ரெட் கேப்சிகம் சட்னி

தேதி: June 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (11 votes)

 

ரெட் காப்சிகம் - 1
வேர்கடலை - ஒரு கைப்பிடி
வர மிளகாய் - 2
புளி - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை


 

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ரெட் கேப்சிகமை சிறு சிறுத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையை ஆற வைத்து பின்னர் தோல் எடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கேப்சிகமை இரண்டு நிமிடம் வறுத்து இறக்கும் முன் புளி மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.
ஆற வைத்த கலவையுடன் வேர்க்கடலை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.( தண்ணீர் விடாமல்)
பின்பு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த கலவையில் கொட்டவும்.
சுவையான ரெட் கேப்சிகம் சட்னி தயார். இதை இட்லி, தோசையுடன் சாப்பிடலாம். ப்ரெட்டில் தடவியும் சாப்பிடலாம். இந்த குறிப்பினை அறுசுவை உறுப்பினரான திருமதி. லாவண்யாசத்யா அவர்கள் வழங்கியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அறுசுவையில் இது என்னுடைய முதல் குறிப்பு.
இதை விரைவில் வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு எனது நன்றி.

hai, hw r u, your disch is very nice to see, i am feeling to eat now, today or tomorrow, i will make it, & i will give my comments pa.

am fine. how abt u?
this is my first recipe... and am excited to see this in arusuvai and ur comments make me feel happy.
do surely try and tell me..
thnx

இட்லி யுடன் இருந்த முகப்பு போட்டோ பார்த்த போது, சே... சட்னி போட்டோ மட்டும் முகப்பில் போட்டு இருக்கலாமே என்று நினைத்தேன்....
அடுத்த நொடி மாறி விட்டது....மிக்க நன்றி.
இந்த குறிப்புக்காக 3 நாட்களாக அறுசுவை பக்கத்தை refresh செய்து செய்து பார்த்துக் கொண்டே இருந்தேன்...
மிக்க நன்றி

ஹாய் லாவண்யா எப்படி இருக்கீங்க. இந்த குறிப்பு டிப்ரெண்டா இருக்கு. பார்த்த உடனே செய்து சாப்பிட சொல்லுது. கண்டிப்பா இந்த சட்னி சுவையாக இருக்கும்னு பார்த்தாலே தெரியுது ஆனால் கேப்சிகம் வீட்டில் இல்லை வாங்கி செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.

நான் நன்றாக உள்ளேன். நீங்கள் எப்படி உள்ளீர்கள்.
குறிப்பு பார்த்து எழுதியதர்க்கு நன்றி.
காப்சிகம் வாங்கி செய்ததும் எனக்கு பின்னோட்டம் கொடுங்கள்.
ரெட் காப்சிகமில் செய்தால்தான் சுவை அதிகம்.

red capsicum chutney-an entirely different receipe from what we prepare.
let me try &give u the feedback soon.

thnx for ur comment..
do comment after u have tried
thnx

Like it

அருமையாக அசத்தலாக இருக்கு,புதுசும் கூட.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இது உங்க முதல் குறிப்பா? முதல் குறிப்பே அசத்துறீங்க. பார்க்கவே சாப்பிட தூண்டுது அதுவும் இட்லியோட சட்னிவச்சு இருக்குற படத்த பார்த்த பசி எடுக்குது போங்க. கேப்சிகம் இல்லங்க வாங்கினது இதுதான் முதல்ல செய்யனும். ரெட் கேப்ஸிகம் தான் பெஸ்டா லாவண்யா.

பின்னோட்டம் தந்தமைக்கு நன்றி- sathya, asiya and gowri

கெளரி , இந்த சட்னி ரெட் காப்சிகமில் மிக சுவையாய் இருக்கும். பச்சை காப்சிகமில் இதை செய்ய வேண்டும் என்றால் வரமிளகாய் கு பதிலாக பச்சை மிளகாய் மற்றும் பூண்டும் சேர்த்து செய்யலாம். ஆனால், ரெட் செய்து விட்டு பச்சையில் செய்தால் பிடிக்கவில்லை.
டயட் யில் இருந்தால் வேர்க்கடலைக்கு பதில் பொட்டுக்கடலை சேர்க்கலாம். சுவை வேறுப்படும். வேர்க்கடலை சுவை சேர்க்கும்.

Hi
I tried ur recipe yesterday it really very very tasty thanking you

லாவண்யா மேடம்
சட்னி அருமையாக இருந்தது
நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

nice to hear that u tried my recipe and thnx for ur comment.

எப்படி உள்ளீர்கள்?
குறிப்பை பார்த்து செய்து பின்னோட்டம் தந்தமைக்கு நன்றி.
All of ur comments are very encouraging.
thnx to everyone.

ஹாய் லாவன்யா,நலமா?
மிகவும் அருமையான குறிப்பு கொடுத்து இருக்கீங்க.பார்க்கவே அசத்தலா இருக்கு.
நிச்சயம் விரைவில் செய்து பார்க்கிறேன்.
உங்களுக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நேற்று உங்கள் receipe செய்தேன் superb ரொம்ப நல்ல இருந்துச்சு சிம்பிள் லா, சூப்பர் ஆ, ஒரு receipe குடுத்ததுக்கு ரொம்ப நன்றி

எப்படி இருக்கிங்க? குறிப்பை செய்து பார்த்து, பின்னோட்டம் தந்தது மிக்க மகிழ்ச்சி.

ஹாய் அப்சரா

நலம். நீங்கள் எப்படி உள்ளீர்கள்?
குறிப்பை பார்த்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.
கண்டிப்பாக செய்து பார்த்து சொல்லவும்.
உங்களது 'கீழ் வாக்கியம்' மிகவும் நன்றாக உள்ளது.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை

ஹாய் லாவண்யா உங்களோட ரெட் கேப்சிகம் சட்னி இன்று தான் செய்து பார்த்தேன்.சுவை அருமையாக இருந்தது

குறிப்பை செய்து பார்த்து, பின்னோட்டம் தந்தமைக்கு நன்றி.

ஹாய் லாவண்யா நல்லா இருக்கீங்களா உங்க ரெட் கேப்சிகம் சட்னி செய்தேன் நன்றாக இருந்தது செய்வதற்கும் சுலபமாக இருந்தது நன்றி

lavanya ur chutney was too gud

ஹாய் லாவன்யா எப்படி இருக்கீங்க?
உங்களுடைய ரெட் கேப்சிகம் சட்னி போன மாதமே செய்து ருசித்து சாப்பிட்டு விட்டேன்.ஆனால் பின்னூட்டம் தான் லேட்டாக கொடுக்கும்படி ஆகி விட்டது.மன்னிக்கவும்.
மிகவும் சுவையாகவும்,வித்தியாசமாகவும் இருந்தது.தோசைக்கு நன்றாக இருந்தது.
உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.