ஆப்ப ஆணம்

தேதி: September 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப்பருப்பு - 200 கிராம்.
உருளைக்கிழங்கு - 100 கிராம்.
வெங்காயம் - 50 கிராம் (நீளமாக அரிந்தது).
தக்காளி - 50 கிராம், (பொடியாக அரிந்தது).
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி.
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - 50 மில்லி லிட்டர்.
பட்டை - சிறு துண்டு.
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி.
கடைசியில் தூவ கொத்தமல்லித் தழை


 

கடலைப் பருப்பை சுமார் 1/2 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.
ப்ரஷர் குக்கரில், கடலைப் பருப்புடன், உருளைக்கிழங்கை இரண்டு துண்டுகளாக வெட்டி சேர்த்து, மஞ்சள் தூளைக் கலந்து தண்ணீருடன் 5 நிமிடம் ப்ரஷர் குக் செய்ய வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன், வெந்த உருளைக்கிழங்கையும், கடலைப்பருப்பையும் நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பட்டை சேர்த்து அரிந்து வைத்த வெங்காயத்தை போட்டு, பொன்னிறமானவுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
இப்போது இஞ்சிப் பூண்டு கலவையை சேர்த்து, இளஞ்சூட்டில் மணம் வரும் வரை வதக்கி, அதனுடன் மிளகாய்த் தூள் கலந்து கிளர வேண்டும்.
பின்னர் மசித்த கடலைப்பருப்பு, உருளைக் கிழங்கை அதனுடன் கலந்து, 300 மில்லி லிட்டர் நீர் சேர்த்து, ருசிக்கேற்ப உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுப்பை அணைத்தபின் கரம் மசாலாத் தூள், கொத்தமல்லித் தழை கலந்து பரிமாறலாம்.


குழம்பு என்பதற்கு இன்னொரு வார்த்தைதான் ஆணம். இந்த குழம்பு ஆப்பதுடன் சேரும் போது மிகப் பொருத்தமாக இருக்கும். எனது மாமியாரிடமிருந்து இதை 30 வருடத்திற்கு முன்பே கற்றுக் கொண்ட நான், எனது நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அமெரிக்கா சென்ற சமயம், அங்குள்ள நண்பர்களுக்கும் இந்த ஆணத்தை செய்து பரிமாறிய போது விரும்பி உண்ட அவர்கள், கற்றுக் கொள்ளவும் செய்தார்கள். நீங்களும் செய்து பாருங்கள்.
கடலைப்பருப்பு, உருளைக்கிழங்கை பதமாக மசித்தல் சுவையைக் கூட்ட உதவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செய்தேன் சுவையாக இருந்தது.நன்றி

sajuna

வருகைக்கு நன்றி சஜுனா.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ஜூபைதா.

அன்புடன்,
ஜூபைதா.

ஜீபைதா மேடம் இன்றைக்கு உங்க ஆப்ப ஆணம் செய்தேன் டேஸ்ட் சூப்பரா இருந்தது, கூட ஆப்பம்தான் செய்தேன் ரெண்டு சூப்பரா இருந்தது. நன்றி.