Hi dears Wheezing

Hi dear.., enakku 3 1/2 la oru baby irukka delivery agi 9monthla enakku wheezing vandhuduchu adhukku munnadi andhamadri problem ah ille. doctor kitte pona na porandhadhile irundhe irukkanumenu kekranga but enakku apdi ille and ipo 2years ah sidha la tablet eduthutrukke., immunity level increase ana indha problem ungalukku varadhunu solranga doctor. Enakku enna doubtna second babyku conceive aana wheezing problem irukradhala edhadhu problem varuma and oru vela wheezing baby ya affect pannuma, yaraukavadhu indha madri irukka friends...,

//babyku conceive aana wheezing problem irukradhala edhadhu problem varuma// இதனால் வீசிங் (& அலர்ஜி தொடர்பானவை) தவிர புதிதாக எந்தப் பிரச்சினையும் வருவதே கிடையாது. ஆனால் சின்னச் சின்ன ஆரோக்கியப் பிரச்சினைகள் இல்லாமல் உலகில் யாருமே இருக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் கண்ணா. வீசிங் இல்லாத பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் எல்லா உடற்பிரச்சினைகளும் வரத்தான் போகிறது. அவர்களுக்கும் வீசிங் வரலாம்.

//oru vela wheezing baby ya affect pannuma,// வீசிங்... இப்போது பெரும்பாலானோருக்கு இருக்கிறது. பரம்பரையின் மூலம் கடத்தப்படலாம் என்று கூறப்பட்டாலும் அது வருவதற்கு பெற்றோருக்கு வீசிங் இருந்தாக வேண்டும் என்பது இல்லை, ஒவ்வாமையாலும் வேறு சில காரணிகளாலும் கூட வரலாம்.

எங்குமே சுத்தமான காற்று இல்லை. ஊரில் ஓடும் வாகனக்களின் புகைநிறைந்த காற்றுத் தான் சுவாசிக்கக் கிடைக்கிறது. வீட்டினுள்! கொசு மருந்து, கரப்பு மருந்து, ஏர் ஃப்ர்ஷ்னர், க்ளீனிங் தயாரிப்புகள், வாசனை சோப்பு, ஷாம்பூ, பர்ஃப்யூம், ஊதுபத்தி... இப்படி எத்தனை வாசனைகள்! நாம் எங்கே காற்றைச் சுத்தமாக இருக்க விடுகிறோம்!! எப்படி வீசிங் வராமல் இருக்கும்!! ஒவ்வாத உணவுகள் & மற்ற விடயங்கள எட்ட வைப்பதும் ப்ரிவென்டர்களும் பலனளிக்கும்.

இது ஒரு பிரச்சினை என்று நினைக்கிறதை விடுங்க கண்ணா. வீசிங் ஒரு நோய் அல்ல; கண்டிஷன். ஒருவர் தனக்கு எவை வீசிங்கைத் தூண்டி விடுகின்றன என்கிறதை அறிந்துகொண்டாலே போதும், பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். சில காரணிகளைத் தவிர்க்க முடியாதுதான். ஆனாலும் கூட நீங்கள் பயப்படும் அளவு இது பெரிய விஷயம் இல்லை. ஒருவரது வாழ்க்கையைப் பாதிக்கும் அளவு பெரிய நோய் அல்ல இது. மருத்துவம் முன்பு போல இல்லை. விதம் விதமான ப்ரிவென்டர்கள் வந்துவிட்டன. வீசிங்கை விட பெரிய கண்டிஷன்களோடெல்லாம் மனிதர் சாதாரண வாழ்க்கை வாழ்துகொண்டிருக்கிறார்கள். கவலையே வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

//yaraukavadhu indha madri irukka friends..// என்று கேட்டிருந்தீங்க.

என் பாட்டிக்கு மோசமாக இருந்தது ஆனால் அவரது 6 பிள்ளைகளில் ஒருவருக்குக் கூட இருக்கவில்லை. அவருக்கு 25க்கு மேல் பேரக் குழந்தைகள். என்னைத் தவிர வேறு யாருக்கும் வீசிங் இருப்பதாகத் தெரியவில்லை.

என் குழந்தைகளில் மூத்தவருக்கு மிகச் சிறிய வயதில் மூச்சுப் பிரச்சினை இருந்தது. பிறகு இல்லை. இப்போது 34 வயது. இளையவருக்கு வீசிங் இருக்கிறது. ஃப்ளூ வரும் சமயம் கூடவே இதுவும் வரும். மற்றப்படி தொந்தரவாக இல்லை.

‍- இமா க்றிஸ்

Romba thank you ma na unga kitte 3years ku munnadi pesirukke. Ungaloda chat padichadhule rombave thelivu kedachudhu. enaku daily yu night time la cold ah ve irukku so bathroom ku adikadi poga vedi irukku adhuve oru periya kashtama irundhuchu and first baby 1 vayasu irukkumpodhu irundhu wheezing nala konja kashta pattute, kuda yaaru ille naanga mattum irukradhala wheezing vandhutta ennayave my husband dha paathukkanu baby yavu vachuttu husband dha rombave kashtapattaru adhanala dha conceive agaradhukku munnadie ivlo yosiche but sidha la tablet edukradhala konjam control ah irukku and ipo neenga solradha paatha idhu oru problem ah illendra madri thonudhu thank you so much ma.

மேலும் சில பதிவுகள்