பராசப்பம்

தேதி: May 18, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை அரிசி - அரை படி
தேங்காய் (சிறியது) - பாதி
முட்டை - 3
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
பெருஞ்சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சோடாப்பு - அரை ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்


 

முதலில் அரிசியை 4 அல்லது 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய பிறகு நன்றாக மை போல் அரைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் வரை அதை புளிக்க விட வேண்டும்.
நன்றாக புளித்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் ஒன்றாக நசுக்கிக் கொள்ளவேண்டும். தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
புளித்த மாவில் சோடாப்பு சேர்த்து கலக்கி, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். முட்டையை நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு பெருஞ்சீரகத்தூள், அரைத்த தேங்காய், நசுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கலக்கிய முட்டை அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கவும்.
ஆப்ப சட்டியில் ஊற்றி, சிறிது நெய் விட்டு, பொன்முறுவலாக ஆனவுடன், திருப்பி போட்டு மீண்டும் சிறிது நெய் விட்டு, வெந்தவுடன் எடுத்து விடலாம்.
இது கோழி அல்லது கறி குழம்போடு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

முட்டையை என்ன செய்ய? தனியாக ஆம்லெட் அல்லது ஹாஃப்பாயில் செய்து சாப்பிடவேண்டுமா? அரிசி மாவை அரைத்து வைத்துவிட்டேன்...இப்போது இக்கட்டான சூழ்நிலையில் நான்....

முட்டையை தனியாக எதுவும் செய்யவேண்டாம். நல்ல ஜோக்கான கேள்வி! சுமார் 6 மாதங்களாக யாருமே கவனிக்காத முட்டையை என் கவனத்திற்கு கொண்டுவந்து, ஞாபகப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி! எப்படியோ தவறுதலாக விடுபட்டமைக்கு மன்னிக்கவும். இப்போது சேர்த்துவிட்டேன். நீங்கள் அரைத்து வைத்துள்ள மாவு வீணாகிவிடாமல் உடனே செய்து பார்த்துவிட்டு பதில் தரவும்.ok?

எனது தாயார் செய்யும் பராசப்பம் மேல் எனக்கு அலாதி பிரியம். அந்த நாள் ஞாபகம் வந்ததால் தங்களின் செய்குறிப்பு உதவியுடன் இங்கு செய்து பார்த்தேன், மிகவும் அருமையாக வந்தது. தங்களின் பதிலை படிக்கும் முன்னமே நான் முட்டையை என்ன செய்யவேண்டும் என்பது யூகித்துவிட்டேன். கூடுதலாக நான்கு மேசைக்கரண்டி அளவு சீனி சேர்த்துக்கொண்டேன் சுவையும் கூடுதலாக வந்தது.

அரிசி மாவு புளிக்க 24 மணி நேரத்திற்கு மேல் ஆனது. சீக்கிரம் புளிக்க வைக்க ஏதேனும் வழிகள் இருந்தால் கூறவும்.

நன்றியுடன்
ஃபயீஸ்

சாதாரண ஆப்பத்திற்கு சிறிது சீனி சேர்ப்போம். நீங்கள் சொன்னதுபோல் இதிலும் வேண்டுமானால் சிறிதளவு மட்டும் சேர்க்கலாம்.
ஆப்ப மாவு மற்ற (இட்லி, தோசை)மாவைவிட சற்று லேட்டாகத்தான் புளிக்கும். அதற்கு பேகிங் பௌடர் 1/2 படி மாவுக்கு 1 டீஸ்பூன் வீதம் போட்டு, கைகளால் நன்கு கலந்து வைத்துவிட்டால் புளிப்பதற்கு ஆகும் நேரம் குறையும். அடுத்தமுறை try பண்ணி பாருங்கள்!