முட்டை மசாலா வறுவல்

தேதி: February 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (6 votes)

 

முட்டை - 4
சின்ன வெங்காயம் - 5
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு துளி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

முட்டையை வேக வைத்து பாதியாக நறுக்கவும்
மற்ற பொருட்களை மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்
அரைத்த கலவையை முட்டையில் தடவவும், முடிந்தால் மஞ்சள் கருவை வெளியே எடுத்து சிறிது மசால் தடவி மீண்டும் மஞ்சள் கருவை வைக்கவும்
ஒரு மணிநேரம் ஊற விடவும்.
தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை வரிசையாக வைத்து அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும். அவ்வப்போது திருப்பி போடவும்
மசாலா வாடை போனதும் இறக்கி பரிமாறவும்,
நல்ல ருசியாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரேணுகா முட்டை மசாலா வறுவல் மிகவும் அருமையாக இருந்தது எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது குறிப்பிற்கு மிக்க நன்றி
பொன்னி

இன்று உங்கள் தக்காளிசாதமும் இந்த் முட்டை மசாலாவும் செய்தேன்.சூப்பர்

ரேணுகா உங்களுடைய குறிப்பில் முட்டை மசாலா வறுவல் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ரேணுகா... சின்ன வெங்காயம், மிளகு சேர்ப்பது இதுவே முதல் முறை.ரொம்ப நல்லா இருந்தது. நல்ல குறிப்பு. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மிக்க நன்றி..இது வேக தான் கொஞ்சம் டைம் எடுக்கும்,பொறுமையா வேகவிட்டா மொறுகலா வரும்..மீண்டும் நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

துஷ்யந்தி மிக்க நன்றி பின்னூட்டத்திற்க்கு,இப்ப தான் பார்த்தேன்,தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா,
மஞ்சட்கருவை வெளியே எடுக்க எல்லாம் இல்லை. பின்னால் பிரிந்துவிடும் என்று தோன்றியது.
முட்டை சுவை நன்றாக இருந்தது.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா மஞ்சள் கருவை எடுத்து வைத்தால் ஒரு சில சமயம் உதிர்ந்து விடும் தான்.அது ஏன் என்று இது வரை தெரியவில்லை,,ஆனாலும் முக்கால் வாசி எடுத்து வைப்பேன்,என்ன வேக ரெம்ப டைம் எடுக்கும்,பொறுமை வேனும்,உங்கள் பதிவுக்கு நன்றி இமா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இன்று முட்டை மசாலா வறுவல் செய்தேன், செய்ய எளிமையாகவும் சுவையாகவும் இருந்தது. மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

உங்கள் முட்டை மசாலா வறுவல் அருமை.. இன்று மறுபடியும் தக்காளி சாதத்துக்காக இரண்டாவது முறை செய்துவிட்டேன்.. நன்றி..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சந்தனா உங்களுக்கு பிடித்ததில் ரெம்ப
மகிழ்ச்சி.மறுபடியும் செய்திட்டீங்க,மிகவும் நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நன்றி ஹைஷ் அண்ணா,நீங்கள் செய்து பின்னூட்ட்டம் தந்தது மகிழ்ச்சியாய் உள்ளது.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா