என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும்

அனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்

உமா

உமா... எனக்கு இப்படி இருந்த போது என் தோழி சொன்ன ஒரு சூப்:

1 தக்காளி, சின்ன துண்டு பட்டை, 2 லவங்கம், 4 (அ) 5 மிளகு - அனைத்தையும் குக்கரில் போட்டு, 1 - 11/2 கப் தண்ணீர் சேர்த்து 3 - 4 விசில் வைத்து எடுக்கவும். பின் தண்ணீர் இல்லாமல் அனைத்தையும் எடுத்து மிக்ஸியில் உப்பு சேர்த்து நன்றாக அடித்து வேக வைத்த தண்ணீரிலேயே சேர்த்து ஒரு கொதி விட்டால் சூப் தயார்.

இது குடித்தால் நெஞ்சு கரிப்பது குறையும். பசியும் எடுக்கும். இது என் அனுபவம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பதிவுகளை இப்பதான் பார்வையிட்டேன் ரொம்ப சந்தோசம் இப்ப உங்களுக்கு எத்தையாவது மாதம் ஆகிறது.?.சந்தோசமாக எந்த குறைவும் இல்லாத மனம் நிறைவான ஆரோக்கியமான பெர்றவர்கள்,மற்றவர்கள் புகழும்படியான அழகிய குழந்தையை பெற்று எடுக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உமா பயம் வேணாம் இதெல்லாம் சகஜமே பருங்க இப்ப எனக்கு நெஞ்சு எரிச்சலாகவே இருக்கு இது சகஜம்தான் உமா கவலை வேணாம் கால் வீக்கம்னா முதலில் பிபீ டெஸ்ட் பண்ணுங்க

லஷ்மி வெட்கமா ஹை பாருங்கப்பா..

கவி எஸ் நக்கலா போச்சு ம்ம் எல்லாம் நேரம் வாற என்னத்த சொல்ல :D

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

முதலில் உங்கள் பதிவுக்கு நன்றிப்பா. dr எனக்கு பிபீ இல்லை என்று சொல்லிவிட்டார். நேற்று தான் ஹாஸ்பிடல் போனேன். எனக்கு 6 மாதம் முடியப்போகிறது.உங்களுக்கு இது எத்தனையாவது மாதம். முதல் குழந்தையா?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

வனிதா நன்றி.எனக்கு உடனே இந்த சூப் குடிக்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது. இதில் butter சேர்க்கலாமா? எந்த நேரம் குடிக்கவேண்டும்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உமா.... விரும்பினால் சிறிது பட்டர் & ப்ரெட் பீஸ் கூட சேர்க்கலாம். ஆனால் உங்கள் எடை அதிகமாக்கும் உணவுகள் சேர்க்கலாமா என டாக்டரிடம் கேளுங்கள். எனக்கு ஹார்லிக்ஸ் கூட சேர்க்க கூடாது என்றார்கள். பட்டர் எடை கூட்டும். அளவுக்கு அதிகமாக எடை ஏரினாலும் ப்ரச்சனை(Reducing weight after delivery), சரியாக எடை ஏராவிட்டாலும் ப்ரச்சனை. ;) அளவாக சேருங்கள். மாலை நேரத்தில் குடியுங்கள். இரவில் பசிக்கும், தூங்கும்போது நெஞ்சு கரிப்பு இருக்காது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா உங்கள் பதிலுக்கு நன்றி.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஓஹ் நல்லதுமா அப்ப இது சாதாரணமாக வரும் வீக்கமேபயம் வேணாம் சரியாகிடும்..எனக்கு 6 மாசம்ப்பா..இல்லைமா இரண்டாவது குழந்தை

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இப்போ தான் அறுசுவை open செய்தேன். உங்கள் பதில். அப்போ சரி நம் இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான்பா குழந்தை பிறக்கப்போகிறது.உங்கள் கடவுளை எனக்காக நீங்கள் வேண்டிக்கொள்ளுங்கள் மர்ழி. நானும் உங்களுக்காக வேண்டுகிறேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

நிச்சயம் வேண்டிக்கறேன் உமா நீங்க நினைத்தமாதுரியே அழகிய,அரிவான குரைவில்லாத குழந்தை பிறக்கும் சந்தோசமா இருங்க..ஸ்கேன் எடுத்தீங்களா?குழந்தை அசைவுகளை பார்க்க்குறப்ப சந்தோமாக இருக்குமே இல்லையா?என்ககு 23 ஆவது வாரம்..உங்களுக்கு?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்