வறுத்து அரைத்த மீன் கறி

தேதி: September 20, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

மீன் - 1/2 கிலோ
தேங்காய் - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - ஒரு முழு பூண்டு
சுக்கு - 1"துண்டு
ஓமம் - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
தனியா (முழு) - 3 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 5 கொத்து


 

மீனை சுத்தமாக்கி துண்டுகளாக்கவும். வெங்காயம், பூண்டை தோலுரித்து வைக்கவும். புளியை ஊற வைத்து கரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் சூடாக்கி மிளகை போட்டு வெடிக்க விடவும்.
மிளகாய் வற்றல், தனியா சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
பின்னர் வெங்காயம், 10 பல் பூண்டு, கறிவேப்பிலை போட்டு 3 நிமிடம் வதக்கி தேங்காய் துருவல் சேர்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து தேங்காய் பொன்னிறமானதும் பொடித்த சுக்கு, ஓமம், பெருங்காயம் சேர்க்கவும்.
தேங்காய் வறுபட்டு டார்க் ப்ரவுன் நிறமாகும் வரை சிம்மில் வைத்து வறுக்கவும். (ஓரளவு கருப்பு நிறமாகும்).
சூடு ஆறியதும் மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும். அரைத்த கலவையுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து உப்பு காரம், புளி சரியாக இருக்கிறதா என சரி பார்த்து கொள்ளவும்.
இதனுடன் மீன் துண்டுகளையும் மீதமுள்ள பூண்டுகளையும் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து மணம் வந்த பிறகு இறக்கவும். சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும்.


சைவம் சாப்பிடுபவர்கள் மீனுக்கு பதிலாக முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்து செய்யலாம். இந்த குழம்பு டார்க் பிரவுன் நிறத்தில் இருக்கும். இந்த குழம்பு பிரசவத்துக்கு பின் தினமும் உணவில் சேர்த்து கொள்வார்கள். பத்தியகுழம்பு என்றாலும் சுவையாக இருக்கும். சாதாரணமாக மாதம் ஒரு முறை இந்த குழம்பு சாப்பிட்டால் வாயு மற்றும் அஜீரண கோளாறுகள் நீங்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Dear Kavisiva,

I tried this recipe today using drumsticks instead of fish.It turned out absolutely delicious. Finger licking good ;) Only thing is tht one needs patience to fry the coconut on low flame until it becomes dark brown. But well worth the effort. Also, I din't add omam as I didn't have it in my pantry. will try adding it next time. Thanks a lot for the recipe.

BTW, can one take this curry when pregnant?. or should it be avoided as it has lotsa garlic & can produce lot of heat?

பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி டிசென்.ஓமம் சேர்த்தால் அதன் வாசனை இன்னும் தூக்கலாக இருந்திருக்கும்.எங்கள் வீடுகளில் கர்ப்ப காலத்திலும் வாரம் ஒருமுறை இந்த குழம்பு சேர்க்க சொல்லுவாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Dear Kavisiva, thanks for the reply. I'll definitely try adding omam next time :)

Thanks again. Post more such patthiya recipes if u have. :)

இன்று உங்கள் ரெசிப்பியை try செய்தேன்.நன்றாக இருந்தது.என் அம்மாவின் செய்முறை போலவே இருந்தது.ஆனாலும் ஓமம்,சுக்கு இல்லாததால் சேர்க்கவில்லை.Thanks for the recipe.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹாய் அமர்... பின்னூட்டம் கொடுத்ததில் ரொம்ப மகிழ்ச்சி.ஓமம் சுக்கு சேர்க்காமலும் செய்யலாம்.நாங்கள் அப்படி செய்வதை மீன் தீயல் என்று சொல்லுவோம்.சிலருக்கு ஓமத்தின் ஸ்மெல் பிடிக்காது.அவர்களுக்கு சேர்க்காமல் செய்யலாம்.ருசியில் வித்தியாசம் இருக்காது,மணம் கொஞ்சம் வேறுபடும்.
நன்றி அமர்..

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!