எங்க ஊரு.. எங்க சமையல்.. புதிய பகுதிக்கு உங்கள் உதவி தேவை

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகை உணவு பிரபலமாக இருக்கிறது. ஒரே மாதிரியான உணவு என்றாலும் ஒரு சிலரது தயாரிப்புகள் மிகவும் ருசியாக இருக்கிறது. இப்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஏரியாவிலும் பிரபலமான பல்வேறு உணவு வகைகளைப் பற்றி தகவல் அறிந்து, அவற்றை தயாரிக்கும் முறைகளை நேரில் சென்று படம் எடுத்து அறுசுவையில் வெளியிட இருக்கின்றோம். இந்த ஊர் பயணத்தில் சமையல் மட்டுமில்லாது அந்த ஊரில் பிரபலமான உணவு விடுதிகள், சுற்றுலா தளங்கள், இதர சிறப்புகள் இவற்றை பற்றியெல்லாம் தகவல்கள் திரட்டி "எங்க ஊரு.. எங்க சமையல்" என்ற புதிய பகுதியில் இதனை வெளியிட இருக்கின்றோம். இதற்காக அறுசுவை டீம் தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் செல்லவிருக்கிறது. டீம் என்றவுடன் கிரிக்கெட் டீம் போல் பதினோரு நபர்களை கணக்கிட்டுவிட வேண்டாம். அதிகப்பட்சம் இரண்டு பேர் அல்லது தனி ஒரு நபர்தான். :-)

அறுசுவை நேயர்கள் கிட்டத்திட்ட தமிழகத்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் இருக்கின்றார்கள். உங்கள் ஊரில் உங்கள் அம்மா, பாட்டி, சகோதரிகள், அத்தை, சித்தி என்று உறவினர்கள் யாரேனும் சிறப்பாய் சமைப்பவர்களாய் இருந்தால், அவர்களை நேரில் கண்டு, அவர்கள் சமையலை படம் எடுத்து, அவர்கள் விரும்பினால் அவர்களையும் படம் எடுத்து அறுசுவையில் வெளியிட விரும்புகின்றோம். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், தமிழக எல்லைக்குள் எந்த பகுதியாக வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும் நகரங்களைவிட சிறிய நகரங்கள், கிராமங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.

உங்கள் ஊருக்கு, உங்கள் இல்லங்களுக்கு நாங்கள் வருவதை நீங்கள் விரும்பினால் எங்களுக்கு தெரிவிக்கலாம். அப்படி நாங்கள் வரும்பட்சத்தில், நீங்கள் எங்களுக்காக செய்ய வேண்டியவை..

உங்கள் ஊரில் பிரபலமான அல்லது உங்களுடைய சிறப்பு உணவு ஏதேனும் ஒன்றை தயாரித்து காட்ட வேண்டும். சாதாரண பொருட்களைக் கொண்டு செய்யும் உணவாக இருந்தால் போதுமானது. பொருட்கள் வாங்க செலவு செய்வதில் உங்களுக்கு சிரமம் இருக்கும்பட்சத்தில் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம். அந்த உணவு தயாரிப்பினை போட்டோ எடுத்து அறுசுவையில் வெளியிட எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இது தவிர உங்கள் ஊரில் உள்ள சிறப்புகள் குறித்து எங்களுக்கு தகவல்கள் தரவேண்டும். மற்றபடி எங்களுக்கு சாப்பாடு எல்லாம் தயாரிக்க வேண்டாம். நாங்கள் சாப்பிட மாட்டோம் :-)

எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றார்கள், எந்த ஊர்களில் இருந்து, எந்த மாவட்டத்தில் இருந்து அதிக அழைப்பு வந்துள்ளது என்பதைப் பொறுத்து எங்களது பயண திட்டத்தை வகுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டம் செல்லலாம் என்பது எங்களது திட்டம். எப்படி வரவேற்பு உள்ளது என்பதைப் பொறுத்து மற்ற முடிவுகள் எடுக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

(பக்கத்து) ஊர்காரனுக்கே அல்வாவா.. :-) எங்க ஊரு ஜெ.மு சாமி அல்வா திருநெல்வேலி அல்வாவை விட சூப்பரா இருக்கும். காரைக்கால் அல்வா, நாகூர் அல்வா எல்லாம் அதுக்கு அப்புறம்தான். :-)

தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட் ஸ்டால் அசோகா அவ்வளவு பிரபலமான்னு தெரியலை. ஆனால், பெங்கால் ஸ்வீட்ஸ், சில புதுவகையான நார்த் இந்தியன் ஐட்டம்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். பாம்பே ஸ்வீட்ஸ் ஓனர் வீட்டுல ஒருநாள் சாப்பிட்டு இருக்கேன். அவங்க வட இந்திய முறையில செஞ்சிருந்த கீரைக்கூட்டு ஒண்ணு வித்தியாசமா, ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சு. ரயில்வே ஸ்டேசன் பக்கத்துல இருக்கிற கடையைவிட, பழைய பஸ்ஸ்டாண்டு பின்புறம் இருக்கிற கடை ரொம்ப பெரிசா இருக்கும். நான் கடைசியா போனப்ப எக்ஸ்டென்சன் வேலைகள் நடந்துகிட்டு இருந்துச்சு.

பழைய பஸ்ஸ்டாண்டு பக்கம் இருக்கிற திருவையாறு ஸ்வீட் ஸ்டால் பத்தியும் தெரியலை. ஆனா, திருவையாறுல இருக்கிற அசோகா ஸ்டால் அசோகாத்தான் ரொம்ப ரொம்ப பிரபல்யம். அந்தப் பக்கம் க்ராஸ் பண்ணினா, அசோகாவை மூட்டைக் கட்டாம வர்றது இல்லை. :-)

வணக்கங்கண்ணா எங்க ஊரு கோயபுத்தூருக்கு வந்தீங்கன்னா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு ரகசியத்தை வெளியே கொண்டுவாங்கண்ணா!

Don't Worry Be Happy.

இன்றைக்கு அது ஒண்ணும் பெரிய ரகசியம் இல்லையே.. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா மாதிரி இன்னைக்கு எல்லா கடையிலயும் மைசூர்பாக் போட ஆரம்பிச்சிட்டாங்க. அறுசுவையில யாரும் சமைக்கலாம்ல கொடுத்திருக்கிற நெய் மைசூர்பா கூட கிட்டத்திட்ட அந்த வகைதான்.

http://arusuvai.com/tamil/node/2547 இந்த லிங்க்ல பாருங்க..

பொதுவாவே ஒரு கடை ஐட்டம் ரொம்ப பிரபலமாயிடுச்சுன்னா, அதைவிட நல்லா வேற எங்காவது சாப்பிட்டாலும் கூட, அது மாதிரி வராதுன்னு அங்கலாய்ச்சுக்கிறது நமக்கு வழக்கமான ஒண்ணு.. :-) இந்த மைசூர்பாக்ம் அப்படித்தான்.. அதே சுவையில, இன்னும் பெட்டராக்கூட சில கடைகள்ல கிடைக்குது.

இன்னொரு பெரிய ஸ்வீட் ஸ்டால்ல முந்திரி மைசூர்பா, பாதாம் மைசூர்பா ன்னு என்னென்னவோ வெரைட்டீஸ் எல்லாம் போடுறாங்க.. எல்லாமே சூப்பராத்தான் இருக்கு.. :-)

அண்ணா நீங்க சொல்றது சரிதான். ஆனா நீஜமாவே ஒரு ரகசியம் இருக்கு.நீங்க கண்டுபிடிப்பீங்கன்னு நினைக்கிறேன்.

Don't Worry Be Happy.

நிஜமாவே ஒரு ரகசியம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு சொல்றீங்களா? இல்லை சந்தேகத்துல என்னை கண்டுபிடிக்க சொல்றீங்களா? :-) உங்களுக்கு தெரிஞ்சிருந்தா நீங்களே சொல்லிடுங்களேன்.

அன்பு அட்மின் ,
நாகர்கோவில் போக திட்டம் உண்டா?
நாகர்கோவில் நேந்திரங்காய் வத்தல் சாப்பிட்டிருக்கீறீர்களா???
அதிலும் வடசேரி பேருந்து நிலையம் அருகே ஒரு குட்டி கடை இருக்கிறது. அதன் பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த வத்தலுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அடிமை. நீங்கள் போவதாக இருந்தால் நான் அதன் பெயரைக் கேட்டு சொல்கிறேன். நாகர்கோவிலில் யாரைக் கேட்டாலும் வேறு ஒரு கடையின் பெயரை தான் சொல்லுவார்கள்.

Save the Energy for the future generation

திருவையாறு ஸ்வீட் ஸ்டால்தஞ்சாவூரில் இருக்கிறது சின்ன கடைதான் அதுதான் நீங்க சொல்ற திருவையாறுல இருக்கிற அசோகா ஸ்டால் உடைய கிளை.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

நாகர்கோவில் பக்கம் நிச்சயம் போவோம். ரொம்ப நாளாயிடுச்சு அந்த பக்கம் போயி. அருமனை யில என் நண்பன் வீட்டுக்குப் போயி சில நாட்கள் தங்கியிருந்தப்ப, அவங்க வீட்டுல சமைச்சுப் போட்ட ஐட்டம்ஸ் எதுவுமே அதுக்கு முன்ன நான் சாப்பிட்டது கிடையாது. எல்லாமே வித்தியாசம் வித்தியாசமா இருந்துச்சு.

அவங்க தோட்டத்துல பழுத்த செவ்வாழை, இன்னொரு வாழை, பேரு என்னவோ சொன்னாங்க, டேஸ்ட் ரொம்ப அருமையா இருந்துச்சு.. அது மட்டுமில்லாம, பலாப்பழம் மாதிரி சின்ன சைஸ்ல ஒண்ணு, ஆனா பலாப்பழம் இல்லை, சிங்கப்பூர் ட்யூரியன் மாதிரியும் இல்லாம, சின்னதா ஒரு பழம், அதோட சுளைகளை சாப்பிட கொடுத்தாங்க.. அது என்ன பேருன்னு யாராவது சொல்லுங்களேன்.. இனிப்பு புளிப்புன்னு எல்லாம் கலந்து ஒரு வித்தியாசமான டேஸ்ட்ல இருந்துச்சு.. :-)

//ஆனால் அந்த வத்தலுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அடிமை.//
போறதுக்கு பயமா இருக்கே.. நம்மையும் அடிமையாக்கி போட்டுடுச்சுன்னா? :-)

// நாகர்கோவிலில் யாரைக் கேட்டாலும் வேறு ஒரு கடையின் பெயரை தான் சொல்லுவார்கள்//

இதென்னங்க.. இப்படி சொல்றீங்க.. எல்லாரும் எந்த கடையை சொல்றாங்களோ அதுதானே ஃபேமஸ்ஸா இருக்கும்?! நீங்க சொல்ற கடைக்கு எல்லாரும் அடிமைன்னு வேற சொல்றீங்க.. :-) ஓ.. வெளியூர்காரங்க யாரும் அந்த கடைக்கு போயிடக்கூடாதுன்னு ஒருவேளை மாத்தி கை காமிச்சு விட்டுடுவாங்களோ.. ;-)

//அதுதான் நீங்க சொல்ற திருவையாறுல இருக்கிற அசோகா ஸ்டால் உடைய கிளை.//

ஓ.. அப்படியா.. அடுத்த டைம் அங்கேயே வாங்கிடுறேன்.

பழைய பஸ்ஸ்டாண்டு பக்கம் சாந்தி பரோட்டா கடையில, டால்டா பரோட்டா ஒரு காலத்துல சக்கை போடு போட்டுச்சு. பரோட்டாவைவிட அதுக்கு கொடுக்கிற வெள்ளை கலர் குருமா தான் டாப் க்ளாஸ். தேங்காய் பால்ல ஆப்பத்தை ஊற வச்சு சாப்பிடுற மாதிரி, பரோட்டாவை அதில ஊற வச்சு சாப்பிடணும். சமீபத்துலகூட அந்த கடையோட போர்டு பார்த்தேன். ஆனா கடையில கூட்டம் இருந்த மாதிரி தெரியலை. ஒரு காலத்துல இடம் பிடிக்க கஷ்டப்படணும். கடையில ஒரு சைடுல கிட்டத்திட்ட ஏழு எட்டு பேர் வரிசையா நின்னு, பரோட்டாவுக்கு மாவு பிசைஞ்சுக்கிட்டு இருப்பாங்க.

நீங்க ஞபகபடுத்தி பாருங்க -சின்னதாக பலாபழம் மாதிரி இருப்பது - "அயினி சக்கை" , பூவம் பழம் மாதிரி - மட்டி பழம். அதுவா?

Save the Energy for the future generation

மேலும் சில பதிவுகள்