பேக்டு முழு மீன் கிரில்(இந்திய‌ன் டைப்)

தேதி: May 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

மீடியமான முழு மீன் - இரண்டு
பூண்டு பொடி - ஒரு தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேகக்ரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தூள் - ஒன்றரை தேக்கரண்டி(தேவைக்கு)
எலுமிச்சைச்சாறு - மூன்று மேசைக்க‌ர‌ண்டி
ப‌ப்ப‌ரிக்கா ப‌வுட‌ர் - அரை தேக்க‌ர‌ண்டி
வினிக‌ர் - ஒரு தேக்க‌ர‌ண்டி
உருளைக்கிழ‌ங்கு - இர‌ண்டு
வெங்காய‌ம் - ஒன்று


 

மீனை சுத்த‌ம் செய்து இடையிடையே ந‌ன்கு ஆழ‌மாக‌ கீறி விட‌வும்.
மேலே குறிப்பிட்ட‌ அனைத்து ம‌சாலாக்க‌ளையும் மீனில் ந‌ன்கு பிர‌ட்டி மூன்று ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.
200 டிகிரியில் முற்சூடு செய்ய‌ப்ப‌ட்ட‌ அவ‌னில் 35 நிமிட‌ம் பேக் செய்ய‌வும்.
முத‌லில் உருளைக்கிழ‌ங்கை வ‌ட்ட‌ வ‌டிவ‌மாக‌ க‌ட்செய்து ட்ரேயின் அடியில் வைத்து அத‌ன் மேல் மீனை வைத்து மேலே வெங்காய‌த்தை வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ க‌ட் செய்து வைக்க‌வும்.
இது பேக் செய்யும் போது த‌ண்ணீர் கீழே நிற்கும். அத‌ற்கு முத‌லில் மேல் தீயில் 15 நிமிட‌ம் வைக்க‌வும்.
அடுத்து மேலும் கீழும் உள்ள‌ தீயை செல‌க்ட் செய்து 10 நிமிட‌ம் வைக்க‌வும்.
க‌டைசியாக‌ அடியில் ட்ரேயில் வைத்து ப‌த்து நிமிட‌ம் வைக்க‌வும்.
சுவையான‌ பேக்டு முழு மீன் கிரில் ரெடி.


இது ட‌ய‌ட் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ஏற்ற‌ டிஷ்.
இத‌னை குபூஸ், ச‌ப்பாத்தியுட‌ன் ப்ளையின் சாத‌த்துட‌ன் சாப்பிட‌வும். இது அரேபிய‌ர்க‌ளின் உண‌வாகும் அடிக்க‌டி தின‌ப்ப‌டி உணவே இது தான் இது போல் ம‌ட்ட‌ன், சிக்க‌ன் எல்லாம் பேக்செய்து குபூஸ்ஸுட‌ன் சாப்பிடுவார்க‌ள். அவ‌ர்க‌ள் ம‌சாலாக்க‌ள் அதிக‌ம் சேர்க்காம‌ல், இது சீஸ் சேர்த்து செய்வார்க‌ள். மூன்றாவது முறை பேக் செய்யும் போதும் த‌ண்ணீர் அதிக‌மாக‌ இருந்தால் சிறிது வ‌டித்து விட்டும் வைக்க‌லாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்க குறிப்பு சூப்பர்...

முத‌லில் மேல் தீயில் 15 நிமிட‌ம் வைக்க‌வும்...

மேல் தீ, கீழ் தீ என்றால் என்ன (High mode, low mode)?
தயவு செய்து பதில் சொல்லுங்க...

நன்றி,
Dhivya

Be happy, make others happy

Dear Jaleela Madam,
நான் உங்க பெரிய fan, உஙக குறிப்பு எல்லாம் Superb...

Please help, நான் அருசுவைகு புதுசு...
குபுஷ் மாவு ready பண்ணும் போது...சப்பாதிக்கு மாவு பிசையரமாதிரியா or நிறைய water ஊற்றி just குலைக்கனுமா...

Apart,i have grill microwave oven at my home...Can i make cakes or cookies with that or convection mode is must???
kindly help and advice...

மிக்க நன்றி- Dhivya Rajesh

This is what i sent and i await reply from you...

But still,
நான் நேத்து குபுஷ் செய்தேன், super...
ஆனா மாவு உப்பல...
next time, yeast அதிகமா சேக்கறேன்...

when i read all communication you encourage new comers and you are really so sweet...

அன்புடன்,
Dhivya

Be happy, make others happy

ப‌ப்ப‌ரிக்கா ப‌வுட‌ர்னா என்னங்க மேடம்?

Thanks- Dhivya

Be happy, make others happy

திவ்யா, அந்த கிரில் ஓவனிலேயே மோட் ( top, bottom, top & bottom) என்று இருக்கும்.

பிரீ ஹீட் செய்ததும் டாப் மேடில், அடுத்து பாட்டம் மோடிலும் வைக்கனும்.

ஜலீலா

Jaleelakamal

Im so happy to receive reply from you...

Im your great fan...
நான் ஏற்கனவே குபுஷ் பத்தி doubt கேட்டன், ஆனா உங்ககிட்ட reply வரல...so im sad...now so happy, Thanks you.

sorry, im my oven, its not mentioned as top, bottom mode...

First bake in upper tray, then bake in lower tray...am i right.
pls help...

Thanks - Dhivya

Be happy, make others happy

குபூஸ் பதிவு நானும் பார்த்தேன்.

ஆனால் இன்று பார்ப்பதற்குள் அந்த பதிவு இல்லை , முன்பு சமீபத்திய பதிவு என்று இருக்கும்.

அது எத்தனை மாதம் கழித்து வந்து பார்த்தாலும் யாரும் சந்தேகம் கேட்டு இருந்தால் அதில் இருக்கும் கிளிக் செய்து உட்னே பதில் அளிப்பேன்.

இப்ப புது தளத்தில் தேடுவது ரொம்ப சிரமம்,.

Jaleelakamal

குபூஸுக்கு தளர்வா குழைத்து கொள்ளுங்கல்
நிரைய மாவு வைத்து தடிமனாக திரட்டுங்கள்.

சப்பாத்தி மெல்லியதாக திரட்டனும்.
மைக்ரோவேவில் கேக் செய்யலாம் .

ஜலீலா

Jaleelakamal

ரொம்ப நன்றி மேடம்...

முதல் தடவை கேக் செய்யபோறேன்...ஈசியா ஒரு கேக் சொல்லுங்க மேடம்...

நட்புடன்,
திவ்யா

Be happy, make others happy

திவ்யா... ஜலீலா பார்த்தாங்களான்னு தெரியல. கண்ணில் பட்டதால் சொல்றேன் பப்ரிகா பவுடர்'னா சிகப்பு கொடைமிளகாய் தூள். கடையில் கேளுங்க தருவாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thank you vanitha :O))

அது இங்க கிடைக்குமான்னு தெரியல...முதல் தடவை அது இல்லாம செய்து பாக்கறேன்...
Tast differ ஆகாதுனு நினைக்கிறேன்...

நட்புடன்,
திவ்யா

Be happy, make others happy

டியர் அட்மின் நான் எடுத்ததை விட நீங்கள் இதை இனைத்ததை பார்க்கும் போது தான் ரொம்ப சூப்பரா இருக்கு.
என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு.

உடனே எல்லா படங்களையும் இனைத்ததற்கு மிக்க நன்றி

Jaleelakamal