![]() தோழிகள் அனைவரும் சொன்னது போல் புதிய தலைப்போடு மீண்டும் நம்முடைய வழக்கமான பட்டிமன்றம் துவங்குகிறது. அண்ணா சொன்னது போல் மற்றவர் தந்த தலைப்பே தேர்வு செய்யப்படுகிறது. தலைப்பு - "வாழ்க்கையில் எது முக்கியம்? நிம்மதியா? நிதியா?" நமது தோழி "ஆயிஸ்ரீ" அவர்கள் தந்து பலரது பாராட்டை பெற்ற தலைப்புகளில் ஒன்று. இன்று வாழ்வில் மனிதன் பலவற்றை தேடி அலைகிறான். அதில் முக்கியமாக நாம் தேடுவது பணமும், நிம்மதியும் தான். இதில் எது "மிக" முக்கியம்? பணமா அல்லது நிம்மதியா? உங்கள் கருத்துகளோடு வாதாட அழைக்கிறேன். வரும் திங்கள் (நாளை) முதல் துவங்கி அடுத்த திங்கள் வரை வாதாடலாம். ஜூன் 28, 2009 - 9:59am - வழங்கியவர் Vanitha Vilvaar...
|

