தூனா மீன் வதக்கல்

தேதி: February 20, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தூனா மீன் - 1 டின் சிறியது
தக்காளி - 4 மேசைக்கரண்டி
வெங்காயம் - பாதி(பெரியது)
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிப்புக்கு
மசாலா தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
பச்சைமிளகாய் - 1


 

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
தூனாமினை டின்னில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு தனியாக வைக்கவும்.
பின் அடுப்பில் சட்டியைவைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் சீரகம் போடவும்,பின் கருவேப்பிலை,வெங்காயம் போட்டு தாளித்து வெங்காயம் நன்கு வதங்கியதும்,தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
பின்மசாலாதூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி,கீறிய பச்சைமிளகாயை போட்டு நன்கு வதக்கவும் பின் மீனை போட்டு நன்கு வதக்கி குறைந்த தீயில் வைத்து வேகவிடவும்.தண்ணீர் சிறிது கூட சேர்க்கக்கூடாது. இடையில் கிளறிவிடவும்.
நன்கு வதங்கியதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சிரகம்,தக்காளி சேர்த்து செய்தேன்ப்பா.நான் இதுவரை செய்த தூனா மீன் வதக்கலில் உங்க குறிப்பு ரொம்ப நல்லா இருந்தது கதீஜா.

தூனா மீன் வதக்கல் நல்லா இருந்ததா அப்ப இந்த பாராட்டு என் ஹஸ்ஸுகு தான் சேரும். அவங்க தான் எனக்கு இந்த குறிப்பை செய்து தந்தாங்க. நான் ஊரில் இல்லாத சமயம் அவங்க சமையல் ட்ரை செய்தாங்களாம் அப்பொழுது இந்த டிஷ் ட்ரை செய்தாங்களாம்.நல்லா இருந்ததுன்னு எனக்கு செய்து தந்தாங்க எனக்கும் இந்த சுவை பிடிக்கும்.குறிப்பு செய்ததுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.