பாதாம் அல்வா

தேதி: September 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

பாதாம் - ஒரு கப்
பால் - 2 கப்
நெய் - 1 1/4 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை


 

கொதிக்கும் வெந்நீரில் பாதாம் பருப்புகளை போட்டு ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் எடுத்து தோல் உரித்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தோல் நீக்கிய பருப்பை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி அதனுடன் சீனியை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
பாதாம் கலவை சற்று கெட்டியான பதம் வந்ததும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும். நெய் எல்லாவற்றையும் ஓரே நேரத்தில் சேர்த்து விட கூடாது.
பாதாம் கலவை நன்கு கெட்டியாகி அல்வா பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி வைக்கவும்.
அல்வாவை இறக்கி வைத்து மேலே குங்குமப்பூவை தூவவும். பின்னர் 10 - 15 நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருந்தால் நெய் பிரிந்து மேலே வந்துவிடும்.
நெய் மணத்துடன் கூடிய சுவையான பாதாம் அல்வா ரெடி. இதற்கு வேறு எந்த பருப்பு வகைகளைக் கொண்டு அலங்கரிக்க வேண்டிய அவசியமில்லை.
அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் <b> திருமதி. ஸாதிகா </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள பாதாம் அல்வா. நீங்களும் இதனை செய்து பார்த்து தங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாதாம், ஆமீர்
ஸாதிகா அக்கா ஆமீர் குட்டியா இது நல்ல சுட்டியாகத்தான் இருக்கிறார்.

எங்கேயோ ஜலீலாக்காவின் பாதாம் அல்வா குறிப்பு பார்த்தேன், செய்ய வேண்டும் என்ற ஆசையில் பாதாம் பருப்பு வாங்கி வந்து ஒரு மாதமாகிறது இன்னும் செய்தபாடில்லை, இப்பொழுது படத்துடன் பார்ப்பதால் ஆசை அதிகமாகி விட்டது, செய்துவிட்டு தெரிவிக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தேங்ஸ் ஆண்டி கண்டிப்பாக வீகெண்ட் செய்துவிட்டு சொல்கிறேன்

பின்னூட்டத்திற்கு நன்றி அதிரா.ஆமிர் தான்.சரியான சுட்டிதான்.உங்கள் இரட்டையர் எப்படி உள்ளார்கள்?எல்லோரும் இரட்டையர் என்கின்றார்களே?உண்மையில் இரட்டையர் கள் தானா?பார்க்கும் பொழுது சிறிது வித்தியாசம் தெரிந்ததே.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸ்வேதா,நேற்றும்,இன்றும் ஸ்வீட் செய்முறைகள் வந்ததும் உங்களைத்தான் நினைத்தேன்.நீங்களே வந்து விட்டீர்கள்.பின்னூட்டத்திற்கு நன்றி.செய்து பார்த்து சுவையுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்களுடைய பதாம் அல்வா செய்து விட்டேன்.மிகவும் super!!

Keerthi

போங்க சாதிகா அக்கா,

நான் யாரும் சமைக்கலாமில் நினைத்து வைத்திருந்த முன்று ரெஸிபி வருசையா போட்டு உள்ளீர்கள்.

பாதம் ஹல்வாதான் இந்த வாரம் செய்து அனுப்பலாம் என்று இருந்தேன்,

சரி ஒகே பார்க்கலாம் வேறு ஏதாவது செய்ய முடிகிறதா என்று.

ஜலீலா

Jaleelakamal

கீர்த்திஷ்வரி,தேடித் தேடி என் சமையல் குறிப்புகள் பார்த்து செய்து பின்னூட்டமும் அனுப்பி வைக்கின்றீர்கள்.எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.இன்னும் ரெசிப்பி அனுப்பவேண்டும் என்ற ஆவலும் அதிகரித்து உள்ளது.நன்றி..நன்றி.

ஸாதிகா

arusuvai is a wonderful website

ஜலீலா,சாரிமா,பேசாமல் உங்கள் மெயில் ஐ.டி கொடுங்கள்.டிஸ்கஸ் பண்ணி இனி ரெஸிபி போடலாம்.சமையலில் நீங்கள் சூசூசூசூசூசூப்ப்ப்ப்ப்ப்ர்.நான் வெறும் சூப்பர்(தான் என்று நினைக்கிறேன்)பாதாம் அல்வா படம் ஒன்றும் எடுக்கவில்லையே?உங்கள் படத்துடன் கூடிய ரெஸிபி விரைவில் வரப்போகின்றது என் நினைக்கின்றேன்
ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டுள்ளேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா அக்கா உங்களுடயதும் என்னுடையதும் கிட்ட தட்ட ஒரே மாதிரி தான் இருக்கு.
முர்தபா எப்படி பெயர் வந்தது,
நாங்கள் அதை முட்டை ரொட்டி என்று தான் சொல்வோம் எங்க வீட்டில் சூப்பர் ஹிட்டே அந்த முட்டை ரொட்டிதான் அதுவும் நீங்கள் போட்டு விட்டீர்கள்
அடுத்து ஸ்பான்ச் கேக் அது ஒன்று தான் எனக்கு தெரியும் ஆனால் என்னுடைய்து சிறிது வித்தியாசம் இருக்கு,(இன்னும் ஒன்று சாக்லேட் கேக்)
நானே பாதம் ஹல்வா பார்த்து விட்டு ஆகா நாமகொடுக்கலாம் என்று இருந்தோமே முதலில் மெயில் ஐடி வாங்கனும் என்று நினைத்தேன் நீங்களே சொல்லிவிட்டீர்க.
நீங்க முதலில் துபாயில் இருந்ஹ்டீர்களா?

மீதி கேக் வகைகளை அருசுவை பார்த்து தான் டைம் கிடைக்கும் போது டிரை பண்ணனும்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா.உங்கள் ஐடி மர்ழிகிட்டே இருக்கின்றதா?வாங்கிக்கொள்ளட்டுமா?முர்தபா மலேசியன் டிஷ்.மலேசியன் உணவகங்களில் எல்லாம்கிடைக்கும்.முட்டை ரொட்டி என்பது இறைச்சி சேர்க்காமல் செய்வது.அதை இன்னொரு நாள் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைக்கின்றேன்.எங்கள் வீட்டில் அதைதான் முட்டை ரொட்டி என்போம்.நான் துபையில் இருக்கவில்லை.நாம் சென்னைதான்.என் உறவினர்கள் நிறைய பேர் துபையில் வசிக்கின்றார்கள்.
உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.பெருநாள் சமையங்களில் (உருது பேசும் இஸ்லாமிய இல்லங்களில்)இனிப்பு சேமியா சமைக்கின்றார்களாமே.நான் பார்த்ததும் இல்லை.அது எப்படி சமைக்கின்றார்கள். ரெஸிப்பி தெரியுமா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

முட்டை ரொட்டி பலவகை உண்டு
அப்ப மலேஷியன் முர்தபாதான் முட்டை ரொட்டி என்று நாங்கள் சொல்வோம்,
என் அம்மா செய்தவது கதிஜா செய்து காண்பித்துள்ள முட்டை ரொட்டி, அதை செய்து முடித்து விட்டு கொத்தி அதில் லேசாக மிளகு தூள் லெமென் ஜூஸ் பிழிந்து தருவார்கள் அது ரொம்ப சூபபரா இருக்கும்.
இன்னும் ஒன்று நனே வெஜ் போட்டு செய்வேன் .
இன்னும் ஒன்ரு ஸ்லோன் எக் பரோட்டா அது வெரும் முட்டை அடித்து ஊற்றி பரோட்டவினும் வைத்து கொடுபார்கள்.
இதில் நாளைந்து விதம் இருக்கு கொடுத்ததையே திரும்ப திருமப கொடுக்க வேண்டாம் என்று தா கொடுக்கல.

பிற்கு உருது முஸ்லிம் செய்வது தான் ஷீர் குருமா அது என் ரெஸிபியில் இருக்கு நான் துபாய் வந்த புதிதில் என் பிரெண்ட் வீட்டில் சாப்பிட்டேன் அதிலிருந்து ஈதுக்கு என்றில்லை மாதம் ஒரு முறை அதை செய்கிறேன்.
ஈதுக்கு ஸ்பெஷலா நிறைய பாதம் முந்திரி நல்ல போட்டு செய்வது, ஆனல் மாதம் ஒரு முறை கொஞ்சம தான் சேர்ப்பேன் , அது கூட ஏதாவது சுண்டல் வகைகள்.ஒரு இனிப்பு ஒரு காரம் என்ரு செய்வேன்.
மெயில் ஐடி மர்லியா கிட்ட வாங்கி கொள்ளுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஷாதிகா மேடம் பாதாம் அல்வா செய்து விட்டேன்.சூப்பராக வந்தது.நன்றி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாவ்..கவிசிவா..ரொம்ப நன்றி.உடனே செய்து பார்த்து,பின்னூட்டமும் அனுப்பி வைத்து விட்டீர்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா மேடம் நானும் உங்க பாதாம் அல்வா செய்தேன் நன்றாக வந்தது. நேற்று உங்க பாதாம் அல்வாவை பார்த்ததும் சாப்பிடனும் ஆசையா இருந்தது ஆனா வீட்டில் பாதாம் இல்லை, என் வீட்டுக்காரர் வந்ததும் வாங்கி வர சொல்லி செய்து பார்த்தேன், நன்றி மேடம்.

கவி . எஸ்,பாதாம் அல்வா செய்தீர்களா?ரொம்ப சந்தோஷம். வீட்டில் பாதாம் இல்லாவிட்டாலும் கடையில் வாங்கவிட்டு உடனே செய்து பார்த்து,பின்னூட்டமும் அனுப்பியமைக்கு மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா.... செய்துவிட்டேன்.... ஆறவிட்டிருக்கிறேன்... அருமையான சுவை.

என்ன மாதிரி சிம்பிளாக எழுதிட்டீங்க, தோலை உரிக்கவும் என்று, நானும் நினைத்திருந்தேன், ஏதோ சுகமான வேலையாக்கும் என்று, கடவுளே ஒரு மணித்தியாலம் எடுத்தது தோல் உரிக்க. இப்படித் தெரிந்திருந்தால் உரித்ததாக வாங்கியிருப்பேன். நேற்று எல்லாம் செய்து விட்டேன் இன்றுதான் கிண்டினேன். இன்னும் கொஞ்சம் அடுப்பில் விட்டிருந்தால் துண்டுகள் போட்டிருக்கலாம் என நினைக்கிறேன் முக்கால் மணித்தியாலம் எடுத்தது கிண்டி முடிக்க , பயமாக இருந்தது அதனால் இறக்கிவிட்டேன்.... நல்லதொரு அல்வா, நான் இதுதான் முதல் தடவையாக உணவிற்கு பாதாம் பருப்பு பாவித்துள்ளேன்.

என்ன இப்பத்தானே நோன்பு தொடங்கியது அதற்குள் எல்லோரும் களைத்துவிட்டீங்களா? ஒருவரையும் அதிகமாக இங்கே காணவில்லையே....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா.பாதாம் உரித்து விரல்கள் நோகின்றதா?குறிப்பினை இன்னொரு முறை பாருங்கள்.பாதாமை கொதிக்கும் நீரில் போட்டு,நன்கு ஊற விட்டு என்று குறிப்பிட்டுள்ளேன்.நன்கு கொதிக்கும் நீரில் ஊற
விட்டு உரித்தால் சும்மா வெண்ணையை வெட்டுவது போல் சுலபமாக வரும்.பாவம் கஷ்டப்பட்டு விட்டீர்கள்.பாதாம் தோல் உரிப்பது ஊறிய மொச்சை.கொண்டைக்கடலை,தோல்களை உரிப்பதை விட சுலபம்.இன்னும் ஒரு ஐடியா..பாதாம நீரில் போட்டு நன்கு கொதிக்க விடலாம்.இன்னும் சுலபமான ஐடியா..ஒரு 10 கிலோ பாதாம் வாங்கி அனுப்பி வையுங்கள்.பிரீயாகா உரித்து அனுப்பி வைக்கின்றேன்.ஏவ்வ்வ்வ் எல்லாம் போடமாட்டேன்(நான் நல்ல அக்கா இல்லையா?)
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் ஷாதிகா ஆன்டி எப்படி இருக்கீங்க? உங்க பாதாம் அல்வா நேற்று செய்தேன் ரெம்ப நல்லா இருந்தது தேங்ஸ் ஆன்டி எனக்காக ரெசிப்பி கொடுத்தீங்க வந்த கெஸ்டுக்கும் பிடித்திருந்தது அவங்க நல்லா குக் பண்ணுறீங்க ஒரு ரெஸ்ட்டாரண்டு ஆரம்பியின்னு சொன்னாங்க:) இந்த தேங்ஸ் எல்லாம் உங்களுக்குதான் தேங்ஸ் ஆன்டி

ஹாய் ஸ்வேதா,பாதாம் அல்வா செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.உங்களுக்கும்,உங்கள் கெஸ்ட்டுக்கும் பிடித்து இருந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.உங்கள் கெஸ்ட் கூறியவாறு ஒரு ரெஸ்டாரென்ட் ஆரம்பியுங்களேன்.நாங்களும் வந்து டேஸ்ட் பண்ணி பார்ப்போம் இல்லையா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் ஆன்டி என்ன ஆன்டி வெறும் டேஸ்டு மட்டும்தான் பார்ப்பீங்களா:-( நான் உங்களை தான் செஃப் ஆ போடலாம்னு:-) கவுத்துட்டீங்களே

சதாலட்சுமி
ஸாதிகா அக்கா
அக்கா என்று கூப்பிடலாம?. தவறு என்றால் மன்னிக்கவும். நான் தவறாமல் உங்கல் குறிப்புகளையும் பதிவுகளையும் படித்து வருகிறேன். பாதாம் அல்வாவும் சேய்துப்பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. இபோது என்னிடம் நிரைய முந்திரி உள்ளது. இதே முரையில் செய்யலாமா? தயவு செய்து தெரிவிக்கவும்.

சதாலட்சுமி

சதாலக்ஷ்மி,பாதாம் அல்வா செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றிமுந்திரியை இதே முறையில் செய்து பாருங்கள்.எப்படி வரும் என்று சொல்லத்தெரிய வில்லை.முதலில் கொஞ்சமாக செய்து பாருங்கள்.சற்று காத்திருங்கள்.முந்திரி ரெஸிப்பி தருகின்றேன்.நீங்கள் தாரளாமாக என்னை அக்கா என்று அழைக்கலாம்
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸ்வேதா.ஓ...தாராளமாக...வாழ்க்கையில் நானும் சம்பாதித்து ஒரு மாத சம்பளமாவது பெற வேண்டும் என்பது என் ஆசை.(பத்திரிகைகளில் இருந்து சிறிது சம்பாதித்து இருக்கின்றேன்.)வேலைக்கு செல்லவேண்டும்.அது உங்கள் மூலமாக நடக்கும் என்றால் தடுக்கவா முடியும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சதாலட்சுமி
நன்றி அக்கா. நான் செய்து பார்க்கிரேன்.

சதாலட்சுமி

ஹலோ ஸாதிகா ஆன்டி,

உங்களுடைய பாதாம் அல்வா செய்து பார்த்தேன்.நன்றாக வந்துள்ளது. அம்மா நன்றாக இருக்கிறது. என்று கூறினார்கள்.அவர் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் சோதனை செய்து பார்க்கப் போகிறேன். அம்மா இங்கு இருப்பதால் ஒவ்வொரு மெனுவாக செய்து அம்மாவை சோதனை செய்து கொண்டுள்ளேன்

அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

மணிசாரா,பாதாம் அல்வா செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்திருந்தமைக்கு மகிழ்ச்சி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இன்று பாதாம் அல்வா செய்து பார்த்தேன்..மிகவும் நன்றாக வந்துள்ளது..ருசி நன்றாக இருந்தது என்று என் கணவர் பாராட்டினார்.மிகவும் நன்றி மேடம்

தாமரை செல்வி,பாதாம் அல்வா செய்து ,அதன் சுவையும் பிடித்து இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.உடனே பின்னூட்டமும் அனுப்பி விட்டீர்கள்.மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

Hai Sadika,

The bhadam halwa was really nice. Thanks for the nice and sweet receipe.

Christy catherine.J
South Korea.

Christy catherine.J
PhD student,
POSTECH, Pohang,
South Korea.

கிரிஸ்டி கேதரின்,உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website