு ஏற்படுவது இல்லை; துளியும் நோகாது - மயிர்க்கால்கள் இழுபடாதவரை.

அந்தக் குழந்தைக்கே பாதிப்பு இல்லை எனும் போது, அந்தக் குழந்தையின் முடியை வெட்டுவதால் உங்கள் குழந்தைக்கு என்ன ஆகும் என்று பயப்படுகிறீர்கள்! மடியோ நாற்காலியோ இரண்டும் அமரும் வகையில் ஒன்றுதான். அதே போல் யார் மடியானாலும் அந்தச் சமயத்திற்கு அது 'நாற்காலி' வேலையைத் தான் செய்யப் போகிறது. மடிக்குச் சொந்தக்காரர் பயந்து அழும் குழந்தை தலையை ஆட்டாமல் பிடித்துக் கொள்ளும் வேலையைச் செய்யப் போகிறார்.

உங்களுக்குச் சரி என்று தோன்றுவதைச் செய்யுங்கள். பிழை என்று தோன்றி, உங்கள் கணவரும் மற்றவர்களும் ஒத்துழைக்க மாட்டார்கள் என்று தெரிந்தால், யோசிக்காமல் இதற்கும் உங்கள் குழந்தைக்கும் சம்பந்தம் இல்லை என்று, அவர்கள் போக்கில் போக விட்டு உங்கள் நிம்மதியைத் தக்கவைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். எதிர்த்து நிற்பதால் கூட நஷ்டம் - மனக் கஷ்டம் வரலாம் இல்லையா! பெரும்பான்மை எடுக்கும் முடிவுதானே நடக்கும்! தவிர... மொட்டை போட்ட 4 நாளுக்கு வேண்டுமானால் யோசிப்பீர்கள். பிறகு, உங்கள் மீதி வாழக்கைப் பிரச்சினைகளில் இது ஒரு பிரச்சினையாகத் தெரியாமல் மறந்து போகப் போகிற விஷயம் இது.

கொஞ்சம் நேரம் எடுத்து இங்கு தேடிப் பாருங்கள். பதில் கிடைக்கலாம். ஏற்கனவே இது போல் தலைப்புகள் பேசப்பட்டிருக்கின்றன. இன்று என் கையில் அதிக நேரம் இல்லை. இருந்திருந்தால் நானே தேடிக் கொடுத்திருப்பேன்.

யோசிக்காமல் சந்தோஷமாக இருங்க. சிரமமில்லாமல் குழந்தையை ஈன்றெடுக்க என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.

‍- இமா க்றிஸ்

Podalam sis unga nadhanar pullaikku tha thanepoduranga.. No problem... Unga husband'ko illa ungalukko and unga babies'ko than poda kudathunu solvanga... Bayam vendam...

I love my parents...

Hi
Child vennum ventti mama veetu (wife appa) kuladhivam kovila ventti nan mottai podalama?

மேலும் சில பதிவுகள்