சாதம் கட்டியாக இல்லாமல் உதிரியாக இருக்க உதவுங்கள்

சாதம் கட்டியாக இல்லாமல் உதிரியாக இருக்க உதவுங்கள்

குக்கரில் வைக்கறீங்களா?? அப்படி வெச்சா வெளிய எடுத்து உடனே கிளரி வைங்க. கெட்டி ஆகாம இருக்கும். இல்லன்னா வெச்சு எடுத்த கொஞ்ச நேரத்தில் கெட்டி ஆயிடும்.

குக்கரில் வைத்தாலும், வெளிய வெச்சு வடிச்சாலும் தண்ணி அளவு சரியா வைங்க. கொஞ்சம் குறைச்சு குழஞ்சுடாம எடுங்க, கெட்டி ஆகாது. வடிச்ச பாத்திரத்திலேயே விடாம உடனே வேறு பாத்திரத்துக்கு மாத்தி உதிரியா ஆக்கி விட்டுட்டீங்கன்னா கெட்டி ஆகாம இருக்கும்.

எனக்கு தெரிஞ்சதை சொல்லி இருக்கேன்... அனுபவம் உள்ள நம்ம தோழிகள் சொல்லுவாங்க இன்னும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாதம் வடிக்கும் போது 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு விட்டு வடித்தால் வெள்ளையாவும்,உதிரியாவும் இருக்கும்.

டியர் சக்தி எப்படி இருக்கீங்க? சோறு உதிரி உதிரியாக இருக்க நீங்க பிரஷர் குக்கரிலா, எலக்ட்ரிக் குக்கரிலா அல்லது வடிப்பவரா என்று கூறவில்லை இருந்தாலும் எல்லாவற்றையும் கூறுகின்றேன். பிரஷர் குக்கராயிருப்பின் சாதம் வெந்து விசில் அடங்கியதும் திறந்து, குளிந்த நீரை அதில் தெளித்து உடனே வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிட்டால் சோறு ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

எலக்ட்ரிக் ரைஸ் குக்கராய் இருந்தால் அரிசியை ஒரு பத்து நிமிடமேனும் ஊறவிட்டு அதன்பிறகு நீரை அளந்து ஊற்ற வேண்டும். மேலும் சோறு வேகும்போது இடையில் ஒரு முறை அதை கிளறி விட்டால் சரியான பதம் கிடைக்கும். இதை மாற்றத்தேவையில்லை பாத்திரத்தை வெளியில் எடுத்து ஆறவைத்தாலே போதும்.

வடிக்க வேண்டுமானால் உலை தண்ணீரானது நன்கு கொதி நிலைக்கு வந்த பிறகே அரிசியைப் போட வேண்டும் இல்லாவிடில் அரிசி சிறிதேனும் ஊற நேர்ந்தாலும் உதிரியாக வராது.தண்ணீரை நன்கு தாராளமாக வைத்து வேகவிடவும். கட்டு சோறு கட்டுவதாய் இருந்தால் ஒரு சொட்டு எண்ணெயை சேர்த்து கொதிக்கவிட்டு பிறகு அரிசியைப் போட வேண்டும் சரீங்களா நன்றி.

ஹாய் வனிதா, மேனகா, மனோகரி அம்மா எல்லரும் நலமா? உங்கள் டிப்ஸ் எனக்கும் உதவியது. நன்றிகள் பல.........

எனக்கும் ஒரு சந்தேகம்.

எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் சாதம் அடி பிட்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும். எனக்கு அதிகமாக அடி பிடிக்கிரது.

அதர்க்கு தீர்வு செல்லுங்கள் பிலீஸ்..........

வடகம் எவ்வளவு நாள் வைத்து இருக்கலாம்.

1. என்னிடம் நன்கு காய்ந்து கல்லு மாதிரி இருக்கும் வடகம் இருக்கிரது. ( நன்கு வெய்யில் காய்ந்ததால் அப்படி இருக்கிரது.)

2. மற்றும் உடைத்தால் கையால் உடையும் அளவுக்கு இருக்கும் வடகம் இருக்கிரது.

இதில் எதை சீக்கிரம் காலி செய்ய வேண்டும். எவ்வளவு நாள் வைத்து இருக்க வேண்டும்.

செல்லுங்கள் பிலீஸ்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

சாதம் குக்கரில் வைப்பவராக இருந்தால் அரிசியை அரை மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.பொன்னி அரிசியாக இருந்தால், ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை வெயிட் போடாமல் அடுப்பில் வைக்கவும்.பிரஷர் வந்தவுடன், வெயிட் போட்டு,4 நிமிடம் ஹையிலும் 3 நிமிடம் சிம்மிலும் வைத்து இறக்கவும்.இதுவே நான் வீட்டில் சாதம் வைக்கும் முறை.உடனே சாதத்தை வேறு பாத்திரத்தில் மாற்றவும்.நன்கு உதிரியான சாதம் தயார்.

banu jacob
loved to be loved

loved to be loved

மேலும் சில பதிவுகள்