இட்லி சாம்பார் (காய் சேர்த்து செய்வது)

தேதி: November 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. துவரம் பருப்பு - 1/2 கப்
2. வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
4. பச்சை மிளகாய் - 1 (கீரி வைக்கவும்)
5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
6. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. உப்பு
9. எண்ணெய் - 2 தேக்கரண்டி
10. கடுகு, சீரகம் - 1 தேக்கரண்டி
11. உளுந்து, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
12. பெருங்காயம் - சிறிது
13. கொத்தமல்லி, கருவேப்பிலை
14. கத்திரிக்காய் - 2 நறுக்கியது (அ) கேரட், பீன்ஸ் - நறுக்கியது 1 கப்


 

பருப்பு, வெங்காயம், தக்காளி, காய், பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விஸில் வைத்து சிறுந்தீயில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலை பருப்பு, உளுந்து, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
பின் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, குக்கரில் வைத்த சாம்பார், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.


பருப்பு குழைய வேக வேண்டும். இது இட்லி, பொங்கல், தோசை'க்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். காய் சேர்க்காமல் இதே போல் துவரம் பருப்பு அல்லது சிறுபருப்பிலும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இரவு இட்லி, தோசை செய்தேன். அதற்கு இந்த இட்லி சாம்பாரும், பூண்டுச்சட்னியும் செய்தேன். ரொம்ப எளிமையா இருக்கு சாம்பார் செய்ய. ரொம்ப சூப்பரா இருந்தது. நன்றிப்பா!

மிக்க நன்றி சாய் கீதா. எங்க அம்மா சொல்லி தந்தது. அவங்க பொங்கல் கூடா செய்தா எனக்கு ரொம்ப இஷ்டம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா இன்று நான் இட்லி சாம்பார் செய்தேன். தாளிக்கும் போது மட்டும் சாம்பார் பொடி சேர்த்தேன். மற்ற தூள் சேர்க்கவில்லை. நன்றி அக்கா

சாம்பார் பொடின்னு சொன்னாலே அதுல எல்லாம் கலந்துடும்... அதனால் மற்ற பொடி தேவை இல்லை. நல்ல வந்துச்சா?! உங்களுக்கு பிடிச்சுதா?! மிக்க நன்றி அரசி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கு காலையில் இட்லிக்கு இந்த சாம்பார் செய்தேன்,நல்லா இருந்தது,இட்லி சாம்பாருக்கு நாம் சிம்பிளா காய் இல்லாமதான் செய்தேன்.நல்லா இருந்தது,நீங்க சொன்ன மாதிரியேதான் என் வீட்டுகாரரும் சொன்னாரு,பொங்கல்க்கு இந்த சாம்பார் வைத்தால் நல்லா இருக்கும்னு. நன்றி வனிதா.

ஆமாம் கத்திரிக்காய் போட்டு வைத்தால் பொங்கலுக்கு பொருத்தமா இருக்கும். மிக்க நன்றி கவி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா இந்த சாம்பார் ரொம்ப அருமை. இன்னும் அவர் சாப்பிட்டுகொண்டே இருக்கார். நான் காய் எதுவும் சேர்த்தலை.

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிக்க நன்றி இலா :) காய் விரும்பினா சேர்க்கலாம், இல்லாமலும் செய்யலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சாம்பாருக்கு பொருத்தமா காய் இல்லை அதனால் சேர்க்கலை

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இந்த சாம்பார் ரொம்ப நன்றாக இருந்தது.

மிக்க நன்றி விஜி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா