ரவை பனியாரம்

தேதி: April 6, 2009

பரிமாறும் அளவு: 20 பனியாரம் வரும்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

ரவை -- 1 கப்
மைதா/ கோதுமை மாவு/ பச்சரிசி மாவு -- 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -- 1/2 கப் (ருசிக்கேற்ப கூட, குறைய போடலாம்)
ஏலக்காய் -- 2 என்னம் (நசுக்கியது)
எண்ணைய் -- பொரிக்க தேவையான அளவு


 

ரவை, மாவை சேர்த்து தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைகவும்.
பின் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து நன்றாக பிசையவும். மாவாக வரும்.
பதம் இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
ஒரு குழிவான கரண்டியில் மாவை எடுத்து எண்ணையை காய வைத்த வாணலியில் ஊற்றவும்.
சிவக்க வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

shall i make this recipe in non stick paniyaram vessel.

இந்த குறிப்பை வடை செய்வது போல எண்ணையில் போட்டு பொரிக்க வேண்டும்.பேரு தான் பனியாரம்...