பெண்களுக்கு பெரிய அளவில் சமைக்கத் தெரியுமா?

தலைப்பு தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க. ரொம்ப நாளா ஒரு சந்தேகம். நேத்து என் ரூம்மேட்டுகூட பேசிகிட்டு இருந்தப்ப பேச்சு பெரிய விவாதமா போச்சு. சமையல் அப்படின்னா அது என்னமோ பொம்பளைங்க சமாச்சாரம் (டி.வி யில சொல்ற மாதிரி), ஆம்பளைக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லைங்கிற மாதிரி ஒரு தோற்றம் இருக்கு. பெண்கள் பத்திரிக்கை, பெண்கள் சிறப்பு டி.வி நிகழ்ச்சி, பெண்கள் இணையத்தளம் இப்படி பெண்கள் சம்பந்தப்பட்ட எல்லா மீடியாவும் சமையலுக்கு பெரிசா இடம் ஒதுக்கி பெண்கள்னா சமையல், சமையல்னா பெண்கள் ன்னு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிட்டு வருது.

உண்மை என்னன்னு பார்த்தீங்கன்னா, அன்னைய காலத்திலேர்ந்து, இன்னைய காலம் வரைக்கும் ஆண்கள்தான் சமைக்கிறதுல பெரிய ஆளா இருக்கிறாங்க. நளபாகம், பீமபாகம் ன்னுதான் சொல்லுறாங்களே தவிர, எங்கேயாவது நளாயினி பாகம், பாஞ்சாலி பாகம், சீதா பாகம்னு சொல்லியிருக்காங்களா? ஹோட்டல், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால்ஸ் இப்படி எங்க பார்த்தாலும் மாஸ்டர் யார்னு கேட்டா ஆண்கள்தான். எந்த கல்யாணத்துக்காவது பெண்கள் சமைக்கிறாங்களா? இன்னைக்கு கேட்டரிங் கோர்ஸ் முடிச்சிட்டு உலகம் முழுக்க வேலை பார்க்கறது ஆண்கள்தான். பெண்கள் கேட்டரிங் சேர்றதே பெரிய விசயமா இருக்கு. எனக்கு தெரிஞ்சு ஊறுகாய் வத்தல் வடாம் போடுறது, முறுக்கு சுத்தறதுதான் பெண்கள் கொஞ்சம் பெரிசா செய்யுற விசயம். உண்மை நிலவரம் இப்படி இருக்கறச்ச, ஏன் எல்லா மீடியாவும் சமையல்னா பெண்களுக்கு முக்கியத்துவம் தர்றாங்க?

பெரிய அளவில் சமைக்காவிட்டாலும், எல்லாப் பெண்களுக்கும் சமைக்கத் தெரியும். எல்லா ஆண்களுக்கும் சமைக்கத்தெரியுமா? நீங்கள் சமைத்து நாங்கள் சாப்பிடத்தான் முடியுமா?

எல்லாம் சாதாரணமாக நடக்கும் போது ஏதோ ஒன்று வித்தியாசமாக நடந்தால்தான் சிறப்பாக பேசுவோம். அப்படிப் பார்த்தால் அந்த காலத்திலிருந்தே ஏதோ சில ஆண்கள் மட்டும் தான் சமையலில் பிரசித்தி பெற்றுள்ளார்கள். அதனால் தான் நளபாகம், பீமபாகம் எல்லாம். ஆனால் நூற்றுக்கு தொன்னூற்றைந்து பெண்கள் நன்றாக சமைப்பார்கள். யார் பெயரை சிறப்பாக போடுவது? அது போல் ஆண்கள் எப்படி வெளியில் போய் சம்பாதிக்க வேன்டியது கட்டாயமோ அது போல் நாங்கள் சமைக்க தெரிந்திருக்க வேன்டியது அவசியம். அதனாலோ என்னவோ நாங்கள் சமையலில் சிறந்து விளங்க வேண்டிய கட்டயத்தில் இருக்கிறோம். ஒண்ணு தெரியுமா? கல்யாணத்திற்க்கு சமைப்பவர்களும், பைவ் ஸ்டாரில் வேலை செய்பவர்களும், பேக்கரியில் வேலை செய்பவர்களும் வீட்டில் பெண்கள் கையால் சாப்பிட்டால்தான் பிடிக்கும் என்று சொல்கிறார்களாம்.

Vazhga Tamil!!!

பெண்களுக்கு சமைக்கத் தெரியாதுன்னு நான் சொல்லவே இல்லை. எனக்கும் எங்கம்மா சமையல்தான் பிடிக்கும். என்னோட வாதம், பெரிய அளவில பெண்களுக்கு சமைக்கத் தெரியாது என்பதுதான். வீட்டுக்கு 10 பேர் விருந்தாளி வந்துட்டா எங்கம்மா சமையல் டேஸ்ட் மாறிப் போயிடும். அவங்க பழக்கம் 7 அல்லது 8 பேருக்குதான்.

சில ஆண்கள்தான் சமையலில் பிரசித்தின்னு சொல்றீங்க.. ஒத்துக்கிறேன். பிரசித்தி பெற்ற (அந்த காலப்) பெண்கள் ஒண்ணு ரெண்டு பேரை சொல்லுங்களேன் பார்க்கலாம்.

சரி உங்களுக்கு நல்ல சமையல் திறன் இருக்குன்னு வச்சிக்குவோம். எல்லாத் தொழில்லேயும் நுழைந்து ஆண்களோட போட்டி போடுற நீங்க, சமையல் தொழில்ல இறங்காதது ஏன்?

சகோதரி அனுஷா, நீங்க ஹோட்டல்ல எல்லாம் சாப்பிட்டதே கிடையாதா? அங்க் எல்லாம் யாரு சமைக்கிறதா நினைக்கிறீங்க..?

ஆண்களுக்கு பெண்கள் சமைத்துதான் சாப்பிட வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. வேறு யாராவது சமைத்து அதை உட்கார்ந்து சாப்பிட பிடிக்கும் அவ்வளவுதான். துர்அதிர்ஷ்டவசமாக பெண்கள்தான் எல்லா வீடுகளிலும் சமைக்கின்றார்கள். எந்த வேலையுமே செய்யாமல், வீட்டில பெண்கள் சும்மா இருக்கக்கூடாதே என்பதற்காக, போனாப்போகுது என்று நாங்கள் கொடுத்த வேலைதான் சமையல். அதில்கூட உங்களுக்கு பத்து வருடம் ஆன பிறகுதான் பக்குவம் வருகிறது.

ப்ரவீன்,
பெண்கள் உணவகங்களுக்கோ, கல்யாணங்களுக்கோ மற்றபடி பெரிய அளவில் சமைக்கப் போகாததற்கு காரணம் உடல்வலிமைதான். பெரிய பாத்திரங்களை தூக்கவோ, உணவுகளை கிண்டவோ முடியாததுதான் காரணம் என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள் கூறுவது போல் தெரியாமல் இல்லை. ஏனன்றால் இங்கு எல்லா விசேடங்களுக்கும் நாங்கள்தான் சமைத்துக் கொள்கிறோம். (மேற்கூறிய வேலைகளை ஆண்கள்செய்து தருவார்கள்). மற்றபடி வீட்டில்தான் அதைத்தான் செய்கிறோமே... ஏன் வெளியிலும் செய்ய வெண்டும் என்று அந்த வேலைகளுக்கு போகாமல் இருக்கலாம். இது என் கருத்துதான்.

Vazhga Tamil!!!

முத்துகுமார்,
உங்களைப் போல் நிறைய பெண்கள், பெண்கள் சமைப்பது துரதிஷ்டம் என்று நினைக்கிறார்கள். அப்படி யாரிடமாவது நீங்கள் மாட்டாமல் இருக்க கடவுளை ப்ரார்த்திக்கிறேன். ஆனால் உங்களை போன்று ஆண்களும் சமையல் விஷயங்களை பேசுவது மனதிற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

Vazhga Tamil!!!

கோவை R.S.புரத்தில் உள்ள நியூ ஆரியபவன் க்ளாசிக் ஹோட்டலில் முழுக்க முழுக்க பெண்கள் நிர்வாகம்தான். சமைப்பதில் இருந்து பரிமாறுவது வரை அனைத்தும் பெண்கள். இவர்களைப் பற்றி கட்டுரை ஒன்று வெகு விரைவில் அறுசுவையில் வெளியாகும். பெண்கள் உணவு விடுதிகளில் பணியாற்றுவதை நான் பல இடங்களில் பார்த்து இருக்கின்றேன். நாகையில் உள்ள மு.ரா அசைவ உணவகத்தில் பிரியாணி உட்பட அசைவ உணவுகள் அனைத்தையும் தயாரிப்பது ஒரு பெண்மணிதான். அறுசுவைக்கு நிறைய குறிப்புகள் கொடுத்துள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் பேக்கரி தொழிலுக்கு பெரிய திறமைத் தேவையில்லை. கேக்குகளின் மேலே செய்யப்படும் ஐசிங் வேலைதான் கொஞ்சம் கடினமானது. பழகும் வரை. மற்ற விசயங்கள் எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. முழுக்க முழுக்க formula தான். கொஞ்சம் கவனமாய் இருந்தால் போதும். பேக்கரிகளிலும் பெண்கள் பணியாற்றுவதை நான் பார்த்து இருக்கின்றேன்.

மிகப் பிரபலமான தலைமைச் சமையல்காரர் நாகை நாரயண அய்யரிடம் பேட்டி கண்ட போது அவர் குறிப்பிட்டது நினைவிற்கு வருகின்றது. அவர் வெளியூருக்குச் சமைக்கச் செல்லும்போது அந்த குடும்பத்து பெண்களிடம் அவர்களின் உணவுப் பழக்கம் கேட்டறிந்து அவர்கள் சொல்லுவதை வைத்துதான் சமைப்பாராம். இப்படி அவருக்கு குருவாக இருந்தவர்கள் அந்த பெண்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். (பார்க்க - http://www.arusuvai.com/tamil/node/97 )

சமையல் இருபாலருக்கும் பொதுவான கலை. இதில் ஆண்கள் பெரியவர்களா, பெண்கள் பெரியவர்களா என்றெல்லாம் தீர்ப்பு வழங்குவது மிகவும் கடினம். வேண்டுமானால், ஒரு ஆண், ஒரு பெண் இருவரையும் சமைக்க விட்டு, ருசி பார்த்து யார் சமையல் சிறப்பாக உள்ளது என்று தீர்ப்பு வழங்கலாம். ஆனால் அதுவே ஒட்டு மொத்த இனத்திற்கும் கொடுத்த தீர்ப்பாகிவிடாது.

அதுசரி பிரவீன், உங்கள் ஆதங்கம்தான் என்ன?

நீங்க சொல்ற அத்தனையும் நான் ஒத்துக்கிறேன். என்னோட கேள்வி பெரிய அளவில் பெண்களுக்கு சமைக்கத் தெரியுமா என்பதுதான். கேள்வி வந்ததற்கு காரணம் வீட்டுச் சமையலைத் தாண்டி பெண்களை வேற எங்கேயும் பார்க்க முடியலங்கிறதுதான். நீங்க சொன்ன ஒண்ணு ரெண்டு உதாரணம் எல்லாம் விதிவிலக்கு. திருமதி. சித்ரா செல்லதுரை அவர்கள் சொன்ன மாதிரி உடல் வலு ஒரு காரணமா இருக்கலாம். அந்த தகுதியும் கூடுதலா இருக்கிறதுனால ஆண்களுக்குதானே திறமை அதிகமாயிருக்கு. என்னோட ஆதங்கம் என்னன்னா.. இப்படி அந்த காலத்தில இருந்து சமையல் துறையில பேர் சொல்ற மாதிரி இருந்துகிட்டு வர்ற ஆண்களை ஒதுக்கிட்டு, சமையல் பெண்கள் சமாச்சாரம்னு எல்லாரும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது சரியா?

-

சமையல்ல ஆண்கள்தான் பெரியவர்கள் அப்படின்னு நீங்க எல்லாரும் ஒத்துக்கணும்.

மேலும் சில பதிவுகள்