ஈசி தக்காளி குருமா

தேதி: January 20, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

தக்காளி - 4,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி,
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 5,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 தேக்கரண்டி.


 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கவும்.


சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

take life as it comes
நல்லா இருக்கீங்களா? முதல்ல உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா. அப்பறம் நீங்க கொடுத்த இந்த ஈஸி தக்காளி குருமா செய்தேன் அதன் பெயர் போலவே ரொம்ப ரொம்ப ஈஸிமா.இட்லிகூட சாப்பிட்டோம் நல்லா இருந்துச்சு.என்னாடா இவ இந்த குருமாவ செய்துட்டே இப்படி பீத்திகிறாலேன்னு பாக்குரீங்களா எனக்கு இது அவ்வளவு சந்தோஷமா இருக்கு உங்களால எனக்கு கிடைத்த பாராட்டுக்கள்.எந்த ஒரு விஷயமும் நாம செய்து அடுத்தவங்க பாராட்டினா அவ்வளவு சுகமா இருக்கும் இல்ல அதுவும் சாப்பாடு விஷயத்துல டபுள் சந்தோஷமா இருக்கும்.

take life as it comes

அன்பு சுப்ரியா,
அறுசுவைக்கு உன் வரவு நல்வரவாகுக. அதற்குள் தமிழில் டைப் அடிக்க கற்றுக் கொண்டது பெரிய விஷயம். அதுக்கும் பாராட்டுக்கள்.
குறிப்பை செய்து பார்த்தது மட்டுமின்றி, பின்னூட்டமும் கொடுத்துள்ளது மிக்க சந்தோஷம். நான் கொடுத்த குறிப்பை விட, அதை செய்யும் விதமும் முக்கியம். அதை நீ சரியா செய்ததாலேயே சுவை. அதனால் உன்னைப் பாராட்டியது பொருத்தமே. இது என்று இல்லை, எனது எல்லா குறிப்புகளுமே சுலபமாத்தான் இருக்கும்.
உனது பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி. மீண்டும் பேசுவோம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இன்று உங்களின் தக்காளி குருமா செய்தேன். என் கணவருக்கும், என் பொண்ணுக்கும் மிகவும் பிடித்திருந்தது. நன்றி. வத்தல் குழம்பு செய்வது எப்படி என்று உங்களுக்கு நேரம் கிடைகும் போது சொல்லவும்.

இது என்னுடைய முதல் Feedback.

அன்புடன்
லக்ஷ்மி

அன்புடன்
லக்ஷ்மி

ஹாய் லக்ஸ்,
எப்படியிருக்கீங்க? நான் தேவைலை. கொஞ்சம் உடம்பு சரியில்லாததால உடனே பதில் கொடுக்க முடியல.
உங்களோட பாராட்டுக்கு நன்றி. உங்க குடும்பத்துக்கே பிடித்திருந்தது கண்டு மகிழ்ச்சி. சமைத்து பார்த்தது மட்டுமன்றி பின்னூட்டமும் அளித்த உங்களின் பண்புக்கு நன்றி. முதல் பதிவே பாராட்டுடன் தான். நல்ல தமிழ்.
நன்றாகவுள்ளது.
வத்தல் குழம்பு செய்யும் முறை இந்த லின்க்-ல் உள்ளது. பார்க்கவும். http://www.arusuvai.com/tamil/node/3427
இன்னும் 2 முறைகளுள்ளன. உடம்பு சரியானதும் தருகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நேத்து எங்க வீட்டுல உங்க குருமாதான். என்னோட கணவருக்கு எப்போதும் தக்காளி தொக்குதான் வேணும் சப்பாத்திக்கு... எனக்கு அத சப்பாத்திக்கு சாப்ட்டு அலுத்து போச்சு..

மசாலா குருமால்லாம் செஞ்சா என் கணவர் சாப்பிடவே மாட்டாங்க..உங்க குருமா நேத்து செஞ்சேன்... ரொம்ப நல்லா வந்தது.. அதவிட அதிசயம் என்னவருக்கு பிடிச்சிருந்தது :-). நன்றி மேடம்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

நல்லாயிருக்கீங்களா. உடம்பு இப்போ எப்படி இருக்கு. நான் தக்காளி குருமாவானு பார்த்தா ஈஸி தக்காளி குருமானு போட்டுருக்கு. சரி இதை இன்னைக்கு செஞ்சிருவோம் ரொம்ப ஈஸிதானேனு செஞ்சிட்டேன். ரொம்ப நல்லாயிருக்கு டெஸ்ட்பண்ணி பார்த்தேன். ஹஸ் வந்ததும் சப்பாத்தி போடனும்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு தனிஷா,
பாராட்டுக்கு மிக்க நன்றி. செய்வதும் ரொம்ப ஈசி. ருசியும் நல்லாயிருக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எப்படி இருக்கீங்க?

இதை எப்பவோ நோட் செய்துட்டேன் இன்றுதான் செய்யும் டைம் வந்தது சூப்பரா ஈஸியா இருந்தது தேங்ஸ்க்கா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழி,
ஈசியா இருக்கும் இதன் செய்முறை.
டேஸ்டாகவும் இருக்கும்.
ரொம்ப நன்றிப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சங்கீதா,
இது எனக்கு என் தோழி சொல்லிக் கொடுத்த குறிப்பு. அவங்க மசாலா சாப்பிட மாட்டாங்க. அதனால் மசால் வாசனை இல்லாமல் இருக்கும்.
உங்க கணவருக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விமா இன்னைக்கு உங்க தக்காளி குருமா செய்தேன்.. பன்ன ரொம்ப ஈசியா இருந்ததுமா...அப்புறம் வெள்ளை குருமா பட்டானிபோட்டு செய்வாங்கலேமா அது லிங் இருந்தா குடுங்கமா...நன்றிமா

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

அன்பு ஹாஷினி,
ரொம்ப சுலபமா செய்யறதினாலேயே அதுக்கு இந்த பேரை வெச்சேன். வெள்ளை குருமா லிங்க பார்க்கிறேன். இல்லைன்னா, புதுசா தந்துடறேன். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் மேடம்,
இன்று தோசைக்கு தக்காளி சட்னி-3 பிளஸ் ஈசி தக்காளி குருமாவும் செய்தேன். வெரி வெரி டேஸ்டி அண்ட் ஈசி சாப்பிடு&செய்,வதற்கும்.

இப்படிக்கு
இந்திரா

indira

ஹாய் இந்திரா,
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஈசி தக்காளி குருமா செய்தேன் .நல்லாஇருந்துச்சு.
thank you very much செந்தமிழ்செல்வி

அன்பு தோழிகளே,

ஹாய் விஜி,
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி. இந்திரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த தக்காளி குருமாவின் படம்

<img src="files/pictures/tomato_kuruma.jpg" alt="picture" />

இந்திரா,
நல்ல அழகு அழகா படம் எடுத்திருக்கீங்க! நன்றி அட்மின் & பாபு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி மேடம் நான் தங்களின் குறிப்பின் படி குருமா செய்து பார்த்தேன்..ரொம்ப ஈசியாக இருந்தது..டேஸ்ட் நல்லா இருந்தது.. என் ஹப்பி விரும்பி சாபிட்டார்..நன்றி..மேம்..

அன்புடன்
ஷராபுபதி

அன்பு ஷரா(எவ்வளவு முயன்றும் ஷ-க்கு பக்கத்தில் கால் வரமாட்டேங்குது:-(),
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்க ஹஸ்ஸுக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. உண்மையில் சிரமமில்லாமல் இந்த குருமா செய்யலாம். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செந்தமிழ் மேடம்,

இன்று நான் உங்களுடைய ஈசி தக்காளி குருமா செய்து பார்த்தேன். சுவை மிக நன்றாக இருந்தது. இது ஈசி மற்றும் இன்ஸ்டன்ட் குருமாவாக இருக்கிறது. மிக்க நன்றி.

லீலா நந்தகுமார்.

Leela Nandakumar

அன்பு லீலா,
அவசரமாக செய்யவும், ருசியும் நல்லா இருக்கும். உங்களுக்கும் பிடித்தது மிக்க மகிழ்ச்சி. நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அம்மா, நேற்று உங்கள் ஈசி தக்காளி குருமா செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.சுலபமகவும் இருந்தது.உங்கள் Photo வை பார்த்தேன்.இப்பொது எனக்கு ஒரு குழப்பம்.உங்களை அம்மா என்று சொல்வதா அல்லது அக்கா என்று சொல்வதா!
ப்ரீதா

ப்ரீதா

அன்பு ப்ரீதா,
பாராட்டுக்கு நன்றி.
படத்தைப் பார்த்துட்டெல்லாம் குழம்ப கூடாது. அது ஏமாற்றும். உனக்கு எப்படி பிரியமோ அப்படி கூப்பிடு 27 வயசுக்குள்ளன்னா, அதுக்கக மேலேன்னா அக்கான்னே கூப்பிடலாம்:-))
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.