பட்டிமன்றம் 9 - வரலாறு

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க வந்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நிறைய தலைப்புகள் பார்த்தேன் ஆனால் அவை இதற்கு முன்னால் வாதாடியதாகவும், முன்றைய தலைப்புகளுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் இருக்கிறது... அதனால் எனக்கு பிடித்த இன்னும் சொல்ல போனால் நானும் என் கணவரும் அடிக்கடி வாதாடும் தலைப்பான திருமதி.ஆயிஸ்ரீ அவர்கள் கொடுத்த தலைப்பில் இந்த பட்டிமன்றத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

தலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?”

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா? தேவைதான் எனில் அதன் அவசியம் என்ன என்பதை இந்த பட்டிமன்றத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

சின்ன குழந்தைகளுக்கு நிறைய பாடசுமை இருக்கிறது இதில் தேவையில்லாத சில பகுதிகளை நீக்குவதும் அவசியம் எனும் போது வரலாறு தேவையில்லை என்று பலர் கூற நான் கேட்டு இருக்கிறேன்...இதில் தங்கள் அனைவரின் கருத்தை கேட்கவே இந்த பட்டிமன்றம்..

இந்த பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரையும் வருக வருக என் அனைவரையும் வரவேற்கிறேன்..

அன்புடன்
தாமரை

ப்ளீஸ் தாம‌ரை, இன்று மாலை வ‌ரை டைம் கொடுங்க‌ளேன்! என் க‌ருத்துக்க‌ளை கொஞ்ச‌ம் சொல்ல‌ ஆசைப்ப‌டுகிறேன்.

என்னுடைய‌ வாத‌ங்க‌ள் என்று சொல்வ‌தைவிட‌, நான் சொல்ல‌ நினைத்த‌ க‌ருத்துக்க‌ளைதான் இங்கு பதிந்திருக்கிறேன் தோழிக‌ளே!

இலக்கியங்கள் எவ்வாறு 'காலத்தின் கண்ணாடி' என்று போற்றப்படுகின்றனவோ, அதுபோலவே வரலாறும் முக்கியத்துவம் வாய்ந்தவை! ஏனெனில், நாம் எப்படி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மதிப்பிடுவதற்கு, கடந்த காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்ற வரலாறுதான் நமக்கு அளவுகோலாக இருக்கிறது. எந்த சமூகத்திற்கு வ‌ர‌லாறு என்று ஒன்று இல்லையோ, அது த‌ன்‌ முக‌வ‌ரியையே இழந்துதான் போகும். அவ்வ‌ள‌வு முக்கிய‌த்துவ‌ம் பெற்ற‌ வ‌ர‌லாறு என்ப‌து படிக்கவோ, மனனம் செய்யவோ, பரீட்சை எழுதவோ க‌ஷ்ட‌மாக‌ இருந்தாலும் மாண‌வ‌ப்ப‌ருவ‌த்தில் சொல்லித்த‌ர‌ப்ப‌ட‌வேண்டும். இன்றைய‌ கால‌த்திற்கு பிர‌யோஜ‌ன‌ப்ப‌டும் வ‌கையில் ச‌ம‌கால‌ வ‌ர‌லாற்றையும், இப்போதைய‌ சில‌ நிகழ்வுக‌ளையும் சேர்த்து, (தோழிக‌ள் சொன்ன‌துபோல்) சில முன்னேற்ற‌ங்க‌ளை பாட‌த்தில் சேர்க்க‌லாமே த‌விர‌, வ‌ர‌லாறே வேண்டாம் என்று முற்றிலுமாக‌ த‌விர்க்க‌ முடியாது.

ந‌டுவ‌ர் அவ‌ர்க‌ளே! என்னுடைய முன்னுரையை வைத்து 'வ‌ர‌லாறு வேண்டும்' என்று கூறும் அணியில் நான் பேசுவ‌தாக‌ நினைத்திருப்பீர்க‌ள்! வ‌ர‌லாறு கண்டிப்பாக வேண்டும்தான்! ஆனால்....,

ந‌ம் ப‌ள்ளிக் குழ‌ந்தைக‌ளுக்கு புக‌ட்ட‌ப்ப‌டும் வ‌ர‌லாறு, 'இந்தியாவின் வ‌ர‌லாறு' என்று குறிப்பாக‌ சொல்லும்போது, இப்போதைக்கு பாட‌மாக‌ அவை க‌ற்பிக்க‌ப்ப‌டவேண்டாம் என்றுதான் என்னால் சொல்ல‌ முடிகிற‌து. கார‌ண‌ம், இந்தியாவின் வரலாறு என நமது வரலாற்று ஆசிரியர்களால் பள்ளிச் சிறுவர்களுக்கு போதிக்கப்படும் வரலாறுகள் பாதி திரிக்கப்பட்டவை, ஒரு சில‌ உண்மை நிக‌ழ்வுகளோடு மறைக்கப்பட்டவைதான் மீதி வ‌ர‌லாறு! நம் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவரும், சிறந்த வரலாற்று ஆய்வாளருமான‌ டாக்டர் பி.என்.பாண்டே அவ‌ர்க‌ளின் புத்த‌க‌ங்க‌ள் இத‌ற்கு மிக‌ச் சிற‌ந்த‌ சாட்சிக‌ளாக‌ விள‌ங்குகின்ற‌ன. வரலாற்றை திரித்து எழுதுபவர்கள் மற்றும் பொய்களை புனைபவர்களுக்கு ரொம்ப ஈசியான‌ இலக்கு பள்ளிச் சிறுவர்கள்தான்! குழந்தைகளுக்கு வரலாற்றுடன் கூடிய ஒரு அறிமுகம் ஏற்படுவது என்பது பெரும்பாலும் பள்ளிப் பாடங்கள் மூலமாகதான். குழந்தைகளைப் பொறுத்தவரை பள்ளிகளில் போதிக்கப்படும் பாடங்களை அப்படியே நம்பதான் செய்வார்கள். இவை பொய்யாக இருக்குமோ என்று சிந்திக்கக்கூட தோன்றாத பருவம் அது. சின்னஞ்சிறுசுகளின் கள்ளங்கபடமற்ற மனங்களில் நஞ்சை விதைப்பதைப்போல பொய்யான கருத்துக்களையே ஆங்காங்கே பதிய வைத்திருக்கின்றனர், இந்திய‌ வரலாற்றைத் திரித்த‌வ‌ர்க‌ள்!

இந்த‌ இட‌த்தில் தோழி ஆயிஸ்ரீ எடுத்துவைத்த‌ மிக‌ முக்கிய‌மான‌ ஒரு வாத‌த்தை இங்கு வ‌ழிமொழிகிறேன்.

////வரலாற்றில் மறைக்கப் பட்ட உண்மைகள் ஏராளம்...

(சம காலத்தில் இன்று, கண்கூடாக நாம் பார்க்கிறோம் ... நம் கைக்கெட்டும் தொலைவில் ... கண்ணீரால் மறைக்கப்பட்டு, தண்ணீரில் எழுதப்படும் உண்மை வரலாறு யாருக்குத் தெரியும்? )

இன்றைய காலத்தில் எவர் வலியவரோ. அவர் எழுதுவது தான் நாளைய வரலாறா? அதை தான் நம் குழந்தைகள் படிக்க வேண்டுமா? அதில் இருந்து எதைத் தெரிந்து கொள்ள போகின்றனர்...அன்பையும் கருணையையும் சகிப்புத்தன்மையையும் உண்மையையும் நேர்மையயும் குழி தோண்டிப் புதைத்து விட்டு வலியவன் வகுக்கின்ற வரலாறு தேவையில்லை...//

எந்த‌ள‌வுக்கு இந்திய‌ வ‌ர‌லாற்றின் உண்மை நிலையை புரிந்து எழுதியிருந்தால் இவ்வ‌ள‌வு அழுத்த‌மான‌ வார்த்தைக‌ளால் 'வரலாறு தேவையில்லை' என்று ம‌றுத்திருப்பார்கள் நம்ம ஆயிஸ்ரீ? இதைதான் நானும் சொல்ல‌வ‌ருகிறேன்.

சில ஜனநாயக விரோத சக்திகள், இருட்டாகிப்போன‌, கச‌ப்பான‌ தங்கள் கடந்த கால வரலாற்றை தங்கள் நிகழ்கால, எதிர்கால திட்டங்களுக்கு சாதகமாக இருக்கும்படி செய்துக்கொள்வதற்கும், அதன் மூலம் மக்கள் மத்தியில் தன‌து செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்திலும், தன‌க்கு மாற்றமானவர்களின் புகழையும் அந்தஸ்தையும் சீர்குலைக்கும் விதத்திலும் பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டார்கள்! வரலாற்றின் முக்கியப் பகுதிகளைக் குழி தோண்டிப் புதைத்தார்கள்! அதுமட்டுமா? யாருக்கெல்லாம் இந்திய விடுதலைப் போரில் பங்கில்லையோ அவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தந்து எழுதினார்கள். மதுரை பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டிருக்கும் History of Freedom Struggle in India என்ற நூல் இவற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தங்களின் பிரித்தாளும் சூழ்ச்சியினால் நேர்மையற்ற முறையில் கட்டுக்கதைகளை எழுதி வைத்த‌ கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் போன்ற‌ ஆங்கிலேய நூலாசிரியர்களுக்கும் கூட‌ இதில் பங்குண்டு! அந்த ஆங்கிலேய நூலாசிரியர்களால் எழுதப்பட்ட புனைந்துரைகளும் திரிப்புகளும் நிறைந்த‌ 'இந்திய வரலாறு' என்னும் நூல்தான் இன்றும் நம் இந்திய மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. உண்மை வரலாறுகள் மக்கள் மத்தியில் மறைக்கப்பட்டன! எந்தவிதமான‌ சார்பு நிலையோ பாரபட்சமோ இன்றி நடுநிலையாகவும் உண்மைகளைக்கொண்டும் பதியப்பட்ட அல்பிருனி போன்றோரின் வரலாற்றுக் களஞ்சியங்கள் மறக்கடிக்கப்பட்டன. இப்படிப்பட்ட வரலாற்றுத் திரிப்பு என்பது காலங்காலமாகவே நடந்து வந்திருக்கிறது என்ற‌ உண்மையை, ந‌ம்மில் எத்த‌னை பேர் அறிந்து வைத்துள்ளோம் சொல்லுங்க‌ள்? ஒரு நாட்டின் வரலாற்றையே திரித்து, மறைத்து, இல்லாத இடைச் செருகல்களைச் சேர்த்து எழுதுவது, நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமல்ல‌வா? உண்மையை பொய்யுடன் கலக்கும்போது, அந்த உண்மையும் மாசுபட்டு, எது உண்மை எது பொய் என்று தெரியாமால் போய்விடுகிறதே! அப்படி ஒரு சரித்திரம் தேவையா?

இந்திய வரலாறு எவ்வளவு மோசமான‌ அளவிற்கு திரிக்கப்பட்டு, உருமாறிப்போய் கிடக்கின்றன‌ என்பதற்கு எத்தனையோ சம்பவங்கள் ந‌ம் க‌ண்க‌ளுக்கு புல‌ப்ப‌டாம‌லே இருக்கின்றன தோழிகளே! ஆனால் திரிக்க‌ப்ப‌ட்ட‌ இந்திய‌ வ‌ர‌லாற்றை ம‌ட்டுமே அறிந்த‌ நாம், அவ‌ற்றை ப‌டித்துவிட்டு, ஓஹோ...அவ‌ர் அப்ப‌டியா, இந்த‌ நிக‌ழ்வு இப்ப‌டியா என்று, முழுமையான‌ ஒரு உண்மை வரலாறாகவே நம் உள்ளங்களில் ப‌தித்துக்கொண்டுள்ளோம். அத‌ன் விளைவு..? இந்த‌ இட‌த்தில் தோழி க‌விசிவாவின் வார்த்தைக‌ளையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

//நிறையபேர் வரலாற்றை படிச்சுட்டுதான் நம் நாட்டில் மதக்கலவரமே மூண்டது. அந்த காலத்தில் என் மதத்தினரை அதிகாரத்தை பயன்படுத்தி கொடுமைப்படுத்தினர். அதற்கு இப்போது நாங்கள் பழிவாங்குகிறோம் என்று இறங்கியதால்தான் தொடர்ச்சியாக மதக்கலவரங்கள் மூண்டன.//

நிச்சயமாக வகுப்பறைகளில் இதுபோன்று திரிக்கப்பட்டவைகளை அனுமதிப்பது, பெரும் மோசமான விளைவுகளையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்ப‌து நித‌ர்ச‌ன‌மான‌ உண்மை தோழிகளே! வளரும் இளம் நெஞ்சங்களில் துவேஷ‌ எண்ணங்களை விதைக்கும் வகையில் எழுதியுள்ள அபத்தமான வரலாற்று புத்தகங்களில், ஆபத்தான பல விஷயங்கள் இருப்பதை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த‌, நல்லெண்ணம் கொண்ட வரலாற்று ஆய்வாளர்க‌ளுக்கு நாம் ந‌ன்றி செலுத்த மிகவும் க‌ட‌மைப்ப‌ட்டுள்ளோம்.

ஆக, நடுவர் அவர்களுக்கும், இரண்டு அணி தோழிகளுக்கும் நான் சொல்லிக்கொள்வது இதுதான்! அதாவது, இந்திய‌ வரலாறு உண்மைகளின் ஒளியில் திருத்தி எழுதப்படவேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயமான ஒரு தேவையாக உள்ளது. அதனால், மறைக்கப்பட்ட உண்மை வரலாறுகள் முழுமையாக மக்கள் மன்றத்தில் கொண்டுவந்து சமர்ப்பிக்கப்படவேண்டும். இந்திய வரலாற்றில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக துடித்தெழுந்து போராடி தங்கள் இன்னுயிரை ஈந்தவ‌ர்க‌ள், சாதனைகளும் தொண்டுகளும் செய்து ம‌க்க‌ளுக்கு சுதந்திர‌ம் வாங்க பாடுப‌ட்ட‌வ‌ர்களின் பங்குகள் எல்லாம் உரிய அழுத்தத்தோடு மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லப்படவேண்டும். திரித்து எழுதப்பட்டவை திருத்தி எழுதப்படவேண்டும். துவேஷ உணர்வுடன் சொருகிவிடப்பட்ட இடைச்செருகல்கள் களைந்தெறியப்படவேண்டும். அதற்கான‌ நாள் வெகு தொலைவில் இல்லை! அதுவ‌ரை இதுபோன்ற வ‌ர‌லாறு ப‌ள்ளிக‌ளில் வேண்டாம் என்ற‌ அணியிலேயே இருந்துக்கொள்கிறேன். நீங்கள் தீர்ப்பு எப்படி சொன்னாலும் பரவாயில்லை :)

வாய்ப்புக்கு ந‌ன்றி கூறி விடை பெறுகிறேன்.

பின் குறிப்பு:- பதிவு ச‌ற்று நீண்டுவிட்ட‌து, ம‌ன்னிக்க‌வும்! வ‌ர‌லாறு பாடம் ந‌ட‌க்கும்போது தூங்கி வ‌ழிந்த‌துபோல், இதை ப‌டிக்கும் தோழிக‌ள் தூங்கிவிட‌வேண்டாம் :-) ‍எல்லாம் அனுப‌வ‌ம்தான் :))

பள்ளிபருவத்தில் ஆரம்ப வரலாறு பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் மிக முக்கியமானது. //இலக்கியங்கள் எவ்வாறு 'காலத்தின் கண்ணாடி' என்று போற்றப்படுகின்றனவோ, அதுபோலவே வரலாறும் முக்கியத்துவம் வாய்ந்தவை! ஏனெனில், நாம் எப்படி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மதிப்பிடுவதற்கு, கடந்த காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்ற வரலாறுதான் நமக்கு அளவுகோலாக இருக்கிறது. எந்த சமூகத்திற்கு வ‌ர‌லாறு என்று ஒன்று இல்லையோ, அது த‌ன்‌ முக‌வ‌ரியையே இழந்துதான் போகும். அவ்வ‌ள‌வு முக்கிய‌த்துவ‌ம் பெற்ற‌ வ‌ர‌லாறு என்ப‌து படிக்கவோ, மனனம் செய்யவோ, பரீட்சை எழுதவோ க‌ஷ்ட‌மாக‌ இருந்தாலும் மாண‌வ‌ப்ப‌ருவ‌த்தில் சொல்லித்த‌ர‌ப்ப‌ட‌வேண்டும். இன்றைய‌ கால‌த்திற்கு பிர‌யோஜ‌ன‌ப்ப‌டும் வ‌கையில் ச‌ம‌கால‌ வ‌ர‌லாற்றையும், இப்போதைய‌ சில‌ நிகழ்வுக‌ளையும் சேர்த்து, (தோழிக‌ள் சொன்ன‌துபோல்) சில முன்னேற்ற‌ங்க‌ளை பாட‌த்தில் சேர்க்க‌லாமே த‌விர‌, வ‌ர‌லாறே வேண்டாம் என்று முற்றிலுமாக‌ த‌விர்க்க‌ முடியாது.// வரலாறு வேண்டாம்,என்பவர் இருப்பீர்களாகில் உங்களிடம் நான் கேட்கிறேன், எந்த ஒரு போட்டியிலும் இடம்பெறும் பொது அறிவு என்பது உங்கள் குழ்ந்தைகளுக்கு வேண்டாமா?????????? பொதுவாகவே ஒரு மனிதனுக்கு முக்கியம் பொதுஅறிவு.அதில் முக்கியபங்கு வகிப்பது வரலாறு.
படிக்காத பெற்றோர் கூட மகன் வரலாறு படிக்கும் போது அறியாத பல விஷயங்களை எளிதில் அறியலாம்(மற்ற பாடங்களில் வாய்ப்புக்கள் குறைவு).
//இப்படிப்பட்ட பாடத் திட்டத்தை வைத்துக் கொண்டுதான் சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் குழந்தைகள் அறிந்து கொள்கிறார்களா? வேடிக்கைதான். உண்மையில் இத்தினங்கள் விடுமுறை என்பதால்தான் குழந்தைகளுக்கு(சில பெரியவர்களுக்கு கூட) நினைவில் நிற்கிறது. வேதனைப் பட வேண்டிய விஷயம்.
// அப்படியா? பின் எப்படி அறிந்துகொள்கிறோம்???????????? பிறந்த நாளை கூடக் புது உடைகள் கிடைக்கும் என்பதற்காக தானே பலர் நினைவில் நிற்கிறது அதற்காக வேதனை படலாமா???? ஆனால் அந்த பிறந்த நாளில் பல கருத்துக்கள் உள்ளது, சுதந்திர தினம் கொண்டாடும் போது அதில் அடங்கியுள்ள கருத்துக்கள் பல, அவற்றை நினைவுக்கு கொண்டுவருவது வரலாறு முக்கிய பங்கு வகிக்கிறது.
வரலாறு பாடமாக இல்லையென்றால் படித்த பெற்றோரால் மாத்திரமே பிள்ளைகளுக்கு சொல்லி தர இயலும். அப்படியே ஆனாலும் எத்தனை பேர் சுதந்திர தினம் அன்றாவது காந்தி,நேரு,அடிமை தனம் பற்றி சொல்லி தருவோம்?,கற்ப்பது,கேட்பது வித்தியாசம்
உண்டு. நாளடைவில் நம் குழ்ந்தை அதன் குழந்தைக்கு கற்பிக்கும் போது ஏதோ என் அம்மா சொன்னாங்க அதபத்தி அந்த அளவு போய்விடும்.

திரிக்கப்பட்ட மறைக்கபட்ட உண்மைகள் இருக்குமாயின் அதை திருத்தமுயற்ச்சிப்போம். அதற்காக வரலாற்றை பாடத்தில் இருந்து எடுத்துவிட்டால் அது சரியான முறை அல்ல. தெரிந்து கொள்ளமுடிந்தது இல்லாமல் போய்விடும்.

வரலாறு என்பது பொக்கிஷம், அதில் இணைக்கமுயற்சிப்போம், மறைக்க முயலவேண்டாம். பாடமாக இல்லாவிடில் நம்மால் அறிய வாய்ப்புகள் மிகமிக குறைவு என கூறிவிடை பெறுகிறேன்.

with love

முடிவு தெரிஞ்சு போச்சு,உங்கள் அநேக பதிவுகளில் இருந்தே தெரிகிறது,நீங்கள் அந்தப்பக்கம் என்று,ஒரு சமயம் இப்படி ஒரு மாயையை உண்டு பண்ணிவிட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக சொல்லப்போறீங்களோ !தீர்ப்பு எப்படி இருந்தாலும் சரி,உண்மை வரலாறா?திரிக்கப்பட்டதா? என்பது கேள்வி இல்லை.வரலாறு பாடம் தேவையா?தேவை இல்லையா? என்றால் எங்கள் அணியின் வாதம் பாடமாக வரலாறு தேவை என்று ஆணித்தரமாக சொல்லி விடைபெறுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியாக்கா! உண்மை வரலாறா? திரிக்கப்பட்டதா? என்பது கேள்வி இல்லை என்று அலட்சியம் செய்துவிட்டு போகக்கூடிய அளவுக்கு அது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயமல்ல! அப்பேற்பட்ட நம் இந்திய வரலாறு இன்றுவரை நம்மிடையே ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மோசமான விளைவுகளைப் பற்றி கூறி, இன்னும் இது தொடராமல் இருப்பதற்கு, அவையெல்லாம் சரிசெய்யப்படும்வரை (தற்காலிகமாக) வரலாறு வேண்டாம் என்றுதான் கூறியிருக்கிறேன், கவனிக்கவில்லையா?

'வேண்டுமா? வேண்டாமா?' அது மட்டும்தான் வாதம் என்று பேசிவிட்டு போனால், நான் ஏற்கனவே கூறியதுபோன்ற அநியாயங்களை, மிகப்பெரிய ஒரு வரலாறே கொலை செய்யப்பட்டுள்ளதே, இந்த வரலாற்றுக் கொலையை எங்குதான் சொல்லி உணர வைப்பது? உண்மை வரலாறு மக்களுக்கு புரியும்வரை வரலாறு வேண்டாமென்று நான் சொல்வதற்கு, வரலாற்றில் கொட்டிக்கிடக்கும் பொய் புளுகல்களும், திரித்து, மறைக்கப்பட்டவையும், இல்லாத இடைச் சொருகல்களும், அதனால் வரக்கூடிய விபரீதங்களும்தான் காரணம் என்று இருக்கும்போது, அந்த காரணத்தைதானே இங்கு நான் சொல்லமுடியும். இது தலைப்பை தாண்டிய விஷயம் ஒன்றும் அல்லவே? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வரலாற்றை வேண்டாம் என்றார்கள். அதிலும் பல நியாயமான காரணங்கள் இருந்தன. என்னுடைய பார்வை எந்த முக்கியத்துவத்தை நோக்கி சென்றதோ அதைதான் இங்கு பதிந்தேன். வேண்டுமென்றால் மீண்டும் பொறுமையாக படித்துப்பாருங்கள்.

எனக்கு அவசரமாக ஒரு வரலாறு புத்தகத்தை அங்கிட்டு இருந்து யாராவது fax பண்ணி அனுப்ப முடியுமா? :)) நடுவருக்கு படிச்சுக் காமிக்கோனும்.. எனக்கு இந்த எதிரணி சொல்லுவது போல ஏதாவது உண்மையாலுமே இருக்கான்னு தெரியனும்.. என்னைப் பொறுத்தவரையில் பிள்ளைகளுக்கான வரலாறு மிகவும் மைல்ட் ஆக எழுதப்பட்டிருந்தது.. எதிரணியினர் ஏன் இந்த பில்ட் அப் கொடுக்கிறீர்கள் என்று புரியவில்லை..

எனக்கு நினைவு இருக்கும் வரை - ஒவ்வொரு டைனாஸ்டி டைனாஸ்டியாக எப்போ இருந்து எப்போ வரைக்கும் இந்தியாவில் ஆண்டார்கள், அவர்கள் காபிடல் என்ன, எல்லை எதுவரைக்கும், அடுத்து வந்த அவர்கள் வம்சத்தினர் யார், அவர்கள் காலத்திலே என்னென்ன சுபிட்சம் நடந்தன, அவங்களுக்கு பின்னே யார் யார் வந்தார்கள் என்பது போல் தான் வரலாறு பாடம் இருந்தது.. யாரைப் பற்றியும் நெகடிவாக குறிப்பிடவில்லை.. யார் மீதும் எந்த நெகடிவ் உணர்வும் ஏற்ப்படவில்லை.. ஒவ்வொரு வம்சத்தின் முடிவையும், இவர்களுக்கு அப்புறம் இவர்கள் வந்தார்கள் என்பது போன்று தான் சொல்லியிருந்தார்கள்.. இவர்கள் இங்கு வந்து போர் தொடுத்து இவர்களை வீழ்ச்சியுற செய்தார்கள், இதனால் இத்தனை மக்கள் உயிரிழந்தார்கள், இந்திந்த கொடுமை தீங்கெல்லாம் இங்குள்ள மக்களுக்கு செய்தார்கள் என்பது போன்ற எந்த விவரிப்பும் நான் படித்த வரலாற்று பாடத்திலே இருந்த்து இல்லை!!

ஹரப்பா மொதஞ்சதாரோ காலத்திய மக்கள் அப்போதே எவ்வாறு வீடு கட்டியிருந்தனர், சமூக அமைப்பில் வாழ துவங்கியிருந்தனர் என்று விவரித்திருப்பார்கள்.. இதெல்லாம் படிக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது..சமீபத்தில் படித்தது - அங்கே கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்கள் பண்டைய தமிழ் எழுத்துக்களை போல இருக்கின்றனவாம்.. இதெல்லாம் பிரமிப்பூட்டுகின்றன..

அப்புறம் சுதந்திரப் போராட்டம்.. ஈஸ்ட் இந்தியா கம்பனியின் ஆட்கள் சென்னையில் வந்து இறங்கியதிலிருந்து அதற்க்கு பிறகு நடந்த பெரிய போராட்டங்களை நிகழ்வுகளை பற்றி எழுதியிருப்பார்கள்.. அதன் நடுவே அவர்கள் பள்ளிகள் கட்டினார்கள் கல்வியை பரப்பினார்கள் என்பது போன்ற சில பாசிடிவான விஷயங்களையும் சொல்லியிருந்தார்கள்.. உண்மை தானே? என் கல்லூரி கூட வெள்ளையர்களால் கட்டப்பட்டது தான்.. அதன் மரப்படிகள் இன்றும் நிலையாக நிற்கின்றன.. எல்லாரைப் பற்றியும் எல்லா சம்பவத்தையுமே சொல்ல வேண்டும் என்றால் எப்படி? பிறகு புத்தகம் மிக பெரியதாகி விடும்.. மறுபடியும் சொல்கிறேன் - இது நடந்தது என்பதற்கான அறிமுகம் தான் அது.. ஆர்வமுள்ளவர்கள் மேலும் படியுங்கள்.. தெரிந்து கொள்ளுங்கள்..

பள்ளி கால வரலாறு எவ்வளவு மென்மையாக எழுதப்பட்டிருக்கிறது என்று இப்போது தான் புரிகிறது.. உண்மையில் பள்ளியில் படித்த வரலாறு நடந்தவைகளின் ஒரு தொகுப்பு மட்டுமே.. எந்த சம்பவத்தின் சென்சிடிவான விவரிப்பும் அல்ல.. இதை புரிந்து கொள்ளுங்கள் நடுவரே.. ஜாலியன்வாலாபாகில் வெள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்று மட்டுந்தான் இருக்கும்.. பிறகு காந்தி படத்தை பார்த்த போது தான் எனக்கு அந்த சம்பவம் எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும் என்று புரிந்தது.. காரணம், ஏற்க்கனவே சொன்னது போல - நடந்ததை சொல்ல வேண்டும், ஆனால் அதனால் பிள்ளைகளின் மனதை பாதிக்கக்படக் கூடாதென்பது தான்... இன்றைய பல பல நிகழ்வுகளுக்கு காரணம் - அரசியலும், சட்ட ஒழுங்கு சீர்குழைவும், வறுமையும் தான்... வரலாற்று பாடம் அல்ல..

நல்ல வேளை, அன்று பள்ளியிலே புத்தரையும் மகா வீரரையும் பற்றியும் நல்ல அறிமுகம் தந்திருந்தார்கள்.. நல்ல நல்ல ப்ரின்சிபல்ஸ்.. அதற்க்கு பிறகு வேறு எப்போதும் இவர்களை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை.. இல்லைஎன்றால் இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பதற்கு புத்தரையும் வெறுத்திருப்போம்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அஸ்மா.. நன்றி.. இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் திரும்பி கொண்டிருக்கிறது.. வெள்ளையர்கள் divide and rule என்னும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்க்கொண்டு இங்குள்ள நிலப் பரப்புகளை மெல்ல மெல்ல கையகப் படுத்தினார்கள் என்ற பாயிண்ட்டும் எம் வரலாற்று புத்தகத்திலே சொல்லி இருந்தார்கள்!!! என் ஆசிரியரும் சொல்லித் தந்தார்.. ஒரு சிங்கமும் நான்கு மாடுகளும் கதையை போன்று என்று.. அதற்க்கு பிறகு வேறெங்கும் இதை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியதில்லை..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அருமையான தலைப்பு.2 பேரும் அடிக்கடி ஆராய்கின்ற தலைப்பு கொடுத்திருக்கிங்க.பாராட்டுக்கள் மாமி சாரி நடுவரே.

அப்புறம் உங்க பேச்சு காஆஆஆஆ என்னை தேடவேயில்லை நீங்க...

மருமகன் சொன்ன பொம்மக்கா நினைத்து ஒரே சிரிப்பு.வரலாறு பாடம் தேவை என்பது என் கருத்து ஏன்னா அந்த வகுப்புல தான் நான் நல்லா தூங்குவேன் நிறையா மார்க்கும் வாங்குவேன் அதெப்படின்னு மட்டும் கேட்காதீங்க..மத்த பாடத்தைலாம் நல்லா கவனித்தாலும் வரலாறு+ஆங்கிலம்+கணக்குல தான் மார்க் அதிகமா இருக்கும்.
நிறைய கருத்து சொல்ல ஆசை ஆனால் டைப்செய்ய நேரமில்லை மாமி..

ஒவ்வொரு புத்தகத்திலும் index பக்கத்திற்கும் முன்னால் கண்டிப்பாக தேசிய கீதம் இருக்கும்...அதையே மறந்து விட்டவர்களையும் ...சிறுவன் பாட வாய் பிளந்து கேட்டோம் என்கிறவர்களையும் என்ன சொல்வது...
சந்தனா உங்களுக்கு துணைக்கு சமன் செய்ய யாரும் தேவையில்லை...அருமையோ அருமை....
தலைப்பு சுமையாக கருதி வரலாறு பாடம் தேவையா இல்லையா என்பதுதானே...
எதிரணியினர் அனைவருமே திரிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி மட்டுமே பேசுகிறார்களே...
cars படம் பார்த்துவிட்டு சில நாட்கள் கழித்து wall e படம் பார்த்தபோது என் கணவர் கூறினார்....இந்த நாளில் திரும்ப உலகுக்கு வருவோர் அந்த நாளில் கார்கள் குஉட பேசியிருக்கின்றன என நினைப்பார்களோ என்று ...அதற்காக அதனை வரலாறு என்று கொள்ள முடியுமோ...graphics எந்த அளவிற்கு பயன்படுத்தியிருக்கிறோம் என்பதுதானே வரலாறு...
matrix பாடம் படிக்கும்போது அதன் உபயோகம் புரிந்ததில்லை...கணினி பாடம் படிக்கும்போது 1024 x 1024 என்றபோதுதான் புரிந்தது...
இளம் பருவத்தில் எல்லாவற்றின் உபயோகங்களையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது...போக போக(மேற்படிப்பு) புரியும்...
நமது முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் வரலாற்று பாடம் நிச்சயம் தேவை என்று கூறி அமைகிறேன்...வணக்கம்...

நடுவரே.... ஓடிவாங்கோ..... தீர்ப்பு சொல்லும் நாள் வந்துவிட்டது !!! சீக்கிரம் வந்து எம் கட்சி ஜெயித்துவிட்டது என்று எதிர் கட்சிக்கு சொல்லி போங்கோ..... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்