ப்ரோக்கோலி சூப்(Brocoli soup)

தேதி: February 23, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புரோக்கோலி -1 சிறிய பூ
வெங்காயம் - 1
பட்டர் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சோர் கீரிம்(Sour Cream) அல்லது தயிர் - 1/4 கப் (விரும்பினால்)


 

முதலில் புரோக்கோலியை சிறிய சிறிய பூக்களாக வெட்டி கொள்ளவும். வெங்காயத்தினை பொடியாக நறுக்கவும்.
ஒரு கடாயில் பட்டரினை போட்டு வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியவுடன் புரோக்கோலி பூக்களை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் 2 – 3 கப் தண்ணீர் அல்லது பால் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
நன்றாக வெந்தபிறகு சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதினை கடாயில் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும். (தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்)
பரிமாறும் பொழுது இந்த சூப் மீது மிளகு தூள் மற்றும் சோர் க்ரீம் சேர்த்து பரிமாறவும்.
மிகவும் சுவையான புரோக்கோலி சூப் ரெடி.


புரோக்கோலியில் நிறைய நார் சத்து உள்ளது. இந்த சூப் மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கீதாச்சல் இந்த சூப் செய்தேன், மிகவும் நன்றாக வந்தது. தயிர்தான் கொஞ்சம் சேர்த்தேன். அதென்னது தண்ணி அல்லது பால் எனப் போட்டிருக்கிறீங்கள். தண்ணியளவிற்கு பால் சேர்க்கலாமா? நான் தண்ணீரில்தான் செய்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிகவும் நன்றி அதிரா. தண்ணீர் அளவிற்கு பால் சேர்த்தால் மிகவும் ரிச்சாக சுவையாக இருக்கும்…ஒரு முறை பால் சேர்த்து செய்து பாருங்கள்…
அன்புடன்,
கீதா ஆச்சல்