கோதுமை பிரியாணி வித் ரெய்தா

தேதி: November 28, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (9 votes)

 

கோதுமை ரவை - ஒரு கப்
கேரட் துருவல் – ஒரு கப்
பொடியாக நறுக்கின வெங்காயம் - கால் கப்
பொடியாக நறுக்கின தக்காளி – கால் கப்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
கிராம்பு - 2
பட்டை – ஒன்று
சோம்பு – அரை தேக்கரண்டி
பிரியாணி இலை - ஒன்று (விருப்பப்பட்டால்)
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – தேவைக்கு
தண்ணீர் – 3 கப்
<b> ரெய்தாவுக்கு தேவையானவை: </b>
தயிர் - அரை கப்
வெங்காயம் – ஒன்று
தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - ஒன்று
உப்பு- தேவைக்கு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் பொடியாக நறுக்கின தக்காளி துண்டுகளை போட்டு வதக்கி விடவும்.
தக்காளி வதங்ககியதும் கேரட் துருவலை போட்டு ஒரு நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
தீயின் அளவை மிதமாக வைத்து மூடி 8 நிமிடங்கள் வேக விடவும்.
தண்ணீர் வற்றியதும் நன்றாக ஒருமுறை கிளறி விட்டு இறக்கவும். சுவையான கோதுமை ரவை பிரியாணி ரெடி.
ரெய்தாவுக்கு: வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், பச்சைமிளகாய், உப்பு மூன்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவும். அதனை வெங்காயத்துடன் கலந்து பரிமாறுமுன் அதில் தயிர் கலக்கவும்.
சுவையான கோதுமை ரவை பிரியாணி ரெய்தாவுடன் தயார். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Evening என்ன tiffin செய்யலாம் என்று அருசுவை open பண்ணியவுடன் உங்கள் குறிப்பு பார்த்தேன்.உடனே செய்தேன்.வீட்டில் பாராட்டு மழை.அனைத்தும் உங்களுக்கே.Thank you.Keep going

மகிழ்ச்சி கவி.....செய்து பார்த்து பின்னூட்டமும் கொடுத்ததற்கு நன்றி கவி....
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி,நலமாக இருக்கின்றீர்களா?
நல்ல குறிப்பை கொடுத்துள்ளீர்கள்.நான் கோதுமையில் வெஜ் உப்புமா போல் தான் செய்துள்ளேன்.இது போல் இனி செய்து பார்த்திட வேண்டியதுதான்.நன்றாக செய்து இருக்கின்றீர்கள்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் இளவரசி! உங்கள் சாப்பாடு பார்க்க நன்றாக இருக்கின்றது. நான் இது வரை கோதுமை ரவையில் உப்புமா, அல்லது ரவை இட்டலி செய்துள்ளேன். இது புதுவிதமாக இருக்கின்றது. செய்து பார்க்க வேண்டியதுதான். நன்றி இலவசி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அப்சரா,
நலமா இருக்கீங்களா?
உங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றியும்,மகிழ்ச்சியும்
ட்ரை பண்ணிட்டு நல்லா வந்தா சொல்லுங்க

யோகராணி,
சுகமா இருக்கீங்களா?உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிப்பா...கூடவே பிரியாணிக்குபோல் பச்சை பட்டாணி வேறு காய்கள் சேர்த்தும் செய்யலாம்.புதினா இலைகள் கூட சேர்க்கலாம்.
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி சூப்பர் டயட் குறிப்பு. இதற்கு முன் ஒருநாள் நானும் கோதுமை ரவையில் பிரியாணி செய்கிறேன் என்று செய்தேன். ஒரே கொழ கொழ என்றாகிவிட்டது. உங்கள் குறிப்பை பார்த்ததும்தான் புரிகிறது நான் செய்த முட்டாள்தனம். ரவையை வறுக்காமல் சேர்த்து விட்டேன் :-(. இந்த வாரம் ஒருநாள் இதே முறையில் செய்ய போகிறேன். நன்றி இளவரசி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவி...தண்ணி அளவும் கொஞ்சம் கூடுதலாகிவிட்டாலும் களி மாதிரி ஆகிவிடும்.இந்த அளவு தண்ணீர் சரியாக இருக்கும்.

பட்டிக்கு நீங்க நடுவர் பொறுப்பு ஏத்துக்கலன்னு முன்னாடியிருந்தே நானும் 3ஆம் பட்டியிலிருந்து உங்களை சொல்லி வருகிறேன்.

எங்க மறுபடியும் கேட்டா ஒரே ஊர் பாசம்ன்னு நினைப்பாங்களோன்னுதான் கேட்கலை.

உண்மையில் உங்க பதிவுகள் அனைத்தும் உங்க சமையல் குறிப்பு மாதிரி அருமைதான் அதுதான் உண்மையான காரணம் :)

உங்க ஜிமெயில் பதில் கிடைத்தது.நேரம் கிடைக்கும்போது ஒரு பெரிய பதிவு போடுகிறேன்..

என் அன்பு உங்கள் குடும்பத்திற்கு

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி தங்கள் பிரியமான அன்புகு நன்றி. ஏற்கெனவே முந்தைய பட்டிமன்ற தொடரில் ஒருமுறை நடுவராக இருந்து விட்டேன். புதியவர்கள் பங்கேற்க வேண்டும் என்றுதான் மீண்டும் நடுவராகாமல் இருந்தேன். இம்முறை பட்டிமன்றம் தடைபட விரும்பவில்லை அதனால் தான் மீண்டும் நடுவர் பணி :-). தலைப்புதான் தட்டச்சு செய்து கொண்டிருக்கிரேன். நாள அறுசுவையில் வெளியாகி விடும். இம்முரையும் உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிரேன். நேரம் கிடைக்கும் போது கலந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

புதிய அருமையான குறிப்பு. நீங்கள் வசிக்கும் நாடு UAE?நீங்களும் கவியும் பல நல்ல குறிப்புகள் கொடுக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
Save the Energy for the future generation

Save the Energy for the future generation

நலமா இருக்கீங்களா?

உங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றியும்,மகிழ்ச்சியும்.

நான் கத்தாரில் இருக்கேன் இந்திரா..

அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்புடன் இளவசி நீங்கள் சொன்ன மாதிரி புரியாணி செய்யும் பொது பச்சை பட்டாணியும், புதினா இலையும் சேர்த்து செய்தேன். மிகவும் ருசியாகவும் நல்ல வாசனையாகவும் இருந்தது. நன்றி நல்ல ரேசப்பி கொடுத்தமைக்கு. மேலும் நல்ல குறிப்புக்கள் கொடுங்கள்.நன்றி,
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இளவரசி கோதுமை பிரியாணி நான் செய்தேன்
மிகவும் ருசியாகவும் நன்றாக இருந்த்து விட்டில்
அனைவருக்கும் பிடித்திருந்தது நன்றி இளவரசி

Hi இளவரசி எப்படி இருக்கீங்க? உங்க கோதுமை ரவை பிரியாணி பார்த்து விட்டு தான் நான் கடையில் போய் கோதுமை ரவையே வாங்கினேன். ஏன்னா, எனக்கு கோதுமை ரவை வைத்து எந்த ஒரு டிஷும் செய்யத்தெரியாது. ஆனால் சத்தான பொருளை எப்படி சேர்த்துக்கொள்வதுன்னு பல முறை யோசிச்சிருக்கேன்.
இதோ...இன்று இரவு சாப்பாடு இது தான்.நான் பட்டாணி,உருளை, கேரட்டை மிகவும் சிறியதாக நறுக்கி சேர்த்து கொண்டேன் பிறகு புதினா இல்லாததால் கொத்துமல்லி இலை மட்டும் சேர்த்து செய்தேன். மிகவும் சூப்பராய் வந்தது. நல்ல டேஸ்ட்,இன்னும் இதுபோல் நிறைய சத்தான உணவுகளை கொடுத்து அசத்துங்க... நன்றி.உங்க ஓட்ஸ் ஊத்தப்பம் கூட செய்ய ஆசை, ஆனால் ஓட்ஸ் வச்சும் எதுவேமே செய்ய தெரியாததாலே இன்னும் அதையும் வாங்கியதில்லை.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

நலமா இருக்கீங்களா?

வேலைக்கு போறீங்களா?ஜாப் எப்படியிருக்கு?
ரோஹித் எப்படி பிடிவாதம் பண்ணாம ஸ்கூல் போறானா?
இதற்காகவே வாங்கி செய்து பார்த்து பின்னூட்டமும் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி உமா
என்றும் அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இளவரசி அக்கா நலமா ?நேற்று உங்க கோதுமை பிரியாணி செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது என் கணவருக்கு ரொம்ப பிடித்து போச்சி

பிடித்ததில் மகிழ்ச்சி ..நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு..
மன்னிக்கவும் .இன்றுதான் பார்க்கிறேன்..உங்கள் பதிவை

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி சிஷ்டர் உஙகள் கோதுமை பிரியாணி மிகவும் ருசியாக இருந்தது. மிகவும் நன்றி.