பச்சை பட்டாணி கிரேவி

தேதி: April 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

பச்சை பட்டாணி - 1 1/2 கப்
வெங்காயம் - 1/4 கிலோ
எண்ணெய் - தாளிப்புக்கு
உப்பு - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 3
கருவா - ஒரு துண்டு
ஏலம் - 2
கிராம்பு - 2
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
மஞ்சள் தூள் - சிறிது
மசாலாதூள் - சிறிது


 

முதலில் பச்சை பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து தோலை நீக்கிகொள்ளவும்.

வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும்.

பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தளித்து பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து,பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

பின் தக்காளியை சேர்த்து வதக்கி,மஞ்சள் தூள், மசாலாதூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம்,தக்காளி நன்கு வதங்கியதும் பச்சை பட்டாணியை போட்டு வதக்கவும்.

பட்டாணியில் நன்கு மசாலா அனைத்தும் சேர்ந்ததும் கிரேவி போல் ஆனதும் இறக்கவும்.


தேங்காய் பால் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம்.வெங்காயம் நிறைய சேர்த்தால் தான் சுவையாக இருக்கும்.இதை சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கதீஜா, பச்சை....பட்டாணிக் கிரேவி செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. நான் தக்காளி சேர்க்கவில்லை. கொஞ்சம் பால் சேர்த்தேன் படம் வரும் பாருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எப்படி இருக்கீங்க. பச்சை பட்டாணி கிரேவி நல்லா இருந்ததா செய்து பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றி.எனக்கு உடம்புக்கு முடியலை கர்ப்பமாக இருக்கிறேன் அதனால் முடியும் சமயம் வந்து பதில் போடுகிறேன்.

அன்புடன் கதீஜா.

கதீஜா,
என்னுடைய வாழ்த்துக்கள், அதுதான் நீங்கள் நீண்ட நாட்கள் வரவில்லையோ? நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். உங்களால் முடியும்போது வந்து பதில் கொடுத்தால் போதும். எதுவும் அவசரமில்லை. மகன் எப்படி இருக்கிறார்? அழாமல் ஸ்கூலுக்குப் போகிறாரோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.கண்டிப்பாக எனக்கு முடியும் போது வந்து பதில் கொடுப்பேன். மகன் நல்லா இருக்கிறார்.

அன்புடன் கதீஜா.

கதிஜா நலமா
உடம்பு நல்ல இருகா, சமைத்து அசத்தலாம் 5 ஆம் பகுதி எடுத்து தரமுடியுமா?
ஜலீலா

Jaleelakamal

கதிஜா நலமா
உடம்பு நல்ல இருகா, சமைத்து அசத்தலாம் 5 ஆம் பகுதி எடுத்து தரமுடியுமா?
ஜலீலா

Jaleelakamal

கதிஜா நலமா
உடம்பு நல்ல இருகா, சமைத்து அசத்தலாம் 5 ஆம் பகுதி எடுத்து தரமுடியுமா?
ஜலீலா

Jaleelakamal

கதீஜா கிரேவி நன்றாக இருந்தது நன்றி.

சுரேஜினி

கிரேவி செய்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

கதீஜா
பட்டாணி கிரேவி ரொம்ப சுவையாக வந்தது. நான் சிறிது தேங்காய் பால் விட்டேன்.
என் ஹஸ் சப்பாத்தி போடும் வரை பொறுமையின்றி பிரட் கூடவெ சப்பிடு விட்டார்.

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

பட்டாணி கிரேவி நல்லா இருந்ததா.உங்க ஹஸ்ஸுக்க்கு பிடித்தது சந்தோஷம்.செய்து பாருத்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த பச்சை பட்டாணி கிரேவியின் படம்

<img src="files/pictures/aa107.jpg" alt="picture" />

நான் நலம்.உங்க பையன் உடம்பு சரியாகிட்டா.தேடி அனுப்புறேன் லிங்

அன்புடன் கதீஜா.