ஈசி வெஜிடபிள் குருமா

தேதி: October 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

கேரட் - 1/2கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 1/4கப் (பொடியாக நறுக்கியது)
காலிஃப்ளவர் - 1/4கப் (சிறிய பூக்களாக உதிர்த்தது)
உருளைக்கிழங்கு - 1/2கப்(பொடியாக நறுக்கியது)
பீட்ரூட் - 1/4கப் (பொடியாக வெட்டியது)
வெங்காயம் - 3/4கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 மேசைக்கரண்டி(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லிக்கீரை - 1 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
தேங்காய் பால் - 1/4 கப்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 30 விநாடிகள் வதக்கி வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதியளவு வதங்கியதும்(கண்ணாடி போல் ஆனதும்) தக்காளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
எல்லா காய்கறிகளையும் சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கி காய்கறி மூழ்கும் அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடவும்.
4 முதல் 5 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும்.
குக்கர் ஸ்டீம் அடங்கியதும் திறந்து குழிவான கரண்டியால் காய்கறிகளை லேசாக மசித்து விடவும். (முழுவதும் மசிக்க வேண்டாம்)
தேங்காய் பால் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு மல்லிக்கீரை சேர்த்து இறக்கி சப்பாத்தியோடு பரிமாறவும்.


சப்பாத்தியோடு நிறைய காய்கறிகளும் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். தேங்காய்பால் சேர்க்க விரும்பாதவர்கள் லோ ஃபேட் பாலும் பயன் படுத்தலாம். சுவை அதிக அளவில் மாறாது. தேங்காய்பாலுக்கு பதில் ஒன்றரை மேசைக்கரண்டி தேங்காயை நைசாக அரைத்தும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Portia Manohar
Is 2 green chilli enough for kaaram.

Portia Manohar

ஹாய் போர்ஷியா இந்த குருமாவிற்கு அதிக காரம் இழுக்காது. உங்களுக்கு குறைவாக இருக்கும் என்று தோன்றினால் தேங்காய் பால் சேர்க்கும் முன் காரம் சரிபார்த்து விட்டு போதவில்லைன்னா பச்சைமிளகாய் பொடியாக வெட்டி சேர்த்து கொதிக்க விட்டு பின் தேங்காய்பால் சேர்க்கலாம்.
நான் இங்கே கிடைக்கும் காரமான குட்டி மிளகாயில்(cabe rawit or chilly paddi) ஒன்றே ஒன்றுதான் சேர்ப்பேன். சில வேளைகளில் அதுவே காரம் கூடிவிடும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Portia Manohar
Thanks for clearing my doubt..
Are you living in Indonesia?

Portia Manohar

ஆமாம் போர்ஷியா. நான் இந்தோனேஷியாவில்தான் இருக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Portia Manohar
Naanum Indonesiavil thaan irrukirean. Neenga Jakarta va illai vera idamma?

Portia Manohar

ஹாய் போர்ஷியா நான் ஜகார்த்தாவில் இல்லை. riau தீவுகளில் pulau batam என்னும் இடத்தில் இருக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Portia Manohar
Nice to know that you too live in Indonesia.
Do keep in touch.

Portia Manohar