கேப்ஸிகம் சட்னி

தேதி: January 18, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

கேப்ஸிகம் ( குடைமிளகாய்) - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1
கறிவேப்பில்லை - 4 இலை
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

முதலில் குடைமிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக வெட்டி கொள்ளவும்.
ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெட்டி வைத்துள்ள குடைமிளகாயினை போட்டு நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.
பின் அதே கடாயில் வெட்டி வைத்துள்ள தக்காளியை போட்டு வதக்கவும்.
வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் தக்காளியை சிறிது நேரம் ஆறவிட்டு பிறகு மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்.
வேறு கடாயில் மீதம் உள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பின் அதில் காய்ந்த மிளகாய் மற்றும் சீரகம் சேர்க்கவும்.
பின் அதில் வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய உடன் அதில் உப்பு மற்றும் அரைத்த விழுதினை போட்டு 2 - 3 நிமிடம் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
இப்பொழுது சுவையான கேப்ஸிகம் சட்னி ரெடி.
இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


<br/>
<img src="files/pictures/aa134.jpg" alt="picture" />

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கீதா ஆச்சல்,
இட்லியுடன் நேற்று இந்த காப்ஸிகம் சட்னி ட்ரை பண்ணேன்.அப்புறம், நீங்க சொல்லி செய்யாமலா?! : ) (காப்ஸிகம் ரைஸ் பின்னூட்டத்தில் இது பற்றி சொல்லியிருந்தீங்க!)
சட்னி ரொம்ப ஃபிளேவரா, டேஸ்டியா இருந்தது.(அவருக்குதான் காரம் போதவில்லையென்றார். அடுத்தமுறை ஒரு பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கி அரைச்சிட்டாபோச்சு!) நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் நன்றி ஸ்ரீ.எப்படி இப்படி எல்லாம்….செய்து பார்த்து பின்னுட்டம் தந்த்தற்கு மிகவும் மகிழ்ச்சி.
அன்புடன்,
கீதா ஆச்சல்