சிக்கன் கிரேவி

தேதி: April 28, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (26 votes)

 

சிக்கன் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
தேங்காய் - கால் கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 4
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கப்


 

சிக்கனை கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வெங்காயத்தை போட்டு தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதிலேயே தக்காளியை போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காயை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, தாளித்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதனுடன் வெங்காய விழுதை போட்டு 3 நிமிடம் வதக்கவும். அதில் தக்காளி விழுதையும் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கவும்.
பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியவுடன். உப்பு போட்டு நன்கு கிளறவும்.
3 நிமிடம் கழித்து கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு நன்கு பிரட்டி விடவும்.
அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி 10 நிமிடம் வேக வைக்கவும்.
சிக்கன் வெந்ததும் அதில் தேங்காய் விழுதை ஊற்றி கிளறி விடவும்.
சிக்கனிலுள்ள தண்ணீர் முக்கால் பாகம் வந்தவுடன் அதில் புதினா இலைகளை போட்டு கிளறி விடவும். மீண்டும் 10 நிமிடம் வேக விட்டு கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து விடவும்.
சுவையான சிக்கன் கிரேவி தயார். இந்த சிக்கன் கிரேவி குறிப்பினை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. செல்லம்மாள் அவர்கள்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

i tried this receipe.not bad.thank you

பார்க்கும் போதே நல்லாயிருக்குங்க! மிளகாய் தூள் மட்டும் போதுமா? வெங்காயத்தை அரைத்து சேர்ப்பதால் இனிப்பு சுவை கொடுக்காதா?

Hi, I tried the recipe. It turned gr8..
When cooking, I dont have krambu in my house, so i have added elakkai as extra. And when grinding coconut instead of adding water, i added little amount of milk.
Thaks to arusuvai team for doing such a gr8 job.

Really nice.

very nice receipe

உங்க குறிப்பு இன்று செய்து பார்த்தேன்.....நஞ்சாக இருந்தது............மிக்க நன்றி......
..

Nandraha இருந்ததைதனெய் சொல்ஹிரை? நான் உன் அக்க Shafika ... நனும் ஒரு நால் செஇது பார்க பொஹிரென். Thanks to அருசுவை.