சுரைக்காய் தட்டப்பயிறு (காராமணி) குழம்பு

தேதி: March 4, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

சுரைக்காய் - 1 (சிறியது),
தட்டப்பயிறு (காராமணி) - 200 கிராம்,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
தேங்காய் துருவல் - 1/2 மூடி,
கசகசா - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 8,
பூண்டு - 4 பல்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


 

சுரைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
தட்டப்பயிறை லேசாக வறுத்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். (முந்தின இரவே கூட ஊற வைக்கலாம்).
ஊற வைத்த தட்டப்பயிறை ஒன்றரை டம்ளர் சேர்த்து, குக்கரில் 6 விசில் விட்டு, பயிர் வெடிக்கும் வரை வேக வைக்கவும்.
புளியை 1 டம்ளரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஆறிய பின், தேங்காய், கசகசா, தனியா தூள் சேர்த்து, நைசாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய சுரைக்காய், சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
சுரைக்காய் வதங்கிய பின், அரைத்த மசாலாவை கரைத்து ஊற்றி, உப்பு,மஞ்சள் தூள் போட்டு, வேக விடவும்.
சுரைக்காய் வெந்தவுடன், கரைத்த புளி, வேக வைத்த பயிறு சேர்த்து, 5 நிமிடம் கொதித்த பின் இறக்கவும்.


சுரைக்காய்க்கு பதிலாக, நீளமாக நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.
விருப்பப்பட்டவர்கள் துளி வெல்லம் சேர்த்து செய்தால், புளியின் எரிப்பின்றி சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குழப்பு மிக மிக மிக....... அருமை செல்வி. நேற்று லன்ச்க்கு இந்த குழம்பு செய்தேன். ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. எங்க எல்லாருக்கும் இந்த குழம்பு ரொம்ப பிடித்து இருந்தது. Thanks.

amma
தென் கொரியா விலும் இப்போ சம்மர் சீச்சன், சுரைக்காய் கிடைகிறது இன்று உங்க குறிப்பை பார்த்து சமையல் செய்தேன் படு super! thank you
Valarmathy

with regards
valar

செல்விக்கா நல்லா இருக்கீங்களா? இன்னைக்கு சுரைக்கா தட்டப்பயிறு குழம்பு வைத்தேன். அருமையா இருந்தது.ரொம்ப சூப்பரா வந்தது. உங்களோட இந்த குறிப்பு எத்தனையோ தடவை செஞ்சிட்டேன். ஒவ்வொரு தரம் செய்யும் போது உங்கள பாராட்டாம இருக்க முடியாது. என் கணவர் கிட்ட சொல்வேன்.சாப்பிடும் போதும் உங்கள நினைச்சுக்குவேன்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

இப்பொழுதான் நான் இந்த குறிப்பைப் படித்தேன் மிகவும் சுவையாக சமைக்க உங்கள் குறிப்பு உதவியது.

நான் கிச்சன் பக்கம் போவதென்றாலே அறுசுவை டாட் காம் உள்ளே நுழைந்தபின்தான் போவது வழக்கம். நன்றி!

nanban

வணக்கம் செல்வி,

உங்கள் குறிப்புகள் எல்லாம் படு சூப்பர். இந்த குழப்பு மிக மிக மிக....... அருமை செல்வி. நீங்கள் குறிப்பிட்டது போல் வெல்லம் சேர்த்தவுடன் சுவை கூடி விட்டது. படு வேகமாக குறிப்பு கொடுத்து அசத்துறீங்க. அடுத்த செஞ்சுரியன் நீங்கள்தானா?.

என்ன தான் நான் குறிப்புகள் கொடுத்தாலும் அதை செய்யும் விதத்திலும் சுவையுள்ளது. அந்த வகையில் நீங்கள் நன்றாக செய்துள்ளீர்கள் என்று தெரிகிறது. எனக்கு தெரிந்த குறிப்புகள் என்னோடு போகாமல் உங்களைப் போன்ற பலருக்கும் பயனுள்ளதாயிருக்க வேண்டுமென்று தான் நான் குறிப்புகளை கொடுத்து வருகிறேன். இதில் என்ன அழகு என்றால் என் பெண்ணே, எனது குறிப்புகளை அறுசுவை.காம் மூலமாக தான் காப்பி எடுத்து வருகிறாள். உங்களைப் போன்றோரின் வாழ்த்துகள் தான் என்னை மேன்மேலும் எழுத தூண்டுகிறது. மிக்க நன்றி.

அன்புடன்,
செல்வி.

இன்னைக்கு மதியம் சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு செய்தேன்மா ரொம்ப நல்லா இருந்தது... அதே சாப்பிட்டதும் எனக்கு எங்க மாமியார் ஞாபகம் வந்துருச்சுமா....அவங்க இந்த குழம்பு செய்தா அந்த வாசனை ஊரையே தூக்கும் ரொம்ப நல்லா சமைப்பாங்க... அவங்க இனனும் மசாலா கொஞ்சம் செப்பாங்கா...என் கணவருக்கும் இந்த குழம்பு ரொம்ப பிடித்து இருந்ததுமா...நன்றிமா

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

அன்பு ஹாசினி,
நலமா? ஆஹா, மாமியார் ஞாபகத்தை வரவழைச்சிடுச்சா? உன் கணவருக்கும் பிடிச்சதில் சந்தோஷம். பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அக்கா,

இந்த குழம்பு செய்தேன். நன்றாக இருந்தது. தேங்காய் சேர்க்கவில்லை. புளிக்கு பதில் தக்காளி சேர்த்தேன். நீங்கள் தனியான்னு சொல்லறது நம்ம ஊர் மசால் பொடி தானே? எங்க வீட்டில் இந்த குழம்பு மிகவும் ஸ்பெசல். அந்த காலத்தில், தோட்டத்தில் சாப்பிடும் பொழுது அம்மாவும் மாமாவும் கருப்பட்டி பொடி மேலேதூவி சுட சுட சாப்பிடுவார்களாம். நான் அவ்வாறு சாப்பிட்டதில்லை.

அன்பு கவின்,
தனியாங்கிறது கொத்தமல்லி பொடி. அவங்க சாப்பிட்டது சரிதான், அதுக்குப் பதிலா தான் கொஞ்சமா வெல்லம் சேர்த்துக்கிறோம். இந்த குழம்பு சூடு பண்ணி, சூடு பண்ணி சாப்பிட்டா தான் சுவையே அதிகரிக்கும்.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வியக்கா,
நேற்று லன்ச்க்கு இந்த குழம்பு செய்தேன். ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. எப்பவும் சுரைக்காய் வாங்கினால், அதில் கூட்டு அல்லது மோர் குழம்புதான் வைப்பேன். இந்த குழம்பு ரொம்ப வித்தியாசமாக நல்லா ருசியா இருந்தது. என் ஹஸ்ம் ரொம்ப விரும்பி சாப்பிட்டார். இனி அடிக்கடி இந்த குழம்பு எங்க வீட்டில் உண்டு. இந்த சுவையான குறிப்புக்கு ரொம்ப தேங்ஸ் அக்கா!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு ஸ்ரீ,
பாராட்டுக்கு நன்றி. அடடா, நீ ரொம்பவே மிஸ் பண்றே. சுரைக்காயில் பால் கறி, மட்டன் குழம்பு போல, பொரியல், கோஃப்தா எல்லாமே செய்யலாம். என்னுடைய குறிப்புகளே உள்ளன. அடிக்கடி செய்ய போவதில் மகிழ்ச்சி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

--

அன்பு ஸ்ரீ,
நான் செய்வது போலவே கலர். நான் காயை சின்னதாக நறுக்கி போடுவேன், இது பெரிசா இருக்கு. அதுதான் வித்தியாசம். பாராட்டுகள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.