
நாகரிக வளர்ச்சியில் நாம் மறந்து போன விசயங்களில் இந்த கூட்டாஞ்சோறும் ஒன்று. அனைவரின் பங்களிப்பில் சுவையான உணவு தயாரிக்கும் இந்த நிகழ்ச்சி, ஒரு காலத்தில் பெரிய விழாவாக நடைபெற்றது. சித்திரை மாத பௌர்ணமி நாளில், வறண்ட காவிரி ஆற்றில், கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கூடிச் சமைத்து இன்புற்றது எல்லாம் ஒரு காலம். இன்று ஒரு சில கிராமங்கள் மட்டுமே இதனை நினைவு கொண்டுள்ளன என்பது வருத்தமான விசயம்.
அறுசுவை இணையத்தளமும் கூட்டாஞ்சோறு போல், பலர் பங்களிப்பில் உருவானதுதான். அப்படிப் பங்களிப்பவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதுதான் இந்தப் பக்கத்தின் நோக்கம். இங்கே தொடர்ச்சியாக அறுசுவைக்கு குறிப்புகள் கொடுப்பவர்களின் பெயர்களும், அவர்கள் கொடுத்துள்ள குறிப்புகளின் விபரமும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இதன்மூலம் அவர்களின் பக்கங்களுக்கு மிக எளிதில் சென்று குறிப்புகளை பார்வையிட முடியும்.
கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் வழங்கியுள்ள குறிப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில்,அவ்ர்களுக்கு நட்சத்திர பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 25 குறிப்புகளாவது கொடுத்தால்தான் இந்த பட்டியலில் இடம்பெற இயலும்.
25 ல் இருந்து 49 வரை குறிப்புகள் கொடுத்தவர்களுக்கு ஒரு சில்வர் ஸ்டார் பதக்கம் வழங்கப்படுகின்றது. 50ல் இருந்து 99 குறிப்புகள் கொடுத்தவர்க்கு இரண்டு சில்வர் ஸ்டார் பதக்கங்கள் வழங்கப்படும்.
100 குறிப்புகளை கடந்தவர்களுக்கு தங்க நட்சத்திர விருது கொடுக்கப்படுகின்றது. 100 - 199 ஒரு நட்சத்திரம், 200- 299 இரண்டு நட்சத்திரங்கள், இப்படியே ஒவ்வொரு நூறு குறிப்புகளுக்கும் ஒரு தங்க நட்சத்திர பதக்கம் சேர்க்கப்படும்.
2 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 26 sec முன்பு
3 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு
7 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு
8 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு
8 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு