ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
கடைய்களில் ஹலால் ஜெலடின் என்று எதும் விற்க்கிறதா.? அப்படி என்றால் சொல்லுங்களேன்.
ஜெலட்டின் இஸ்லாமியர்கள் உபயோகிக்கலாம் ஆனால் அதில் ஹலால் ஆனது இருக்கா என்று பார்த்து வாங்கவேண்டும். நான் இந்தியாவில் இருந்து தான் வாங்கி வருவேன்.
சகோதரி செய்யது கதீஜா சொன்னதுபோல் இஸ்லாமியர்கள் ஜெலட்டின் பயன்படுத்தலாம். ஆனால் இதில் ரொம்ப ஜாக்கிரதையாக கவனிக்கவேண்டியதுள்ளது. இது விஷயமாக நான் அறிந்தவற்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
வெஜிடபிள் ஜெலட்டினாக இருந்தால் பெரும்பாலும் Ingredients - ல் அது குறிப்பிடப்பட்டுவிடுகிறது. பன்றி மற்றும் முறையாக அறுக்கப்படாத விலங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டினை சிற்சில நிறுவனங்கள் மட்டுமே அதை குறிப்பிடுகின்றன. 'Animal Gelatin' அல்லது 'Pork Gelatin' என்று குறிப்பிடாமல் பொதுவாக 'ஜெலட்டின்' என்று மட்டும் குறிப்பிடப்படும் ஜெலட்டின்களும் இந்த Animal Gelatin வகையைதான் சேரும். சில சமயங்களில் பொருட்களின் பெயரையே குறிப்பிடாமல் 'E - numbers' என்று சொல்லப்படும் குறியீடுகளால் குறிப்பிடுகிறார்கள்.அப்போது அவை எந்த பொருளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்பதை பார்த்தவுடனேயே நம்மால் புரிந்துக்கொள்ள இயலாது. அதனால் முடிந்தவரை அந்த E - numbers - களை தெரிந்துக்கொள்வது அவசியமாகிறது. முடியாத பட்சத்தில் அப்படிப்பட்ட சந்தேகமானவற்றை வாங்காமல் தவிர்த்துக்கொள்வது நல்லது. சந்தேகத்திற்கிடமானவற்றை விட்டுவிடும்படிதான் இஸ்லாம் நமக்கு கூறுகிறது. அதனால் வெஜிடபிள் ஜெலட்டின் என்று குறிப்பிட்டுள்ள ஜெலட்டினாக இருந்தால் வாங்குங்கள். இல்லாவிட்டால், மலேஷியா, சிங்கப்பூர் தயாரிப்புகளில் ஹலால் முத்திரை இடப்பட்டவை மற்றும் அதுபோன்ற ஹலாலாக தயாரிக்கக்கூடிய மற்ற நிறுவனங்களின் ஜெலட்டின், விலங்கிலிருந்து தயாரிக்கப்பட்டவையாக இருந்தாலும் வாங்கி பயன்படுத்தலாம். இத்துடன் உங்களுக்கு E - numbers மற்றும் பன்றி கொழுப்பு பற்றிய சில நெட் பக்கங்களை இங்கு தருகிறேன். பார்வையிடுங்கள்! கருத்து சொல்லுங்கள்! நன்றி!
http://islamkalvi.com/general/pig_fat.htm http://special.worldofislam.info/Food/list.html http://special.worldofislam.info/Food/numbers.html http://www.muslimconsumergroup.com/Enumbers.do?menu=Enumbers&eventAction=enumberslist
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.இஸ்லாம் கல்வியில் பார்வையிட்டேன்.சில விசயங்கலை தெரிந்து கொன்டேன்.நீங்கள் சொன்னது போல மிகவும் உஷ்ராகயிருக்கனும்.இன்னும் நேரம் கிடைக்கும் போது நீங்கள் தெரிவித்த நெட் பக்கங்களை பார்வையிடுகிறேன்.நன்றி
many thanks for the reply.
Many Many Thanks For You
டியர் ஜாஸ்மின்! நலமா? மேலே சொன்ன சில குறிப்புகள் உங்களுக்கு உபயோகமாக இருந்ததா? உங்கள் பெயரைக் கேட்டவுடன், என் மாமி மகள் ஞாபகம் வருகிறது. அவள் பெயர் ஜாஸ்மின் & அவளுடைய கணவர் பெயர் ஹாஜா :) இந்தியாவில் உங்களுக்கு எந்த ஊர்? விருப்பமிருந்தால் சொல்லலாம்....