கோதுமை ரவை ஸ்வீட்

தேதி: August 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை ரவை - 100 கிராம்
பயத்தம் பருப்பு - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
பால் - 2 கப்
வெல்லம் - ஒரு கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி


 

கோதுமை ரவையை சுத்த செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக்கி வைக்கவும்.
குக்கரில் கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் போட்டு பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக விடவும்.
ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக விடவும். வெந்ததும் இறக்கி வைத்து குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை 15 நிமிடம் கிளறவும்.
வாணலியில் வெல்லத்தை போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரையை விடவும்.
கோதுமை கலவை கெட்டியானதும் அதை ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்திற்கு மாற்றி அல்லது அதே பாத்திரத்தில் வைத்து கிளறவும். அதில் கரைத்து வைத்திருக்கும் வெல்லக்கரைசலை ஊற்றி மீண்டும் கிளறி விடவும்.
கோதுமைகலவை மற்றும் வெல்லக்கரைசல் ஒன்றாக கலந்ததும் அதில் 2 மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
பிறகு நெய்யில் முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து அதில் சேர்த்து கிளறி விடவும்.
கோதுமைகலவை பாத்திரத்தில் நன்கு ஒட்டாமல் கேசரி பதத்திற்கு திரண்டு வரும் பொழுது இறக்கி வைத்து பரிமாறவும்.
சுவையான கோதுமை ரவை ஸ்வீட் தயார். இந்த ஸ்வீட்டை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. ஆர்த்தி </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல கோதுமை ஸ்வீட் பார்க்க சாப்பிடணும் போல இருக்கு,இப்போ செய்ய போகிறன் ஒரு உதவி வேணும், கோதுமைரவை என்றால், இரண்டையும் ஒன்றாக சேர்க்கனுமா? பிளீஸ் சொல்லுவீங்கலா

நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்

நல்ல சூப்பர் மற்றும் சத்தான ரெசிப்பி

பிரபா கோதுமை ரவை என்பது, முழு கோதுமையை ரவை போல உடைத்து இருப்பார்கள். கடைகளில் கோதுமை ரவை என்றே கிடைக்கும்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

பார்க்கவே அழகா இருக்கு. செய்யனும்னு ஆசையா இருக்கு. இதில் கலர் எதாவது சேர்க்கனுமா?

சத்தானா ரெசிப்பியை சுவையாக தந்தற்கு மிக்க நன்றி.

குறிப்பு அருமையா இருக்கு. காலையில் தான் கோதுமை ரவை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே அறுசுவை திறந்தால் உங்கள் குறிப்பு.வெல்லத்திற்கு பதில் சர்க்கரை உபயோக படுத்தலாமா? உங்கள் குறிப்பில் நீங்கள் தேவையான பொருட்கள் என்று சர்க்கரையே கொடுத்துள்ளீர்கள். இப்போவே சாப்பிடனும் போல இருக்கு....

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி நீங்க கொடுத்த கருத்திற்கு thanisha

நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்

ஆகா சத்தான ஸ்வீட் ,கோதுமை ரவையில் பார்க்க்கவே நலல் இருக்கு ஆர்த்தி

Jaleelakamal

very nice recipe

practice make a ma perfect