ப்ரெட் க்ரம்ஸ் புரோக்கலி

தேதி: January 29, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

புரோக்கலி - இரண்டு
வெங்காயத்தாள் - நான்கு
பூண்டு - நான்கு
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
ப்ரெட் க்ரம்ஸ் - அரைக்கோப்பை
உப்பு - ஒரு தேக்கரண்டி
ஆலீவ் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
புரோக்கலியை மிகவும் சிறிய பூக்களாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைக்கவும். வெங்காயத்தாளை வெள்ளைப் பகுதியையும் சேர்த்து நீளதுண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சில்லி ஃப்ளேக்ஸையும் ப்ரெட் க்ரம்ஸையும் சேர்த்து சிவக்க வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அதன் பிறகு மீதமிருக்கும் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு, வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்திருக்கும் புரோக்கலியை சேர்த்து நன்கு வதக்கி விட்டு ஒரு கரண்டி தண்ணீரை தெளித்து உப்பைத் தூவி வேக வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து தண்ணீர் சுண்டியவுடன் நன்கு கிளறி விடவும்.
பிறகு வறுத்து வைத்திருக்கும் ப்ரெட் க்ரம்ஸை தூவி நன்கு கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.
சுவையான ப்ரெட் க்ரம்ஸ் புரோக்கலி ரெடி. சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். <b>திருமதி. மனோகரி</b> அவர்கள் வழங்கியிருந்த குறிப்பினைப் பார்த்து <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் இதனைத் தயாரித்து, செய்முறையை படங்களுடன் நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மனோகரி மேம் உங்க குறிப்பு சூப்பர்.அதை அழகா படம் பிடித்து செய்து காட்டிய கீதாவுக்கு என் பாராட்டு.நான் இந்த குறிப்பை செய்யனும் தான் நினைத்தேன் ப்ரொக்கலி இல்லாததால் செய்யவில்லை.ரொம்ப நல்லாயிருக்கு.

நல்ல இருக்கு உங்க ரெசிப்பி சூப்பர்.

Mb

மேனகா , மைதிலி
மிகவும் நன்றி.
அன்புடன்
கீதா ஆச்சல்

மனோகரி,
நேற்று இந்தக் குறிப்பு டீ நேரம் சமைத்தேன். சுவை மிக நன்றாக இருந்தது. ஆளாளுக்கு தட்டில் எடுத்து ஸ்பூனால் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். செய்வதற்கு சுலபமாக இருந்தது. பார்க்கவும் அழகாக இருந்தது. அதனால் நிச்சயம் இது எங்கள் வீட்டில் அடிக்கடி சமைக்கப்படப் போகிறது. குறிப்புக்கு நன்றி.
கீதாச்சல்,
நான் படம் பார்த்து, பிடித்திருந்தால் மட்டும் சமைக்கிற ஆள். ;-) அழகாக செய்து காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
குறிப்புத் தேடி உதவிய கீர்த்திகாவுக்கும் நன்றிகள்.;-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

கீதா உங்களுக்கே நியாயமா?நீங்க இப்படி வித விதமா குறிப்புக்கள் கொடுத்து எல்லாரையும் சாப்பிடத் தூண்டுறீங்க :-)) ஆனா உங்களுக்கு மட்டும் உடல் இளைக்கணுமா? :-((

(உபயம்: அங்காயப் பொடி)Ha ha

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

இமா,
மிகவும் நன்றி.
உத்ரா
இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் பா…இப்படி கலாக்கிரிங்க…பாரவாயில்லை ..என்னுடைய தோழி தானே சொல்லுறிங்க…மிகவும் நன்றி பா...
அன்புடன்,
கீதா ஆச்சல்

hai what is meant by chilli flakes and bread grums? reply me, i'm eagerly waiting to try this receipe...

"Patience is the most beautiful prayer !!!"

படம் பார்த்து கதை சொல்லுக மாதிரி படத்திலேயே தெரிகிறது பாருங்கள்.Red மிளகாயை coarsely grind அல்லது சும்மா கையிலேயே பொடிக்கலாம்.

பிரெட் துண்டுகளை dry-ஆக வாட்டி(in oven/pan)coarsely grind in a processor/mixie அல்லது வாட்டிய bread கையிலேயே பொடிந்து விடும்.

Chilli flakes, Bread crumbs இரண்டுமே readymade-ஆக கூட கிடைக்கும்.

எதோ என்னால் முடிந்ததை சொல்லி இருக்கேன்.கீதா கரெக்ட் பண்ணிடுங்க.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

Thank u. i'll try this 2day

"Patience is the most beautiful prayer !!!"

திருமதி. இமா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த ப்ரட் க்ரம்ஸ் ப்ரோக்கலியின் படம்

<img src="files/pictures/aa71.jpg" alt="picture" />

இமா,
போட்டோ மிகவும் சூப்பராக இருக்கு. மிகவும் நன்றி.
இந்த குறிப்பினை தந்த திருமதி. மனோகரி அவர்களுக்கு நன்றி.
போட்டோவினை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்