பொரித்து இடித்த சம்பல்

தேதி: July 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

 

செத்தல் மிளகாய் - 10
பூண்டு - 3 பற்கள்
இஞ்சி - பூண்டின் ஒரு பல்லளவு
தேங்காய் - ஒன்று (சிறியது)
பெருஞ்சீரகம்/சோம்பு - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள்
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவை அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, இஞ்சியைத் தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். (இஞ்சி, பூண்டை, துண்டாக்கினால் போதும் சின்னதாக நறுக்க வேண்டாம்).
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல் போட்டு குறைந்த தீயில் வதக்கவும்/பொரிக்கவும்.
நிறம் மாறியதும், சோம்பு, பாதிக் கறிவேப்பிலை போட்டு இறக்கி வைத்து ஆற விடவும்.
உரலில் வதக்கியவற்றைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு இடிக்கவும்.
நன்கு மசிந்ததும் சிறிது சிறிதாக தேங்காய்ப்பூவைச் சேர்த்து இடிக்கவும்.
எல்லாம் நன்கு சேர்ந்து இடிப்பட்டதும் வெங்காயம், மீதியுள்ள கறிவேப்பிலை சேர்த்து இடிக்கவும். வெங்காயம் அதிகம் மசியத் தேவையில்லை.
சுவையான சம்பல் ரெடி. இது, புட்டு, இடியப்பம், தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த குறிப்பினை <b> திருமதி. அதிரா </b> அவர்கள் நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எமக்கும் இலங்கை சமையல் குறிப்பு தெரியும் என்று அசத்த உங்கள் சமையல் மிகவும் உதவியாக இருக்கிறது.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா மிக்க நன்றி.

போரடித்துவிட்டதென்றேன்:) மேலே பாதி வாக்கியம் நீக்கப்பட்டுவிட்டது:), நன்றி அறுசுவை அலுவலக சகோத... களுக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தோசைக்கு என்ன செய்யலாம்னு குழம்பிட்டு இருந்தேன்..கண்ண்க்கு அழகா உங்க சம்பல் இப்பவே செய்து சொல்லிடறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் அதிரா மேடம்! உங்களுக்குத்தான் புதிசு புதிசாய் நினைக்கத்தோன்றும். சம்பல் நல்ல ரேசப்பி. நானும் நீங்கள் குறிப்பிட்ட படிதான் சம்பல் இடிப்பேன். வெங்காயம் நன்றாக இடிபடாமல் இருப்பதுதான் நல்ல சுவை. படத்துடன் நன்றாக செய்து காட்டி யுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மனிக்கவும் தவறுதலாக இருமுறை

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

செய்தாச்சுங்கோ பேஷ் பேஷ் பிராமதம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ராணி, மர்ழி
ராணி மிக்க நன்றி. தொடர்ந்து என் குறிப்புக்களை ரசிக்கிறீங்கள் மிக்க நன்றி. நீங்கள் சொன்னதுபோல் வெங்காயம் இடிபடாவிட்டால்தான் சுவை அதிகம்.

மர்ழி.... உங்களைக் காணவே ஆசையாக இருக்கு, பழையபடி எப்ப வந்து கலக்கப்போறீங்கள்? இப்பவே பாட்டி வயசு வந்திருக்கும்:), இனியும் பொறுத்தால் மகள்தான் :) ரை பண்ணிவிட வேண்டும்:), கெதியா வாங்கோ. மிக்க நன்றி மர்ழியா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எங்க அம்மாவும் இதேபோலதான் சம்பல் செய்வாங்க.இது இடியாப்பத்தில் பிசைந்து சாப்பட சூப்பரா இருக்கும்.
சப்பாத்திக்கு சாப்பிடும் சைடிஷ் சீனிசம்பல் செய்முறை தெரிந்தால் தரவும்
அன்புடன்
கலா

Kalai

உங்கள் குறிப்பு நன்றாக இருக்கு.
கையால் இடித்தால் இவ்வளவு மசியுமா?:))
உங்கள் கை நல்லா ஸ்ட்ராங்க் போல....:))
பாவம் உங்கள் ஹஸ்...:)))
மிக்ஸியில் பொடிக்கலாமா கொரகொரப்பாக..
அப்போது சுவை மாறுமா என சொல்லவும்.
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

கலா, இளவரசி

கலா மிக்க நன்றி. உண்மைதான் குழல்புட்டு, இடியப்பம் தோசைக்கு சூப்பர். இங்கே நர்மதா(Nila...) வின் குறிப்பில், இலங்கை சீனிச்சம்பல் குறிப்புக் கண்டேன், கொஞ்சம் தேடமுடியுமோ? நான் கிடைத்தால் வந்து சொல்கிறேன்.

இளவரசி மிக்க நன்றி. என் கையின் ஸ்ரோங்குக்கும்:) ஹஸ்பண்ட்டுக்கும் என்னங்க சம்பந்தம்:)?, நான் ஒரு அப்பாவிப் பெண்..:) சொன்னால்தானே புரியும்:).

சுவை மாறாது மிக்ஸியில் இடிக்கலாம்... மா அரைப்பதில் அல்ல, புட்டுக்கொத்துவதில்...

இங்கே தேங்காய் எப்பவும் பசைத் தன்மையாகவே இருக்கும் அதுதான் குழைந்ததுபோல் வரும். பொரித்திடித்திருப்பதால் இடிப்பது சுலபம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கண்டிப்பாக தேடிபார்க்கிரேன்.பதிலுக்கு நன்றி..
அன்புடன்
கலா.

Kalai

ஹாய் அதிரா.நலமாக இருக்கீங்களா.ரெம்ப பிஸியாக இருக்கிறீங்கள்.பட்டிமன்றத்தலைவர் என்றால் சும்மாவா.உங்கள் குறிப்பில் இருந்து நான் பொரித்து இடித்த சம்பல் செய்துபார்த்தேன்.சூப்பராக இருந்தது. அம்மா கையால் செய்து சாப்பிட்டது. பின் இப்போதான் சாப்பிடுகிறேன். இந்த குறிப்பு எப்படி நான் பார்க்காமல் விட்டேன் என‌த்தெரியவில்லை. நல்லவேளை வனிதாவின் புண்ணியத்தால் இது தெரியவந்தது. பட்ம் எடுத்து அட்மின் அண்ணாவிற்கு அனுப்பிவைத்துவிட்டேன். மிக்க நன்றி அதிரா. அன்புடன் அம்முலு.
பி.கு: இந்த உரல் நன்றாக இருக்கிறது.ஈஸ்ட்காமிலா வாங்கினீங்க.

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அம்முலு அவர்கள் தயாரித்த பொரித்து இடித்த சம்பலின் படம்

<img src="files/pictures/aa316.jpg" alt="picture" />

அதிரா சமையல் என்றால் சும்மாவா!! சம்பல் சுப்பர்ப் அதிரா. :)

ப்ரியா, இதுதான் படமா? ('பர்த்டே கேக்' இதுதானா?) !! நான் வேறு படம் எதிர்பார்த்தேனே!! :)

இமா

‍- இமா க்றிஸ்

அம்முலு மிக்க நன்றி. படமும் எடுத்துப் போட்டு என்னை சந்தோஷத்தில் மிதக்க வைத்திட்டீங்கள்... மிக்க நன்றி.

செபா ஆன்ரி உங்களுக்கும் மிக்க நன்றி. என்ன யோசிக்கிறீங்கள்... செபா ஆன்ரி செய்த இமா, இமா செய்த அதிராவின் சம்பலுக்கு...

இது வரப்புயர மாதிரி..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா பொரித்து இடித்த சம்பல் தோசையுடன் சூப்பர் ஆனா இடிக்கத்தான் முடியவில்லை :) மிக்ஸ்யில் தான் செய்தேன் .நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அதிரா.... சம்பல் சூப்பர். நான் பொரித்து இடிக்கல.... பொரித்து அரைச்சேன். மிக்சியிலேயே போட்டுட்டேன். ரொம்ப நல்லா இருந்தது.... நேற்று இரவு தோசைக்கு சூப்பரா இருந்தது. வீட்டில் எல்லாருக்கும் பிடிச்சது. மிக்க நன்றி.:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அநாமிகா, வனிதா
சம்பல் நன்றாக வந்தது கேட்க சந்தோஷமாக இருக்கு. மிக்க நன்றி. மிக் ஷியில் அரைத்தாலும் நன்றாக வரும், தண்ணீர் சேர்க்காவிட்டால் சரி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா இந்த சம்பல் தோசைக்கு மிகவும் நன்றாக இருந்தது. நான் எதையாவது இடித்தே ஆக வேண்டுமென்று வெங்காயத்தை மட்டும் இடித்தேன்:) நன்றி உங்களுக்கு.

அதிரா தோசைக்கு செய்தேன் நல்லா இருந்தது,குறிப்பா சொல்லனும் என்றால் இந்த சம்பல் செய்யவே தோசைக்கு மாவு அரைத்தேன்,மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தேன்,இடிக்கவில்லை.மிக்க நன்றி அதிரா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வின்னி ரேணுகா... என் சம்பலை, என்னை நினைத்துக்கொண்டே சாப்பிட்டிருப்பீங்கள் மிக்க நன்றி.

///நான் எதையாவது இடித்தே ஆக வேண்டுமென்று வெங்காயத்தை மட்டும் இடித்தேன்:)/// இது எங்கேயோ இடிக்குதே வின்னி..:), ஏன் இந்த தீராத தாகம்:)?.. பிரட்டுகிறார்கள்... இடிக்கிறார்கள்... (எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ரொம்ப நல்லவர்... நான் உரலைச் சொன்னேன்:), நன்றி வனிதா... வடிவேலைத் தேடித் தந்தமைக்கு...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிராஅக்கா நலமாக இருக்கீங்களா.உங்கள் குறிப்பில் இருந்து நான் பொரித்து இடித்த சம்பல் செய்துபார்த்தேன்.சூப்பராக இருந்தது.அதிராஅக்கா இந்த சம்பல் சப்பாத்திக்கு மிகவும் நன்றாக இருந்தது.
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

பிரியா நான் நலம், மிக்க நன்றி.

உண்மையேதான் இந்தச் சம்பல் அனைத்துக்கும் பொருந்தும். இன்றும் நான் இச்சம்பல் செய்தேன் புட்டுக்கு. மிக்க நன்றி பிரியா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இதுல மூனுல ரெண்டு உரல்ல போட்டு இடிக்கிற வேலையாதானே இருக்கு :-)). இதுக்கு ஒரு ஹெல்பர் வைக்கனும் . இதுல காய்ந்த இறால் போட்டு செய்து சாப்பிட்டதுண்டு :-)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

athira poonkal vaai ura vachudinkal..ponko...unmaiyana idicha sampal ithethaan..thanks. sirithu palappulium serthaal inum suvai nu amma sonnaanka.