![]() கூட்டாஞ்சோறு பகுதியில் இணைவது எப்படி? அறுசுவை நேயர்கள் பலரும் மின்னஞ்சல் மூலமாக கேட்கும் கேள்வி இது. எப்படி என்பதை மற்றொரு பக்கத்தில் விளக்கி, அதற்கான இணைப்பினை நீங்களும் பிரபலம் அடைய வேண்டுமா என்றத் தலைப்பில் அறுசுவையின் முதல் பக்கத்திலேயே கொடுத்துள்ளோம் ( எப்படி இணைவது ). இருப்பினும் இந்த கேள்வி மீண்டும் மீண்டும் வருவதால், இங்கே விளக்கமான பதிலை கேள்வி-பதில் பாணியில் கொடுக்க விரும்புகின்றேன். 1. கூட்டாஞ்சோறு பகுதியில் யார் இணையலாம்? அறுசுவையில் பெயர்ப்பதிவு செய்துள்ள ஆண், பெண் யார் வேண்டுமானாலும் கூட்டாஞ்சோறு பகுதியில் இணையலாம். பெயர்ப்பதிவு அவசியம். ---------------------------------------- 2. என்ன தகுதிகள் இருக்கவேண்டும்? உங்களுக்கு சமையலில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும். குறிப்புகளை சொந்தமாக கொடுக்கும் திறன் இருக்கவேண்டும். முக்கியமாக, தமிழில் குறிப்புகள் கொடுக்கத் தெரிந்திருக்கவேண்டும். இங்கே தமிழில் என்பதை கொஞ்சம் அழுத்தி சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த தளம் முழுமையும் தமிழில் இருப்பதால், தமிழில் மட்டுமே குறிப்புகளை வெளியிட அனுமதி. குறிப்புகளை எழுத்துப் பிழை இல்லாமல், சற்று விளக்கமாக கொடுக்கவேண்டும். ---------------------------------------- 3. எனக்கு தமிழில் டைப் செய்ய தெரியவில்லை. ஆங்கிலத்தில் அனுப்பினால் நீங்கள் அதனை மொழிப்பெயர்த்து வெளியிடுவீர்களா? மன்னிக்கவும். தற்போதைய சூழலில் அது இயலாத காரியம். அறுசுவை ஆரம்ப காலத்தில் இதனை நாங்கள் செய்தாலும், வேலைப்பளு அதிகமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் மொழிப்பெயர்ப்பு செய்தல் இயலாத காரியம் ஆகிவிட்டது. பொருளாதார ரீதியில் அறுசுவை வெற்றி பெறும்போது மொழிப்பெயர்க்க தனி ஆட்களை நியமிக்கவியலும். தற்போது மிகவும் கடினம். அப்படி தமிழில் டைப் செய்ய இயலாதவர்கள் சிறிது காலம் பொறுத்திருங்கள். விரைவில் (எத்தனை விரைவில் என்று கேட்காதீர்கள்:-)) அறுசுவை ஆங்கிலப் பதிப்பு வெளிவர உள்ளது. நீங்கள் அதில் நிச்சயம் பங்கேற்கலாம். ---------------------------------------- 4. தமிழில் டைப் செய்வது எப்படி? எனக்கு தமிழ் டைப்பிங் தெரியாதே? கவலை வேண்டாம். அது மிகவும் எளிதானது. இந்த அறுசுவை தளத்திற்காக ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் டைப் செய்துள்ள எனக்கும் தமிழ் டைப்பிங் தெரியாது. தற்போது கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் பலருக்கும் தமிழ் டைப்பிங் தெரியாது. ஆனால், phonetic method typing ஐ பழக்கத்தில் மிக எளிதாக கற்றுக் கொள்ளலாம். அதற்கென ஒரு உதவிப் பக்கம் ஏற்கனவே அறுசுவையில் உள்ளது. எழுத்துதவி . அந்தப் பக்கத்திற்கு சென்று மிக எளிதாக டைப் செய்யக் கற்றுக்கொள்ளலாம். ஆரம்பத்தில் சற்று பொறுமையாக இரண்டு மூன்று பக்கங்களை டைப் செய்து பழகிக் கொண்டால் எழுத்துக்கள் பரிச்சயம் ஆகிவிடும். பிறகு விரைவாக டைப் செய்யலாம். அதன்பின்னர் எகலப்பை போன்ற மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் நீங்கள் நேரிடையாகவே இணையப்பக்கங்களில் டைப் செய்யலாம். எகலப்பை நிறுவுவது குறித்த உதவியை இங்கே பெறலாம். ( விக்கிபீடியா தமிழ் எழுத்துதவி ) ---------------------------------------- 5. சரி. குறிப்புகளை தமிழில் அனுப்ப என்னால் இயலும். இப்போது என்ன செய்வது? ஒரு மாதிரி குறிப்பு ஒன்றை எங்களுக்கு feedback @ arusuvai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அல்லது கீழே தொடர்புக்கு என்று உள்ள லிங்கை கிளிக் செய்து, அந்த பக்கத்திற்கு சென்று அதன் மூலம் அனுப்புங்கள். உங்கள் குறிப்புகள் பிழையின்றி இருக்கின்றன, விளக்கமாக இருக்கின்றன என்பதை உறுதி செய்தவுடன் உங்கள் பெயரை கூட்டாஞ்சோறு பகுதியில் நாங்கள் இணைத்துவிடுவோம். ---------------------------------------- 6. கூட்டாஞ்சோறு பகுதியில் பெயர் இணைக்கப்பட்டதை அறிவது எப்படி? அதன்பிறகு எப்படி குறிப்புகள் கொடுப்பது? உங்கள் பெயரை கூட்டாஞ்சோறு பகுதியில் இணைத்தவுடன் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்துவிடுவோம். கூட்டாஞ்சோறு பகுதியில் உங்கள் பெயர் இணைக்கப்பட்டவுடன், உங்களின் உறுப்பினர் பெட்டியில் (அதாவது நீங்கள் login செய்தவுடன் உங்கள் பெயரில் வரும் இடப்பக்க முதல் பெட்டி) "குறிப்பு சேர்க்க" என்ற ஒரு link கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்து, அதற்கான பக்கத்திற்குச் சென்று குறிப்புகள் கொடுக்கலாம். ---------------------------------------- 7. அப்படி கொடுக்கும் குறிப்புகள் எப்போது அறுசுவையில் வெளியாகும்? அடுத்த நொடியே வெளியாகும். நீங்கள் கொடுக்கும் குறிப்புகள் அனைத்தும் எந்தவித சோதனைக்கும் ஆட்படுத்தப்படாமல் நேரடியாக அறுசுவையில் வெளியாகும். முதல் குறிப்பு கொடுத்தவுடன் உங்களுக்கென ஒரு பக்கம் கூட்டாஞ்சோறுப் பகுதியில் உருவாகிவிடும். அதன்பிறகு நீங்கள் சேர்க்கும் குறிப்புகள் அனைத்தின் பெயர்களும் அந்தப் பக்கத்தில் பட்டியலிடப்படும். ---------------------------------------- 8. எனது குறிப்பில் பிழைகள் இருந்தால் என்ன செய்வது? நீங்கள் பிழைத்திருத்தம் செய்து பிறகு குறிப்பினை வெளியிடலாமே? நான் முன்பே குறிப்பிட்டதுப்போல் ஆட்கள் பற்றாக்குறை, நேரமின்மை காரணமாக குறிப்புகளை பிழை சரிபார்த்து மாற்றியமைத்தல் எங்களுக்கு இயலாத காரியமாக இருக்கின்றது. எனவேதான், உங்கள் குறிப்பு கொடுக்கும் திறனை நாங்கள் மாதிரிக் குறிப்பின் மூலம் பரிசோதிக்கின்றோம். உங்களால் தமிழில் பிழை இன்றி டைப் செய்ய இயலும் என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே உங்கள் பெயரை கூட்டாஞ்சோறு பகுதியில் இணைக்கின்றோம். சமையல் குறிப்பில் பிழை இருந்தால் நேயர்கள் கேள்விக் கணைகள் எழுப்பி உங்களைத் தொலைத்துவிடுவார்கள். எனவே குறிப்புகளை பிழையின்றிக் கொடுப்பதிலும் நீங்கள்தான் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் வெளியிடும் குறிப்பினை எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கும் வசதி உங்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, தவறுகளை நீங்கள் எளிதில் திருத்திக் கொள்ளலாம். இருப்பினும் குறிப்புகள் உடனே வெளியாகிவிடுவதால், நீங்கள் பிழைத்திருத்தம் செய்யும் நேரத்திற்குள் அது ஆயிரக்கணக்கானவர்களை சென்றடைந்து இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே குறிப்பு சேர்ப்பதற்கு முன்பே நன்கு பரிசீலித்துவிட்டு பின்னர் சேர்க்கவும். ---------------------------------------- 9. எத்தனைக் குறிப்புகள் நான் கொடுக்கவேண்டும்? இத்தனைக் குறிப்புகள் கொடுக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது. ஆனால், ஒன்று இரண்டு குறிப்புகள் மட்டும் கொடுத்துவிட்டு நிறுத்திவிடக்கூடாது. தொடர்ச்சியாக உங்கள் பங்களிப்பு இருக்கவேண்டும். அப்போதுதான் உங்களுக்கென ஒரு தனிப்பக்கம் கொடுக்கப்பட்டதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். உங்கள் பக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு குறிப்புகள் மட்டுமே இருந்தால் அது நன்றாக இருக்காது. அப்படி உள்ளவர்கள் பெயர்கள் சில கால காத்திருப்பிற்கு பின்பு நீக்கப்பட்டுவிடும். உங்கள் பங்களிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கென ஒரு நேயர் வட்டம் உருவாகிவிடும். ---------------------------------------- 10. என்னால் தொடர்ச்சியாக குறிப்புகள் கொடுக்க இயலாது. ஆனால், ஒன்று இரண்டு முக்கியமான அதற்கு கூட்டாஞ்சோறு பகுதியில் இணையவேண்டியதில்லை. ஒன்றிரண்டு குறிப்புகள் மட்டும் கொடுக்க விரும்புவோர் அவற்றை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். அதே feedback முகவரிக்கு அனுப்பவும். கீழே உள்ள தொடர்பு பக்கத்தையும் பயன்படுத்தி குறிப்புகள் அனுப்பலாம். அப்படி நீங்கள் அனுப்பும் குறிப்புகளை உங்கள் பெயரிட்டு வெளியிடுகின்றோம். ஆனால், அவை கூட்டாஞ்சோறு பகுதியில் இடம்பெறாது. ---------------------------------------- 11. ஏற்கனவே அறுசுவையில் வெளியாகி உள்ள குறிப்புகளை கொடுக்கலாமா? ஏற்கனவே உள்ள குறிப்பினை மீண்டும் கொடுப்பதினால் என்ன பயன்? ஏற்கனவே உள்ள குறிப்பிற்கும் உங்கள் குறிப்பிற்கு ஏதேனும் வித்தியாசம் இருக்கும்பட்சத்தில் கொடுக்கலாம். இரண்டும் ஒன்றேதான் என்றால் கொடுக்காமல் இருத்தல் நலம். அப்படி குறிப்புகள் மீண்டும் மீண்டும் வெளியானால், பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். உங்களையும் குறைத்து மதிப்பிட்டுவிடுவார்கள். ---------------------------------------- 12. நான் கொடுக்கவிருக்கும் குறிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி? கொஞ்சம் கடினமான வேலைதான். நீங்கள் கொடுக்க விரும்பும் குறிப்பின் பெயரை மேலே தேடுக என்று உள்ளப் பெட்டியில் டைப் செய்து, தேடிப்பாருங்கள். அந்தப் பெயரில் ஏதேனும் குறிப்புகள் இருந்தால் அவை காண்பிக்கப்படும். அவைகளைப் பார்வையிட்டு, உங்கள் குறிப்பு அதில் இருந்து ---------------------------------------- 13. கூட்டாஞ்சோறு பகுதியில் இணைவதால் எனக்கு என்ன லாபம்? ஏதேனும் சன்மானம் கிட்டுமா? இல்லை. குறிப்புகள் கொடுக்கும் யாருக்கும் எந்த சன்மானமும் இதுவரை வழங்கப்படவில்லை. எங்களது நன்றியையும் அன்பையும்தான் கொடுத்து வருகின்றோம். அறுசுவை வருவாய் ஈட்டும் தளமாக இன்னமும் மாற்றப்படவில்லை. அப்படி மாறும் காலக்கட்டத்தில் எங்களால் இயன்றதை கண்டிப்பாய் செய்வோம். மற்றபடி, இதில் இணைவதால் நீங்கள் கீழ்க்கண்டவற்றைப் பெறலாம். இந்த விளக்கங்கள் போதுமானவையாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். இவை தவிர்த்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இதன் கீழ் பதிவு செய்யவும். மேலும் விளக்கம் தருகின்றேன். அன்புடன் பிப்ரவரி 22, 2007 - 4:17am - வழங்கியவர் admin
|

