கிட்ஸ் ஹெல்தி ஸ்நாக்ஸ்

தேதி: June 14, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

சத்துமாவில் கஞ்சி வைப்பதற்கு பதில் ஒரிரு முறை இதுப்போலும் முயற்சி செய்யலாம்.

 

சத்து மாவு - ஒரு கப்
ஓட்ஸ் - கால் கப்
கார்ன் ப்ளேக்ஸ் - கால் கப்
தேங்காய் துருவல் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
எண்ணெய் - பொரிக்க


 

முதலில் தேவையானவை அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
அதைப்போலவே கார்ன் ப்ளேக்ஸையும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
பொடித்த ஓட்ஸ் மற்றும் கார்ன் ப்ளேக்ஸுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பிசைந்த மாவுகளை வடைகளாகவோ, பக்கோடாக்களாகவோ விருப்பமான வடிவில் போட்டு பொரித்தெடுக்கலாம்.
விரும்பினால் அடைகளாக சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கலாம்.
சுவையான ஆரோக்கியமான ஸ்நாக் ரெடி.

மாற்று முறை:
இந்த குறிப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம். உங்கள் குழந்தை காரம் விரும்பி சாப்பிடுமென்றால் இனிப்பை தவிர்த்து இதே முறையில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து இதே போல் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எப்படி இருக்கீங்க.நல்ல ரெசிபி குழந்தைகளுக்கு நல்ல சத்தான ரெசிபி கொடுத்து இருக்கீங்க குறிப்புக்கு நன்றி.

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு நன்றி..:-

கதீஜா..தங்கள் அன்பான பாராட்டுக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றிங்க

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இதை எண்ணைய் இல்லாமல் செய்யமுடியுமா?ஏனென்றால் என் பிள்ளைகளுக்கு எப்போதுமே இருமலாகவே உள்ளது.

நான்ஸ்டிக் தவா என்றால் எண்ணை தேவைப்படாது...எண்ணையில்லாமலே மிதமான தீயில் நான்ஸ்டிக் தோசைக்கல்லில் சுட்டு கொடுங்கள்.
தினமும் கொதிக்கும் நீரில் வெங்காயம் சேர்த்து கொதிக்கவிட்டு, பிறகு அந்த சூப்பில் தேன் கலந்து மூன்று வேளை கொடுங்கள் ...பிள்ளைகளுக்கு...
கேப்சிகம் அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ரொம்ப நன்றி இளவரசி.என் பையன் கேப்சிகம் என்றாலே சாப்பிடமாட்டான்பா.நல்லது எல்லாம் அவனுக்கு அலர்ஜி.உங்களுடைய கீழ்கண்ட வாசகம் அருமை.

These tips are nice and also this receipies are super. You visit this site and get more opportnities,

Devikha ,thanks for ur comments and feedback

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.