தள தள தக்காளி தோசை

தேதி: November 29, 2008

பரிமாறும் அளவு: 4 , 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

புழுங்கல் அரிசி (அ) இட்லி அரிசி - இரண்டு டம்ளர்
பச்சரிசி - அரை டம்ளர்
காய்ந்த மிளகாய் - ஆறு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - நான்கு பற்கள்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் - இரண்டு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு கப்
உப்பு - மாவு கலக்க தேவையான அளவு
சின்ன வெங்காயம் - பத்து
தக்காளி - நான்கு
எண்ணெய் + நெய் - தோசை சுட தேவையான அளவு


 

அரிசிவகைகளை களைந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
தக்காளியை நான்காக நறுக்கி மிக்ஸியில் லேசாக கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், வெங்காயத்தையும் கொர கொரப்பாக திரித்து கொள்ளவும்.
இப்போது ஊறிய அரிசியை கிரைண்டரில் போட்டு அதனுடன் தக்காளி கலவை, கொர கொரப்பாக திரித்தது அனைத்தையும் போட்டு நன்கு ஆட்டவும், தேங்காய் துருவலையும் சேர்த்து ஆட்டவும்.
நல்லா எல்லா கலவையும் சேர்ந்து மையாக அரைந்ததும் அதில் தயிர், உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
ரொம்ப புளிக்க தேவையில்லை காலையில் அரைத்து இரவு டிபனுக்கு சுடலாம்.
மொறுகளாகவோ அல்லது தடிமனாகவோ அவரவர் விருப்பபடி சுட்டு சாப்பிடவும்.


இந்த தோசையில் பல சத்துள்ள பொருட்கள் சேருகிறது. வாரம் ஒரு முறை செய்து சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு ரொம்ப நல்லது, குழந்தைகளுக்கும் ஒரு சத்தான தோசை.
தொட்டு கொள்ள மிளகாய் பொடி, பொட்டுகடலைக் துவையல், மட்டன் (அ) இறால் தொக்கு. ஏன் சும்மா சர்க்கரை(அ) வெல்லம் தொட்டு சாப்பிடலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலா அக்கா(அப்படி கூப்பிடலாமா?),இந்த தோசையில் தக்காளி சேர்த்து அரைத்து இரவு வரை வைத்து சுட்டால் வாடை வராதா? ஏனெனில் நாம் பச்சையாக தக்காளி,வத்தல் சேர்த்து அரைக்கும் சட்னி 6 மணிநேரத்தில் சளித்துவிடுகிறதே அதனால் தான் கேட்கிறேன்.இல்லையெனில் உடனே சுடலாமா?
புள்ளத்தாச்சி பொண்ணு கேட்கிறேன் உடனே சொல்லுங்கள் (அய்யோ சும்மா சொன்னேன் உங்களுக்கு டைம் கிடைக்கும் போது சொன்னால் போதும்)

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உமா ராஜ் என்ன மசக்கையா ஒரு சூப்பர் ரெஸிபி ஒன்று தருகிறேன், செய்து சாப்பிடுங்கள்.
1. நெல்லிக்காய் கூட வேக வைத்து தேனில் போட்டு சாப்பிடலாம்.
2. தள தள தக்காளி தோசை கையை போட்டு கலக்க வேண்டாம்.
மதியம் அரைத்து இரவு சுட்டு சாப்பிடலாம்.
கெட்டு போகாதது. தயிர் , தக்காளி சேர்ப்பதால் புளிக்க கூட தேவையில்லை

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா தள தள தக்காளி தோசை செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது.தேங்ஸ் :-)). பொட்டுக்கடலை சட்னி வைத்து சாப்பிட்டேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா எனக்கு அருசுவை சுத்தமா ஓப்பன் ஆகல பிராப்ளம்.

எல்லாம் எப்படி இருகீங்க

ஜலீலா

Jaleelakamal

புளிப்பு என்றாலே என் நா ஊரும். அப்படி இருக்கும் நான் கர்பமானால் கேட்கவா வேண்டும். அறுசுவையில் உள்ள அனைத்து புளிப்பு ரெசிபியும் தேடி பிடித்து செய்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன். உங்கள் "தக்காளி தோசை" பார்த்தவுடன் ஒரே ஆசை வந்து விட்டது. எங்கே இருந்து தான் எவ்ளோ அழகான பெயர் தேடி கண்டு பிடிதீர்களோ.....பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது.....நான் செய்து சாப்பிட்டது போதாதென்று வேறுஒரு கர்பிநிக்கும் கொடுக்க நேர்ந்தது. உங்கள் தோசை சூப்பர். உங்களின் blog அருமை. தொடரட்டும் உங்கள் பனி.

லாவண்யா

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தள தள தக்காளி தோசை.

செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி லாவன்யா.

புது வரவா? ஊர் போய் நேற்று தான் வந்தேன்.

//இதை சாப்பிட்ட இரண்டு கர்பிணி பெண்களும் தள தளன்னு குழந்தையை பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்.//

ஆமாம் இதற்கு ஏன் தள தள என்று வைத்தேன் என்றால், தக்காளியை வட்டவடிவமா அரிந்து சர்குலர் மூமெண்ட்டில் முகத்துக்கு தேய்த்தால் முகம் தள தளன்னு ஆகிடும்.

அதே போல் தோசையும் பார்க்க நல்ல இருக்கும் வெளியில் முகத்துக்கு தேய்க்கும் போதே நல்ல இருக்கு, இது உள்ளே சென்றால் ம்ம் சூப்பர் தான்.

Jaleelakamal

நான் சில மாதங்களாக அறுசுவையில் வெறும் பார்வையாளர் மட்டும் தான்....அதற்க்கு காரணம் எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது. பின்பு ஒரு நாள் அறுசுவையின் சகோதரி ஒருவர் கூகிள் எழுத்துதவி பற்றி கூறிருந்தார்...அதன் பிறகு தான் எந்த குடும்பத்தின் அங்கத்தினர் ஆனேன்.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி. குழந்தை பிறந்ததும் சொல்கிறேன்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!