மாங்காய் கோஸ்

தேதி: December 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - 1
பூண்டு - 2 பல்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு


 

மாங்காயை பொடியாக நறுக்கவும். பூண்டை தோலுரிக்காமல் ஒன்றிரண்டாக தட்டவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து தட்டிய பூண்டு போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
இந்த கலவையை நறுக்கிய மாங்காயில் கொட்டி கிளறவும். ஒரு மணி நேரம் ஊறிய பின் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வித்தியாசமான சுவையில் இந்த மாங்காய் கோஸ் ரொம்ப நல்லாயிருந்தது.மாங்காய்ன்னா எனக்கு ரொம்ப உயிர்.நன்றி கவி!!

மாங்காய் கோஸ் சாப்பிட்டீங்களா? தயிர் சாதத்தோடு சாப்பிட்டால் எக்ஸ்ட்ரா ரெண்டு பிடி சாதம் உள்ளே போகும்.அப்போ டயட்டிங் எல்லாம் காற்றில் பற்ந்து விடும் :). நன்றி மேனகா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!