இஞ்சி டீ

தேதி: May 12, 2010

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (7 votes)

 

பால் - 1/2 லிட்டர்
இஞ்சி - 2 இஞ்ச் அளவு
சீனி - தேவைக்கு
ஏலம் - 2
தேயிலை தூள் -3 தேக்கரண்டி


 

முதலில் பாலை காய்ச்சவும்.

தீயை குறைத்து வைத்து, அதில் தட்டிய இஞ்சி, ஏலம் போட்டு வேகவிடவும். 5 நிமிடம் கழித்து டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கி ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து டீயை ஊற்றி பின்பு சீனி சேர்த்து பரிமாறவும்.

சுவையான கம கமக்கும் இஞ்சி டீ தயார்.


இந்த டீ எங்கள் ஊர் ஸ்பெஷல் மிகவும் சுவையாக இருக்கும்.எங்கள் ஊரில் இஞ்சி இல்லாமல் டீ போடவே மாட்டோம். இந்த டீ குடித்து பழகிவிட்டால் மத்த எந்த டீ உடைய டேஸ்டும் முன்னுக்கு வர முடியாது ஒரு தடவை செய்தால் இனி உங்கள் வீட்டில் இந்த டீ தான் சாப்பிடுவீங்க. தலை வலி,அஜீரணம், டயர்டாக இருக்கும் சமயம் இந்த டீ குடித்தால் ரிலாக்ஸாகிடுவீங்க.

இஞ்சிக்கு பதில் சுக்கும் சேர்த்து இதே போல செய்யலாம்.இஞ்சி வேகவைத்தால் தான் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இஞ்சி டீ உடலுக்கு மிகவும் நல்லது

இதை குடித்தால் தலை வலி,வாந்தி,சோர்வு,மயக்கம்,அஜீர்ணம் எல்லாம் குணம் ஆகும் இதை எல்லாரும் ட்ரை பண்ணுங்க
கரெக்டா சொல்லிடேனா கதீஜா மேடம்?

என்றும் அன்புடன்,
கவிதா

unga ingii tea nan seydhuttu solren.