ஈஸி சேமியா உப்புமா

தேதி: May 13, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிராண்டட் சேமியா - 1 கப்
நீர் - 1 1/2 - 1 3/4 - கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - சிறு துண்டு
பச்சைமிளகாய் - 2
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது


 

சேமியாவை நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் நன்கு வதங்கியதும் நீரை சேர்க்கவும்.
நீர் நன்கு கொதித்து கொதிக்கும் சப்தம் வரும் பொழுது வறுத்த சேமியாவை கொட்டி கிளறி, உடனே ஒரு மூடியால் மூடி அடுப்பையும் சிம்மில் வைத்து விடவும்.
5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விட்டு, 10 நிமிடங்கள் சென்று இறக்கி விடவும்.
பொலபொல வென்ற சேமியா உப்புமாவை சட்னியுடன் சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இதற்கு உப்பு சேர்க்க தேவை இல்லையா?

உப்பை நினைவு படுத்திய பிரபா அருண்,உங்களுக்கு நன்றி.உப்பு சேர்த்துவிட்டேன்.

ஸாதிகா

arusuvai is a wonderful website