க்ரீம் காளான் சூப்

தேதி: December 8, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நறுக்கிய காளான் - ஒரு கோப்பை
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
மைதா - ஒரு மேசைக்கரண்டி
வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
வெஜிடபிள் ஸ்டாக் - இரண்டு கோப்பை
தண்ணீர் - ஒரு கோப்பை
கிரீம் - அரைக்கோப்பை
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - அரை தேக்கரண்டி


 

அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு உருக ஆரம்பித்தவுடன் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயத்தை அதன் நிறம் மாறாமல் வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய காளானைப் போட்டு வதக்கவும்.
பிறகு மைதாமாவை போட்டு நன்கு வறுக்கவும். மாவின் பச்சை வாசனை நீங்கியவுடன் தண்ணீரையும், வெஜிடபிள் ஸ்டாக்கையும் சேர்த்து ஊற்றி நன்கு கலக்கவும்.
சூப் சற்று கெட்டியாக ஆகும் வரை கலக்கி விட்டு அடுப்பின் அனலை குறைத்து வைத்து மூடியைப்போட்டு வேகவிடவும்.
பத்து நிமிடம் கழித்து உப்புத்தூள், மிளகுத்தூளைப் போட்டு, க்ரீமை ஊற்றி கலக்கி சூடாக பரிமாறவும்.


சூப்பை தயாரித்தவுடன் உடனே பரிமாற தேவையில்லை என்றால் தயாரித்த சூப்பில் உப்புத்தூள், மிளகுத்தூள் மற்றும் க்ரீமை சேர்க்காமல் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தேவைப்படும் பொழுது சூடாக்கி மேற்கண்ட பொருட்களைச் சேர்த்து பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வெஜிடேபிள் ஸ்டாக் என்றால் என்ன?எங்கு கிட்டும்

i love ganesh babu

சிம்பிளான சூப்பர் சுவையுள்ள சூப் ரெசிப்பி இது.செய்து பார்த்தாச்சு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹல்லோ டியர் ஆசியா எப்படி இருக்கீங்க? இந்த சூப் நீங்க கூறியதுப் போல் ரொம்ப ஈஸியாக செய்துவிடலாம்,தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

அட்மின்கு சூப் போட்டோ அனுப்பியுள்ளேன்,இணைத்த்பின் பாருங்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

திருமதி. ஆசியா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த காளான் சூப்பின் படம்

<img src="files/pictures/soup4.jpg" alt="picture" />

அனுப்பிய பின்னூட்ட போட்டோ இணைத்தமைக்கு மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சூப் படமும்,கேக் படமும் அட்மின் இணைத்திருக்கிறார்.பார்த்தீர்களா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

டியர் ஆசியா இந்த காளான் சூப் ரொம்ப நல்லா வந்திருக்கின்றது என்பது படத்திலேயே தெரிகின்றது, தங்களின் உற்சாகமான ஆர்வத்திற்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இதனால் எனக்கு இன்னும் பல ரெஸிப்பிக்களை எழுதவும் ஆவல் பிறக்கின்றது. பின்னூட்டங்களுக்கும், படங்களுக்கும் மிக்க நன்றி.