சிக்கன் குடமிளகாய் மசாலா

தேதி: January 7, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கோழிக்கறி - 1/2 கிலோ,
குடமிளகாய் - 4 (நடுத்தர அளவு),
பெரிய வெங்காயம் - 4,
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
கார்ன்ஃபிளார் மாவு - 2 மேசைக்கரண்டி,
சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி,
எலுமிச்சம் பழ சாறு - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.


 

கோழியை சுமாரான துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
வெங்காயத்தையும், குடமிளகாயையும் அரை அங்குல துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சோயா சாஸ், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைக்கவும்.
சிக்கன் நன்கு வேகும் வரை இருக்க வேண்டும். தேவைப்பட்டால், ஒரு கை தண்ணீர் தெளிக்கலாம்.
வெந்ததும் இறக்கி வைத்து விட்டு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தையும், குடமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம், குடமிளகாய் நன்கு வதங்கியதும் வேக வைத்த சிக்கனை கொட்டி கிளறவும்.
கார்ன்ஃபிளார் மாவைத் தூவி நன்கு கிளறி இறக்கவும்.


சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹேய் செல்வியக்கா
என்னோட சிக்கன் மசாலாவும் அசல் இதுவே தான் சோயா சாஸ் மட்டும் சேத்ததில்ல.ஆச்சரியமா இருக்கு

ஹாய் தளிகா,
நலமா? ரீமா எப்படி இருக்கா?
ஏம்ப்பா, இது எனக்கு மட்டுமே தெரிந்த குறிப்பா? இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு? உலகத்தில ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்ற போது (நிஜமா?) இது சாத்தியப்படாதா:-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா இந்த சிக்கன் மசாலாவை செய்து பார்த்தேன். செய்வதற்கு எளிதாகவும், மிகவும் நன்றாக இருந்தது. எண்ணெய் குறைந்த அளவில் தேவைப் பட்டது கூடுதல் ஹை லைட். நன்றி

அன்பு வானு,
பாராட்டுக்கு நன்றி.
நான் எப்போதும் குறைந்த அளவு எண்ணெய் மட்டுமே உப்யோகிப்பேன். இதில் இன்னும் குறைவு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்வி
சிக்கன் குடமிளகாய் மசாலா செய்தேன் .எளிமையாக அதே சமையம் டேஸ்டாக இருந்தது.இரண்டு முறை செய்தேன்.படம் அனுப்பி இருக்கிறேன் .மிகவும் நன்றி.

அன்புடன் பர்வீன்.

அன்பு பர்வீன்,
அதற்குள் இருமுறை செய்தாச்சா? சுலபம்கிறதாலேயே நானும் அடிக்கடி செய்வேன். படம் எடுத்ததற்கும், பாராட்டிற்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. பர்வீன் அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த சிக்கன் மசாலாவின் படம்

<img src="files/pictures/kodai_chicken.jpg" alt="picture" />