அவகாடோ வித் ஆப்பிள் ஷேக்

தேதி: April 17, 2010

பரிமாறும் அளவு: 3 குழந்தைகள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

அவகாடோ - பாதி
ஆப்பிள் - 1
பால் - 500 மில்லி
சீனி - தேவைக்கு
வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு கோப்பை
தேன் -2 மேசைக்கரண்டி


 

முதலில் அவகாடோ, ஆப்பிளை தோல் மற்றும் கொட்டைகளையும் நீக்கி வைக்கவும்.

பின் மிக்ஸியில் பழங்களை சேர்த்து பால் ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளவும்.

பின் சீனி சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.

பின் பரிமாறும் நீளமான 3 க்ளாஸ்களில் மில்ஷேக்கை ஊற்றி அதன் மேல் ஐஸ்கிரீம் வைத்து, தேனை சுற்றினது போல் ஊற்றவும்.

விருப்பப்பட்டால் மேலே ஒரு செர்ரி வைக்கலாம்.


அவகாடோ மிகவும் சந்துள்ளது. இதை போல் செய்து கொடுத்தால் பார்க்க கலர் டிப்ரெண்டாக இருக்கும். ஐஸ்க்ரீம் வைத்து கொடுப்பதால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

என் 9 மாத பொண்ணுக்கு அவகோடா கொடுக்கலாமா.....எப்படி செய்து கொடுக்க வேண்டும்.எப்படி பழத்தை தேர்வு செய்யவேண்டும். நான் என் friend ஒருவர் வீட்டில் juice குடித்தபோடு கசப்பாக இருந்தது.அதன் பின் குடிப்பதே இல்லை.அதன் ருசி கசப்பானதா யாராவது சொல்லவும்

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

எப்படி இருக்கீங்க. பொண்ணு நலமா. அவகடோ உங்க பொண்ணுக்கு தாராளமாக கொடுக்கலாம்.அவகடோவை 6 மாத குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.நல்ல டார்க் க்ரீன் கலர்ல இருக்கும் அவகடோவை வாங்கலாம்.இதை வேகவைக்கத்தேவையில்லை. தோலை நீக்கிவிட்டு, கொட்டைகளையும் நீக்கி ந்ல்ல மசித்து கொடுக்கலாம். வேனும் என்றால் சிறிது சீனி சேர்த்துக்கலாம்.இதில் நிறைய சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

அன்புடன் கதீஜா.

Assalamu alaikum katheeja mam நீங்க எப்படி இருக்கீங்க. என் பொண்ணு நல்லா இருக்கிறாள் ரொம்ப நன்றி உங்கள் பதிலுக்கு. இன்று avacoda try செய்துவிட்டு பின்னூட்டம் அனுப்புகிறேன்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

உங்கள் மீது சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக. நான் நல்லா இருக்கேன்.அவகடோ பொண்ணுக்கு கொடுத்துட்டு வந்து சொல்லுங்க.அவளுக்கு அந்த டேஸ்ட் பிடித்தால் தொடர்ந்து கொடுங்க.

அன்புடன் கதீஜா.

Avocoda is a healthy fruit bcoz it will convert bad cholesterol(LDL) into good cholesterol(HDL).It is very good 4 BP & heart patients for this reason.U can also include it in ur salad or U can grind into juice with milk & sugar or U can cut into pieces in the shape u cut an apple to eat during breakfast.In our house ,we used 2 eat daily in one of these manners.U should buy avocoda with dark spots on skin sothat it will get ripened soon.After it got ripened ,U can just remove its skin with hand like u peel orange skin.Before using be sure that it is soft 2 touch sothat it was ready 2 use.Got it!!!!?

Jasmin

good idea to choose avocado.

am choosing by your idea .

thanks a lot,
priya.