கிராமத்து கோழி குழம்பு

தேதி: January 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (12 votes)

 

1. கோழி (எலும்புடன்) - 3/4 கிலோ
2. வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1
3. தக்காளி, பொடியாக நறுக்கியது - 1
4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
5. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
6. மிளகாய் வற்றல் - 10
7. தனியா - 1 மேஜைக்கரண்டி
8. மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
9. பட்டை, லவங்கம்
10. கசகசா - 1 தேக்கரண்டி
11. ஏலக்காய் - 1 (விரும்பினால்)
12. தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப்
13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
14. உப்பு
15. பூண்டு - 5 பல்
16. சோம்பு - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)


 

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.
இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதங்கியதும், கோழி துண்டுகள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.
தண்ணீர் இல்லாமல் மூடி வேக விடவும். (கோழி விடும் நீரில் வெந்தால் குழம்பு ருசியாக இருக்கும்)
இதில் அரைத்த விழுது, தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.
கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.


சின்ன வெங்காயம் (10) பயன்படுத்தினால் இன்னும் வாசமா ருசியா இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

this koli kolambu is very taste. it's super.

karunai niraintha idhayam kadayulin aalayam

வனீஸ்,
உங்க கிராமத்துல கோழில்லாம் அரிஞ்சு வச்ச கோவா மாதிரித்தான் இருக்குமா? ;)
அப்புடித்தான் மேல படம் தெரிஞ்சுது. நாளை வேற (ஒரு கப்ல செர்ரி உட்கார்ந்து இருக்கிற ஐஸ்க்ரீம்) தெரியும். ;))
கெதியா உங்க கிராமத்து கோழியை குழம்பாக்கி படம் எடுத்துப் போடுங்கோ.

‍- இமா க்றிஸ்

ம். ;) இப்போ ஸ்பினாச்சும் ஒரு புல்ஸ் ஐயும் க்ரம்ஸ் கோர்ட் பண்ணி பொரிச்சு வச்ச ஒரு றாலும் தெரியுது. ;))))

‍- இமா க்றிஸ்

உங்க கோழி குழம்பு இதோட 2 தடவை செஞ்சிட்டேன் செம டேஸ்ட்.என் கணவருக்கும் ரொம்ப பிடிச்சி போச்சி.இனி அடிக்கடி செய்வேன். நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மிக்க நன்றி :) செய்து பார்த்து கருத்தை பகிர்ந்து கொள்வது பெரும் மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆகா... இதை நான் இப்ப தான் பார்க்கிறேன் :) அவசியம் ஊருக்கு போனதும் அம்மா செய்வாங்க, போட்டோ அனுப்பிடுறேன். நன்றி இமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்ர்ர்.இதன் சுவை அனுபவிப்பவர்கள் மட்டுமே புரியும்.ரொம்ப நல்லாயிருந்தது.

நல்லா கார சாரமா இருந்துச்சா?! எனக்கு கறி வகைகள் பொதுவா காரம் இருந்தா தான் பிடிக்கும். அதான் எனக்கு இது ரொம்ப பிடிச்ச வகை குழம்பு. ;) கையால் மசாலா அரைத்து மண் சட்டியில் வைத்தா இன்னும் சூப்பரா இருக்கும் மேனகா. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிராமத்து கோழிக்குழம்பு இன்றைக்கு செய்தேன் நல்லா இருந்தது,எங்க பாட்டிஅம்மில அரைச்சு இப்படிதான் செய்வாங்க சூப்பரா இருக்கும்,என்னோடது அவ்வள்வு டேஸ்டா இல்லைனாலும் சப்பிடறமாதிரி இருந்தது,நீங்க சொன்ன மாதிரி அம்மில அரச்சு,சட்டியில வெச்சிருந்தா எங்க பாட்டி ருசி வந்துருக்குனு நினைக்கிறேன்.நன்றி வனிதா.

மிக்க நன்றி கவி... சாபிட்ற மாதிரி தான் வந்துச்சா??? ருசியா இல்லியா?? so sad... :( பரவால்ல அடுத்த முறை நல்லா வரட்டும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா என்னம்மா இது, நல்லா டேஸ்டா இருந்தது.என்ன இருந்தாலும் அம்மா,பாட்டி ருசி எமக்கு வரலை அதுதான் சொன்னேன்.

வனிதா எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் அனுப்பி விட்டு ஹாயாக ரெஸ்ட் எடுக்கிறீங்களா. விடமாட்டோமில்ல! நான் இப்ப தானே ஆரம்பிச்சு இருக்கேன்.
கிராமத்து கோழி குழம்பு நல்லா இருந்தது. சாதம், இரவு பரோட்டா கோட நல்ல காம்பினேஷன். நன்றி!

மிக்க நன்றி மாலி. நாங்களும் ஓயமாட்டோம்ல நன்றி சொல்ல. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

I made this 'Gramathu kari Kozhambu'. It was awesome.A different and nice taste...Also nice aroma..Thanks to Vani :)

God is Great

மிக்க நன்றி மோகனபிரியா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi vanitha,
today i made ur recipe,its superb.......but i have one doubt,dont v need ginger for this recipe?

ஜெயந்தி மிக்க நன்றி. நான் அடிகமாக இஞ்சி பயன்படுத்துவதில்லை. உங்களக்கு விருப்பம் இருந்தால் தாரளமாக இஞ்சி பூண்டு சேர்க்கலாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இந்த குழம்பு சூப்பர். வீட்டிற்கு வந்த நண்பர்களுக்காக செய்தேன். அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். காரம் மட்டும் கொஞ்சம் குறைத்து கொண்டேன்.என் மகனுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. நன்றி உங்களுக்கு.

மிக்க நன்றி வின்னி. :) நல்ல வேலை... காரம் குறைcசதை சொன்னேன்... நான் என் சமையலில் எப்பவுமே கொஞ்சம் அதிகமா சேர்ப்பேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா