கேரட் ரைஸ்

தேதி: December 29, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - 4
பச்சரிசி - 2 கப்
தண்ணீர் - 4 கப்
இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று


 

அரிசியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியை போடவும்.
பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு துருவி வைத்துள்ள கேரட்டை போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் மிளகு பொடியை தூவி கிளறவும்.
பிறகு வேக வைத்துள்ள சாதத்தை கலைந்து அதனுடன் கலக்கவும். உப்பு சேர்த்து எல்லாம் கலக்கும் வரை கிளறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் VaniRamesh, உங்க கேரட் ரைஸ் நேற்று செய்தேன்.. நன்றாக இருந்தது. ரொம்பவே ஈசியாகவும் இருந்தது... நன்றி...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Enna podi endru solla villaye???

Anbe Sivam

Anbe Sivam

ஹாய் ப்ரீத்தி(Chudar2009)

குறிப்பில் மூன்றாவ‌து வரியில் சொல்லியிருக்காங்களே, என்ன பொடியென்று!.

//பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.//

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

He he he

Aamam.

Anbe Sivam

Anbe Sivam

கேரட் சாதம் நன்றாக இருந்தது... ரைத்தாவுடன் சாப்பிட்டோம்... நன்றி..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

கேரட் சாதம் நன்றாக இருந்தது

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..